tamil-7th std Reading pages-5

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

திருக்குறள்

சொற்பொருள்:

  • கசடு – குற்றம்
  • நிற்க – கற்றவாறு நடக்க
  • உவப்ப – மகிழ
  • தலைக்கூடி – ஒன்று சேர்ந்து
  • ஏக்கற்று – கவலைப்பட்டு
  • கடையர் – தாழ்ந்தவர்
  • மாந்தர் – மக்கள்
  • ஏமாப்பு – பாதுகாப்பு
  • காமுறுவர் – விரும்புவர்
  • மாடு – செல்வம்

முக்கூடற்பள்ளு

சொற்பொருள்:

  • தத்தும் புனல் – அலையெறியும் நீரும்
  • கலிப்புவேளை – கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
  • மதோன்மத்தர் – சிவபெருமான்

ஆசிரியர் குறிப்பு:

  • இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
  • ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் “என்னயினாப் புலவர்” எனச் சிலர் கூறுவர்.
  • சந்த நயம் மிக்க நூல்.
  • திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

நூல் குறிப்பு:

  • நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை பற்றியது.
  • திருநெல்வேலியில் உள்ள “தன்பொருணை, சிற்றாறு, கோதண்டராம ஆறு” ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இடம் “முக்கூடல்” ஆகும்.
  • முக்கூடலை “ஆசூர் வடகரை நாடு” என்றும் அழைப்பர்.
  • இதன் தென்பகுதியில் உள்ளது “சீவல மங்கைத் தென்கரை நாடு”.
  • தென்கரை நாட்டில் “மருதசீர்” வீற்றிருக்கும் ஊர் மருதூர்.
  • முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி.
  • இருவரையும் மணந்து திண்டாடும் பள்ளனின், வாழ்க்கை வளத்தை கூறுகிறது இந்நூல்.

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை கூறுகள்= 6:

  • உழுதல், விதைத்தல், தொழு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் மற்றும் காதல்.

நிலத்தை உழுதல்:

  • விதைக்கும் முன் நிலத்தை பண்பட உழுதல் வேண்டும்.
  • ஒரு பலம் எடையுள்ள மண்ணைக் கால் பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதிட வேண்டும்.

வள்ளுவர் நிலத்தை உழுவதை பற்றி,

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”

நன்செய், புன்செய்:

  • நீர்வளம் மிக்கது நன்செய். இதில் நெல், கரும்பு, வாழை பயிரிடுவர்.
  • நீர்வளம் குறைந்த பகுதி புன்செய். இதனை “வானம் பார்த்த பூமி” என்பர். இனிலம் பருவமழையை நம்பியே இருக்கும். இதில் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை போன்றவை விளையும்.

நல்ல விதையை தேர்ந்தெடுத்தல்:

  • நெல்விதையை முதலில் நாற்றங்காலில் விதைத்து 21 முதல் 25 நாட்கள் வரை வளர்த்து பின்னர், அதை பறித்து பண்படுத்தப்பட்ட சேற்று நிலத்தில் நடுவர்.
  • பின்னர் முறையாக நீர் பாய்ச்சி களை எடுக்க வேண்டும்.

பயிர் இடையே இடைவெளி:

நெல்லுக்கு – நண்டோட
கரும்புக்கு – ஏரோட
வாழைக்கு – வண்டியோட
தென்னைக்கு – தேரோட

இயற்கை உரம்:

இலைதழை+ஆட்டுஎரு+மாட்டுஎரு+கடலைப்பிண்ணாக்கு+வெப்பம்பிண்ணாக்கு+இழுவைபிண்ணாக்கு

அங்கக வேளாண்மை:

  • இயற்கை வேளாண்மையை “அங்கக வேளாண்மை” என்றும் அழைப்பர்.

