Tamil Reading 10th Std Page-2

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

கடவுள் வாழ்த்து


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே
- மாணிக்கவாசகர்

சொற்பொருள்:

  • மெய் –உடல்
  • விதிவிதிர்த்து – உடல் சிலிர்த்து
  • விரை – மணம்
  • நெகிழ – தளர
  • ததும்பி – பெருகி
  • கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
  • சயசய – வெல்க வெல்க

இலக்கணக்குறிப்பு:

  • விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று

ஆசிரியர் குறிப்பு:

  • சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
  • திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
  • இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.
  • திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
  • இவரை “அலுத்து அடியடைந்த அன்பர்” என்பர்.
  • திருவாசகமும் திருகொவையாரும் இவர் அருளியவை.
  • இவர் எழுப்பிய கோவில், தற்போது “ஆவுடையார் கோவில்” என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.

நூல் குறிப்பு:

  • சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
  • திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
  • திருவாசகத்தை சிறப்பிக்க, “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் தொடர் வழங்கலாயிற்று.
  • திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

ஜி.யு.போப்:

  • உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.

திருக்குறள்

சொற்பொருள்:

  • விழுப்பம் – சிறப்பு
  • ஓம்பப்படும் – காத்தல் வேண்டும்
  • பரிந்து – விரும்பி
  • தேரினும் – ஆராய்ந்து பார்த்தாலும்
  • குடிமை – உயர்குடி
  • இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
  • அழுக்காறு – பொறாமை
  • ஆகம் – செல்வம்
  • ஏதம் – குற்றம்
  • எய்துவர் – அடைவர்
  • இடும்பை – துன்பம்
  • வித்து – விதை
  • ஒல்லாவே – இயலாவே
  • ஓட்ட – பொருந்த
  • ஒழுகல் – நடத்தல்
  • கூகை – கோட்டான்
  • இகல் – பகை
  • திரு – செல்வம்
  • தீராமை – நீங்காமை
  • பொருதகர் – ஆட்டுக்கடா
  • சேருவர் – பகைவர்
  • சுமக்க – பனிக
  • கிழக்காந்தலை – தலைகீழ்(மாற்றம்)
  • எய்தற்கு – கிடைத்தற்கு
  • கூம்பும் – வாய்ப்பற்ற

இலக்கணக்குறிப்பு:

  • ஒழுக்கம் – தொழிற்பெயர்
  • காக்க – வியங்கோள் வினைமுற்று
  • பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
  • இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
  • கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
  • உடையான் – வினையாலணையும் பெயர்
  • உரவோர் – வினையாலணையும் பெயர்
  • எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நல்லொழுக்கம் – பண்புத்தொகை
  • சொலல் – தொழிற்பெயர்
  • அருவினை – பண்புத்தொகை
  • அறிந்து – வினையெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்பர்.
  • தமிழக அரசு தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.

நூல் குறிப்பு:

  • திரு + குறள் = திருக்குறள்
  • உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
  • “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம்” என்றும், “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” என்றும் பாவேந்தர் போற்றுகின்றார்.
  • மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

ஏலாதி

சொற்பொருள்:

  • வணங்கி – பணிந்து
  • மாண்டார் – மாண்புடைய சான்றோர்
  • நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்
  • நோக்கி – ஆராய்ந்து

இலக்கணக்குறிப்பு:

  • நூல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • பலியில்லா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்:

  • வழியொழுகி = வழி + ஒழுகி

ஆசிரியர் குறிப்பு:

  • ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு.
  • இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

நூல் குறிப்பு:

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
  • ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.

உயர்தனிச் செம்மொழி

பாவலரேறு பெருஞ்சித்திரனார்:

  • “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
    வேரூன்றிய மால்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.

செம்மொழியின் இலக்கணம்:

  • “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

பாவாணர் கூற்று:

  • “தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.

முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்:

  • தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.

தொன்மை:

  • முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.
  • உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருத்து “என்றுமுள தென்தமிழ்” என்பார் கம்பர்.

பிறமொழித் தாக்கமின்மை:

  • பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.
  • அனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.

தாய்மை:

  • தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.
  • தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.
  • 1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.

தனித்தன்மை:

  • இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
  • தமிழர் அகம், புரம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
  • திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:

  • உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
  • இவற்றின் மொத்த அடிகள் = 26350.
  • அக்காலத்தே இவ்வளவிற்கு “விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை” என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த “கமில்சுவலபில்” என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிபு.
  • மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.
  • சங்க இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.
  • “தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்கச் விருப்பதை உண்டாக்குவது” என்பார் கெல்லட்.
  • நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
  • தொல்காபிய்யம் மூன்று இலக்கணங்களை கூறியுள்ளார். அவரின் ஆசிரியர் அகத்தியர் ஐந்து இலக்கணங்களை கூறியுள்ளார்.

பொதுமைப் பண்பு:

  • தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.
  • செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.

நடுவுநிலைமை:

  • சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.
  • இயற்கையோடு இணைந்தவை.
  • மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.

பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:

  • சங்கப் படைப்புகள், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்திகிறது.

உயர் சிந்தனை:

  • “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என உலக மக்களை ஒன்றினைந்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.
  • “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.

கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:

  • தமிழ்ச்சான்றோர் மொழியை, “இயல், இசை, நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
  • எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.

மொழிக் கோட்பாடு:

  • “இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ.
  • ஒருமொழிக்கு 35 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.

செம்மொழி:

  • இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் “செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.
  • நடுவண் அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

பரிதிமாற் கலைஞர்

பிறப்பு:

  • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
  • மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
  • பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.

கல்வி:

  • தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
  • மகாவித்துவான் சபபதியாரிடம் தமிழ் பயின்றார்.
  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
  • இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இயற்றமிழ் மாணவர்:

  • தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை “இயற்றமிழ் மாணவர்” எனப் பெயரிட்டு அழைத்தார்.

மதுரைச் தமிழ்ச்சங்கம்:

  • மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
  • பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

திராவிட சாஸ்திரி:

  • யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.

தனிப்பாசுரத்தொகை:

  • பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
  • இந்நூலினை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கம்பராமாயண உவமை:

  • பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த பொது நடந்த நிகழ்வு.
  • கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய “ஆர்தரின் இறுதி” வ்ன்னும் நூலில் இருந்து ஒரு பாடலி சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
  • தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.

தமிழின் சிறப்பை உணர்த்தல்:

  • வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.
  • தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

தமிழ்த்தொண்டு:

  • பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
  • ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.

படைப்புகள்:

  • “ரூபாவாதி, கலாவதி” முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
  • அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
  • “சித்திரக்கவி” என்னும் நூலைப் படைத்தார்.
  • குமரகுருபரரின் “நீதிநெறிவிளக்கம்” நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

இதழ்ப் பணி:

  • மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த :ஞானபோதினி” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
  • மும்மொழிப் புலமை உடையவர்.
  • மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் “செந்தமிழ்” இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.
  • தமிழ்மொழி “உயர்தனிச் செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டினார்.

மறைவு:


  • தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் இயற்கை எய்தினார்.
  • நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.