Tamil 7th std Reading Page

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

திரு.வி.க

பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி 
பெண்மையில் தாய்மை வைத்த 
பெரியனே போற்றி போற்றி 
வண்மையை உயிரில் வைத்த 
வள்ளலே போற்றி போற்றி 
உண்மையில் இருக்கை வைத்த 
உறவனே போற்றி போற்றி 
- திரு.வி.க

சொற்பொருள்:

  • பண் – இசை
  • வண்மை – கொடைத்தன்மை
  • போற்றி – வாழ்த்துகிறேன்

ஆசிரியர் குறிப்பு:

  • திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதாச்சலனார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
  • பெற்றோர் = விருதாச்சலனார் – சின்னம்மையார்
  • பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  •  இவ்வூர், தற்போது  தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு:

  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார்.
  • மேடைத்தமிழுக்கு இலக்கணம்  வகுத்தார்.
  • இவரின் தமிழ்நடையைப் போற்றித் “தமிழ் தென்றல்” எனச் சிறப்பிக்கபடுகிறார்.

படைப்புகள்:

  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்த்தென்றல்
  • உரிமை வேட்கை
  • முருகன் அல்லது அழகு முதலியன

காலம்:

  • 26.08.1883 – 17.09.1953

நூல் குறிப்பு:

  • வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.க இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் “போற்றி” என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
  • “தெய்வ நிச்சயம்” முதலாக “போற்றி” ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

பணி:

  • இவர் சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

திருக்குறள்

சொற்பொருள்:

  • புரை – குற்றம்
  • பயக்கும் – தரும்
  • சுடும் – வருத்தும்
  • அன்ன – அவை போல்வன
  • எய்யாமை – வருந்தாமல்
  • அகம் – உள்ளம்

ஆசிரியர் குறிப்பு:

  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

சிறப்பு பெயர்கள்:

  • நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்

நூல் குறிப்பு:

  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • இதில், நூற்று முப்பது மூன்று அதிகாரங்கள் உள்ளன.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

செம்மொழித் தமிழ்

உலக மொழிகள்:

  • உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
  • “எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார்.

செம்மொழிகள்:

  • திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.
  • கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.

திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்:

  • டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்.

தமிழின் தொன்மை:

  • உலகில் பழமையான நிலபகுதியான “குமரிக்கண்டத்தில்” தமிழ் தோன்றியதாக “தண்டியலங்கார” மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
“ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”

தமிழின் மேன்மை:

  • தமிழ் மெல்லோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.

தமிழ் மொழியின் தாய்மை:

  • பெற்றோரை குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் குமரிநாட்டுத்(நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

தமிழ் மொழியின் தூய்மை:

  • “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறினார் கால்டுவெல்.

தமிழ் மொழியின் செம்மை:

  • மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், “செந்தமிழ்” எனப்பட்டது.

தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” - தொல்காப்பியம்
  • தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.
  • ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.
  • வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.
  • தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.

தமிழ் மொழியின் இலக்கண நிறைவு:

  • எல்லா மொழிகளும் “எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்” கூறுகிறது. அதனையும் “அகம், புறம்” என இருவகையாகப் பகுத்துள்ளது.

தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:

  • “கலிப்பா” முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:

  • புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க “உவமை, உருவகம்” முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்தி பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

ஊரும் பேரும்

குறிஞ்சி நில ஊர்கள்:

மலை, கரடு, பாறை, குன்று, குறிச்சி, கிரி
  • மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
  • ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை
  • மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று
  • குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை
  • குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
  • மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
  • குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நில ஊர்களே. குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.

முல்லை நில ஊர்கள்:

காடு, புரம், பட்டி, பாடி
  • அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.
  • காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் “பட்டி, பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)

மருத நில ஊர்கள்:

ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி
  • நிலவளமும், நீர்வளமும் பயிர்வலமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.
  • ஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.
  • மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர்.(கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
  • குளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களில் இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).

நெய்தல் நில ஊர்கள்:

பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
  • கடற்கரை பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
  • பரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
  • மீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.

திசையும் ஊர்களும்:

ஊர், பழஞ்சி
  • நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.

நாயக்க மன்னர்கள்:

  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
  • அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)

ஊர் பெயர்கள் மாறுதல்:

  • கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.
  • கோவன்புத்தூர் என்னும் பெயர் “கோயமுத்தூர்” ஆகி, இன்று “கோவை” ஆக மருவியுள்ளது.

புறநானூறு

நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே;
- மோசிகீரனார்

சொற்பொருள்:

  • அறிகை – அறிதல் வேண்டும்
  • தானை – படை
  • கடனே – கடமை

ஆசிரியர் குறிப்பு:

  • மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர்.
  • “கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர்.
  • உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
  • இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

நூல் குறிப்பு:


  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
  • புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.