Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு ஜூலை 01, 2018

உலக நிகழ்வுகள் (International Affairs)

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல் 2018 - நான்கு சின்னங்கள் - சேர்ப்பு 
  • 42nd session of the World Heritage Committee, Manama, Bahrain (24 June to 4 July 2018)
  • பஹ்ரைன் நாட்டின், மனாமா நகரில், 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டம், 2018 ஜூன் 24 முதல் ஜூலை 4 வரை அன்று நடைபெறுகிறது.
  • ஜூன் 30 அன்று நடைபெற்ற கூட்டத்தில், புதிதாக நான்கு பாரம்பரிய சின்னங்கள் (New Inscribed Properties-2018), யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • விக்டோரியன் மற்றும் ஆர்ட் டெக்கோ கட்டடங்கள், மும்பை, இந்தியா 
  • சசானித் தொல்பொருள் நிலவியல், ஃபார்ஸ் பிராந்தியம், ஈரான்
  • 12 கிறிஸ்துவ தேவாலயங்கள் நாகசாகி பிரதேசம், ஜப்பான் 
  • சன்ஸா, மலை புத்தமடாலயங்கள், தென் கொரியா. 
  • நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு - கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் - சேர்ப்பு
    • நிதி மோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பை கட்டுபடுத்துவதற்காக, 1989-ம் ஆண்டு ‘நிதி செயல்பாட்டு நடவடிக்கைக்குழு’ (FATF) என்ற பெயரில் சர்வதேச குழு அமைக்கப்பட்டது.
    • நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழுவின் (FATF) சிறப்பு கூட்டம் 2018 ஜூன் 27-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. 
    • பயங்கரவாதிகள் மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குழுக்கள் நிதி சேகரிப்பதை தடுக்க தவறியதற்காக "பாகிஸ்தான் நாடு கருப்பு பட்டியலில்" சேர்க்கப்பட்டுள்ளது.
    • FATF: Financial Action Task Force
    இந்திய நிகழ்வுகள் (National Affairs)

    2018 உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு: இந்தியா 35-வது இடம் 
    • 2018 ஆண்டின், உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு (Global Real Estate Transparency Index 2018) பட்டியலில், இந்தியா 35-வது இடத்தை பிடித்துள்ளது. 
    2018 இந்திய அழகி - அனுகீர்த்தி வாஸ் - குறிப்புகள் 
    • ‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி மும்பையில் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்றது. 
    • இதில் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் (வயது 19) இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    miss india 2018
    Miss India 2018 Anukreethy Vas
    • 2017 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த "மனுஷி சில்லர்", அனுகீர்த்தி வாஸுக்கு மகுடம் சூட்டினார்.
    • அனுகீர்த்தி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். 
    • உலக அழகிப்போட்டி சீனாவில் 2018 டிசம்பர் மாதம் நடக்க உள்ளது.
    புவனேசுவரத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தால் - ரூ.50 அபராதம் 
    • ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்று புவனேசுவரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    நியமனம்/பதவியேற்பு (Appointments) 

    இந்தியாவின் "முதல் திருநங்கை வழக்கறிஞர் - சத்யஸ்ரீ ஷர்மிளா" 

    • தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை "சத்யஸ்ரீ ஷர்மிளா" இந்தியாவின் "முதல் திருநங்கை வழக்கறிஞர்" என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
    Indias first Trangender Lawyer Sathyasri Sharmila
    Indias first Trangender Lawyer Sathyasri Sharmila
    • சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஜூன் 30 அன்று, சத்யஸ்ரீ ஷர்மிளா (வயது 36) வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையான சத்யஸ்ரீ ஷர்மிளா வழக்கறிஞர் ஆகியுள்ளார்.
    • இராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் சத்தியஸ்ரீ சர்மிளா ஆவார்.
    • தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி "இந்தியாவின் முதல் பெண் சப்-இன்ஸ்பெக்டராக" சென்னையில் ஏற்கனவே பணியில் சேர்ந்துள்ளார். 
    இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரன்ஞால் பாடில் - பதவியேற்பு 
    • இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரன்ஞால் பாடில் (Pranjal Patil) ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
    • தற்போது பிரன்ஞால் பாடில், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு துணை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். 
    மாநாடுகள் (Conferences)

    இந்தியத் தூதரக அதிகாரிகள் மாநாடு 2018 - டெல்லியில் தொடக்கம்
    • பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் மாநாடு டெல்லியில் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை நடைபெறுகிறது. 
    முக்கிய தினங்கள் (Important Days)

    தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1 
    • மருத்துவ வல்லுநரான பாரதரத்னா பி.சி. ராய் அவர்களின் பிறந்தநாள் (ஜூலை 1) “தேசிய மருத்துவர்கள் தினமாக” கொண்டாடப்படுகிறுது. 
    • 1962-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் பி.சி. ராய் அவர்களின் அவர்களுடைய பிறந்த நாளும் மறைந்த நாளுமாகிய ஜூலை 1-ந்தேதி மருத்துவர் நாளாக கொண்டாடப்படுகிறது. 
    • பி.சி.ராய் 14 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
    உலக நகைச்சுவை தினம் - ஜூலை 1 


    விளையாட்டு  நிகழ்வுகள் (Sports Affairs)

    கால்பந்து

    2018 உலக கோப்பை கால்பந்து, இரஷ்யா - குறிப்புகள் 

    வெளியேறும் சுற்று (நாக்-அவுட்) போட்டிகள் 
    • பிரான்ஸ் அணி, வெளியேறும் சுற்றில் 4-3 என்ற க&##3019;ல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா அணியை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.
    • உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.
    இளம் வயதில் இரட்டை கோல் அடித்த "கைலியன் பாப்பே" 
    • 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் குறைந்த வயதில் இரட்டை கோல் அடித்தவர் என்ற சிறப்பை "கைலியன் பாப்பே" பெற்றார்.
    • பிரான்ஸ் அணியின் வீரர் 19 வயதான கைலியன் பாப்பே, அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை கோல் அடித்தார். 
    கபடி

    2018 மாஸ்டர்ஸ் கபடி: இந்தியா ‘சாம்பியன்’
    • 2018 மாஸ்டர்ஸ் கபடி போட்டி, துபாய் நகரில் நடந்தது. ஆறு நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி 44-26 என்ற புள்ளி கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வேன்றது.