Tamil 7th std Reading pages-2
முதுமொழிக்காஞ்சி
சொற்பொருள்:
- ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
- காதல் – அன்பு, விருப்பம்
- மேதை – அறிவு நுட்பம்
- வண்மை – ஈகை, கொடை
- பிணி – நோய்
- மெய் – உடம்பு
ஆசிரியர் குறிப்பு:
- பெயர்: மதுரை கூடலூர் கிழார்
- பிறந்த ஊர்: கூடலூர்
- சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
- காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு:
- முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலை “அறவுரைக்கோவை” எனவும் கூறுவர்.
- இந்நூலில் பத்து அதிகாரங்களும், அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு பாடல்களும் உள்ளன.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
உ.வே.சா:
- “யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கபடுபவர்.
- உ.வே.சா.இன் ஆசிரியரே “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்”.
இளமையும் கல்வியும்:
- மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சி மாவட்டம் “எண்ணெய்க்கிராமத்தில்” பிறந்தார்.
- பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார்.
- தமது தந்தையிடமே கல்வி கற்றார்.
கல்வியே வாழ்க்கை:
- மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் “திரிசிரபுரத்தில்”(திருச்சி) வாழ்ந்தார்.
- அவரை “திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்” என்றே அழைப்பர்.
- அவரிடம் “கல்வி கற்க வேண்டும்” என்ற வேட்கை தணியாததாக இருந்தது.
- “கல்வியே வாழ்கை” என்று இருந்தவர்.
தமிழ் கற்பித்தல்:
- மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.
- குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
- இவர் சில காலம் திருவாவடுதுறையில் ஆதின வித்துவானாக பணியாற்றினார்.
- திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான் உ.வே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார்.
தமிழ்த் தொண்டு:
- இவர், 80கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
- கோவில்களை பற்றிய “தலபுராணங்கள்” பல இயற்றியுள்ளார்.
பண்பு நலன்கள்:
- மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த புலமையும் தளராத நாவன்மையும் படைத்தவர்.
- நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
- ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர், தம்முடைய குடும்பத் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக்கொடுத்தார்.
- அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை “நீற்றுக்காரத் தெரு” எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார் “இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு” என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.(வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு)
நோய்க்கு மருந்து இலக்கியம்:
- தனக்கு உடல்நிலை சரியில்லாத பொது சற்று ஓய்வெடுத்தல் நல்லதென்று மற்றவர் கூற, “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறினார்.
மறைவு:
- 01.02.1976 அன்று உலகவாழ்வை நீத்தார்.
கோவூர்கிழார்:
இளமைகாலம்:
- பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள “கோவூர்”.
- மரபு: வேளாளர் மரபு.
பாடியவை:
- நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன.
அவைக்களத் தலைவர்:
- நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை “அவைக்களத் தலைவர்” ஆகினான்.
போரைத் தவிர்த்த புலவர்:
- சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது.
- நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான்.
- கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் “நீ வீரனாக இருந்தால் போரிடு; அல்லது கோட்டையை ஒப்படைத்துவிடு; இரண்டில் எதையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது” என்றர்.
- கோவூர்கிழாரின் அறிவுரையை கேட்ட நெடுங்கிள்ளி ஆவூர்க்கோட்டையை விட்டு உறையூர் கோட்டைக்குசென்று கதவடைத்து கொண்டான்.
- கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம், “நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்தசேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய அத்திமாலை அணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே’ என்றார்.
- ஆதலால் “போரை ஒழிமின்” என்றார்.
மலையமான் பிள்ளைகளை காத்தல்:
- குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன்.
- கிள்ளிவளவனுக்கும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரிக்கும் பெரும் பகை இருந்தது. கிள்ளிவளவன் காரியின் இரு பிள்ளைகளையும் கவர்ந்து வந்து யானை காலில் இடறிக் கொள்ள முடிவு செய்தான்.
- கோவூர்கிழார் கிள்ளிவலவனிடம் சோழ முன்னோர்கள் பெருமை எடுத்துக்கூறி காரியின் இரு பிள்ளைகளையும் மீட்டார்.
சிறை மீட்ட செம்மல்:
- நலங்கிள்ளியை பாடி பரிசு பெற்ற இளந்தரையனார், நெடுங்கிள்ளியிடம் சென்று பாடினார்.
- இளந்தத்தனாரை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று கருதிய நெடுங்கிள்ளி அவரை சிறையிலிட்டான்.
- கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் இயல்புகளை எடுத்துக்கூறி அவரை மீட்டார்.
திரிகடுகம்
இல்லர்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.