பஞ்ச கவ்வியம்:

கோமயம்+சாணம்+பால்+தயிர்+நெய்

தழை உரம்:

சணப்பு+அவுரி+கொளுஞ்சி+தக்கைப்பூண்டு

களையெடுத்தல்:

  • களையெடுத்தல் பற்றி திருவள்ளுவர்,
“ ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

தனிப்பாடல்

“இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி
என்கொனர்ந்தாய் பாணாநீ என்றால் பாணி
வம்பதாம்க ளபமென்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்
பகடென்றான் உழுமென்றாள் பழனத் தன்னைக்
கம்பமா என்றேன்நற் களியாம் என்றாள்
கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே!”
- அந்தக்கவி வீரராகவர்

சொற்பொருள்:

  • களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா – யானை
  • களபம் – சந்தனம்
  • மாதங்கம் – பொன்
  • வேழம் – கரும்பு
  • பகடு – எருது
  • கம்பமா – கம்பு மாவு

ஆசிரியர் குறிப்பு:

  • பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்
  • வாழ்ந்த ஊர்: களத்தூர்
  • தந்தை: வடுகநாதர்
  • சிறப்பு: சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்.
  • காலம்: 17ம் நூற்றாண்டு
  • நூல்கள்: சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றப் புராணம்.

நூல் குறிப்பு:

  • இப்பாடல், “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த  புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
  • இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

தமிழகத்தின் அன்னிபெசன்ட்

அறிஞர் அண்ணா:

  • அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர்.

இளமை காலம்:

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார்.
  • தேவதாசி குடியில் பிறந்தார்.
  • தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர்.
  • வறுமையின் காரணமாக அம்மையாரின் தந்தை கிருஷ்ணசுவாமி மகளையும், மனைவியையும் விட்டு சென்றார்.
  • அம்மையாரின் தாயார் இவருக்கு ஐந்து வயதாகும் பொது பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் விற்றுவிட்டார்.

சுயம்பு:

  • தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
  • சுயம்பு, அம்மையாரின் அணைத்து போராட்டங்களுக்கும் துணைப் புரிந்தார்.

முதல் போராட்டம்:

  • 1917இல் தனது முதல் போராட்டத்தை மயிலாடுதுறையில் தொடங்கினார்.
  • அதேவதாசி முறையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

காந்தி மீது பற்று:

  • அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
  • ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல் தனது கருத்துக்களை “கரும்பலகையில்” எழுதி வெளிப்படித்தினார்.

மூவர்ணக் கொடி ஆடை:

  • காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.
  • அம்மையார் மூவர்ணக் கோடியை ஆடையாக உடுத்தினார்.

குடிசையில் வாழ்தல்:

  • காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
  • அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் “காதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதி இருந்தார்.

மொழிப்போர் பேரணி:

  • 1938ஆம் ஆண்டு நடந்த மொழிப்போர் பேரணியில் உறையூர்(திருச்சி) முதல் சென்னை வரை 42 நாள், 577 மைல் நடைபயணம் மேற்கொண்டார்.
  • இன்நடைப்பயணத்தின் பொது 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.
  • அப்பேரணியில் நடந்து வந்த ஒரே பெண் அம்மையார் மட்டுமே.

விடிவெள்ளி:

  • அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
  • பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் ஈடுபட்டுத் தனது 80 வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

திருமண உதவித் திட்டம்:

  • 1989ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரால் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

அம்மானை

ஆசிரியர் குறிப்பு:

  • திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை எழுதியவர் சுவாமிநாத தேசிகர்.
  • இவரை ஈசான தேசிகர் என்றும் அழைப்பர்.
  • தந்தை = தாண்டவமூர்த்தி
  • கல்வி கற்றது = மயிலேறும் பெருமாள்
  • இவர் திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தார்.

நூல் குறிப்பு:


  • திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • கலம்பகம் = கலம் + பகம் (களம் = 12, பகம் = 6, கலம்பகம் = 18)
  • கலம்பகம் 18 உருபுகளை கொண்டது.