- நல்லாதனார்
சொற்பொருள்:
- பால்பற்றி – ஒருபக்கச் சார்பு
- சாயினும் – அழியினும்
- தூஉயம் – தூய்மை உடையோர்
- ஈயும் – அளிக்கும்
- நெறி – வழி
- மாந்தர் – மக்கள்
- வனப்பு – அழகு
- தூறு – புதர்
- வித்து – விதை
ஆசிரியர் குறிப்பு:
- திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
- இவர் திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.
- இவரைச், “செறுஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நூல் குறிப்பு:
- திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நூறு வெண்பாக்களை கொண்டது.
- “சுக்கு, மிளகு, திப்பிலி” ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு “திரிகடுகம்” எனப் பெயர்.
- அதுபோல், திரிகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.
கணித மேதை இராமனுஜம்
- பிறப்பு: 22.12.1887
- ஊர்: ஈரோடு
- பெற்றோர்: ஸ்ரீநிவாசன் – கோமளம்
- இவர் பிறந்து மூன்று ஆண்டு வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
- தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.
கும்பகோணம்:
- இராமானுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் “கும்பகோணம்” வந்ததால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.
பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:
- ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் “பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.
கார்:
- 1880இல் இலண்டன் நகரில் “கார்” என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
எழுத்தர் பணி:
- தந்தை ஸ்ரீனிவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் “எழுத்தர்” பணி கிடைத்தது.
பெர்னௌலிஸ் எண்கள்:
- தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்குச் சென்னைத் துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். “பெர்னௌலிஸ் எண்கள்” எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.
ஹார்டி & ஈ.எச்.நெவில்:
- தமது கண்டுபிடிப்புகளை விரிவாக எழுதி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் “ஹார்டி” என்பவருக்கு கடிதமாக அனுபினார். ஹார்டி, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் இணைந்துள்ள திரிநிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச்.நெவில் மூலம், அவரை இங்கிலாந்திற்கு வரவழைத்தார்.
உதவித்தொகை:
- இராமனுஜம், 18.04.1914 அன்று திரிநிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு “60” பவுண்டு உதவித்தொகையாக வழங்கப்பட்டது. “ஹார்டி, லிட்டில்வுட்” இருவரும் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்.
ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்:
- ஹார்டி, “ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தார்.
எஃப்.ஆர்.ஸ் பட்டம்:
- 1918ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு எஃப்.ஆர்.ஸ் பட்டம் வழங்கப்பட்டது.
ஹார்டியின் பரிந்துரை:
- ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைகழகம் அவருக்கு 250 பவுண்டு தொகையை ஐந்து ஆண்டுக்குக் கொடுக்க முன்வந்தது. இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
இராமானுஜன் எண்:
- 1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.
மறைவு:
- 26.04.1920 அன்று தன்னுடைய 33ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
பொதுவான குறிப்புகள்:
- லிட்டில்வுட், இராமானுஜனை பற்றி “ஆய்வாலராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி” என்றார்.(ஜாகோபி என்பவர் ஜெர்மனியை சேர்ந்த கணித மேதை, ஆய்லர் என்பவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணையற்ற கணித மேதை).
- இந்திரா காந்தி அவர்கள் இராமானுஜனை பற்றி, “கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிபிடத்தக்க ஓர் இடத்தைப் பிற்ற பிறவிக் கணிதமேதை” என்றார்.
- பேராசிரியர் ஈ.டி.பெல் என்பவர்,”இராமானுஜன் சாதாரண மனிதரல்லர். அவர் இறைவன் தந்த பரிசு” என்றார்.
- இலண்டன் ஆளுநர் லார்ட்மென்ட் லண்ட் என்பவர் “இராமானுஜன் முதல் தரமான கணித மேதை” என்றார்.
- பேராசிரியர் சூலியன் கக்சுலி என்பவர், “ இராமானுஜன் தான் இந்த 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை” என்றார்.
- 22.12.1962 அன்று அவரது 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடுவண் அரசு பதினைந்து காசு அஞ்சல்தலையை 2500000 வெளியிட்டது. வெளியிட்ட அன்றே அத்தனை அஞ்சல்தலைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
- 1971ஆம் ஆண்டு, பேராசிரியர் இராமனுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது.
- 03.10.1972 அன்று அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
- அவர் பணியாற்றிய சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு “சீனிவாச இராமானுஜம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.
- அமெரிக்காவின் விசுகன்சீன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் “ரிச்சர்டும் ஆஸ்கேயும்” இணைந்து 1984இல் அவரது மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழங்கினர்.
- கணித குறிப்புகள் அடங்கிய 3 குறிப்பேடுகளையும் ஆராய்சிக் கட்டுரைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவரது குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை 1957ஆம் ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டது.