சிலப்பதிகாரம்
சொற்பொருள்:
- கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்
- தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
- பலியோடு படரா – மறநெறியில் செல்லாத
- பசுந்துணி – பசிய துண்டம்
- தடக்கை – நீண்ட கைகள்
- அறுவற்கு இளைய நங்கை – பிடாரி
- கானகம் – காடு
- உகந்த – விரும்பிய
- தாருகன் – அரக்கன்
- செற்றம் – கறுவு
- தேரா – ஆராயாத
- புள் – பறவை
- புன்கண் – துன்பம்
- ஆழி – தேர்ச்சக்கரம்
- படரா – செல்லாத
- வாய்முதல் – உதடு
இலக்கணக்குறிப்பு:
- மடக்கொடி – அன்மொழித்தொகை
- தேரா மன்னா, ஏகாச் சிறப்பின் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தடக்கை – உரிச்சொற்றொடர்
- புன்கண், பெரும்பெயர், அரும்பெறல் – பண்புத்தொகை
- உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் – வினைத்தொகை
- அவ்வூர் – சேய்மைச்சுட்டு
- வாழ்தல் – தொழிற்பெயர்
- என்கால் என்பெயர், நின்னகர், என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை
- புகுந்து – வினையெச்சம்
- தாழ்ந்த, தளர்ந்த – பெயரெச்சம்
- வருக, தருக, கொடுக – வியங்கோள் வினைமுற்று
பிரித்தறிதல்:
- எள்ளறு = எள் + அறு
- புள்ளுறு = புள் + உறு
- அரும்பெறல் = அருமை + பெறல்
- பெரும்பெயர் = பெருமை + பெயர்
- அவ்வூர் = அ + ஊர்
- பெருங்குடி = பெருமை + குடி
- புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
- பெண்ணணங்கு = பெண் + அணங்கு
- நற்றிறம் = நன்மை + திறம்
- காற்சிலம்பு = கால் + சிலம்பு
- செங்கோல் = செம்மை + கோல்
ஆசிரியர் குறிப்பு;
- இளங்கோவடிகள் சேரமரபினர்.
- பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.
- தமையன் = சேரன் செங்குட்டுவன்
- இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.
- சமய வேறுபாடற்ற துறவி.
- பாரதியார் இவரை, “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றார்.
நூல் குறிப்பு:
- சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
- கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
- இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
- புகார்க்காண்டம் = 10 காதை
- மதுரைக்காண்டம் = 13 காதை
- வஞ்சிக்காண்டம் = 7 காதை
- இக்காப்பியம் “உரையிடை இட்ட பாட்டைச்செய்யுள்” என அழைக்கப்படுகிறது.
- முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
- “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்.
- வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
- “இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
நூலெழுந்த வரலாறு:
- சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
- அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் சாத்தனார், ‘அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
- அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” ஏறனு கூறினார்.
- சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுக” என்றார்.
நூற்கூறும் உண்மை:
- அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
- ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
தமிழ் வளர்ச்சி
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். - பாரதிதாசன் |
சொற்பொருள்:
- தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
- சுவடி – நூல்
- எளிமை – வறுமை
- நாணிடவும் – வெட்கப்படவும்
- தகத்தகாய – ஒளிமிகுந்த
- சாய்க்காமை – அழிக்காமை
- தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்
இலக்கணக்குறிப்பு;
- புதிது புதிது, சொல்லிச் சொல்லி – அடுக்குத்தொடர்
- செந்தமிழ் – பண்புத்தொகை
- சலசல – இரட்டைக்கிளவி
பிரித்தறிதல்:
- வெளியுலகில் = வெளி + உலகில்
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- ஊரறியும் = ஊர் + அறியும்
- எவ்விடம் = எ = இடம்
ஆசிரியர் குறிப்பு;
- பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
- இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார்.
- தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
- இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார்.
- குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள்.
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
பாவேந்தரின் புகழ்மொழி:
தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் |
எனப் பாவேந்தர் பெரியாரை புகழ்கிறார்.
பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
- ஒன்று, அடிப்படைத் தேவைகள் = பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
- மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை = குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு
பெண்கல்வி:
- பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
- “அங்கள் பங்களைப் படிக்கச் வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவு அட்டர சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.
பெண்ணுரிமை:
- “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று சிந்தித்தவர் பெரியார்.
- பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மநிகலாக விளங்க வேண்டும்” என்று வலியுறித்தினார்.
சொத்துரிமை:
- பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு காரணம் என்று உணர்ந்தார்.
- அதற்காகக் அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.
அரசுப்பணி:
- அரசாங்கத்தின் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் பொது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றார்.
குழந்தைமணம்:
- குழந்தை திருமணம் பற்றி “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.
மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்:
- சமுதாயத்தில் முறையான அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான், இம்மாதிரியான தீமைகள் ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாற வேண்டும்.
- தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்றார்.
- கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றார்.
ஒழுக்கம்:
- ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்றார்.
- பெரியார், பெண்களே சமூகத்தின் கண்கள் என்று கருதியவர்.
கம்பராமாயணம்
சொற்பொருள்:
- ஆயகாலை – அந்த நேரத்தில்
- அம்பி – படகு
- நாயகன் – தலைவன்
- நாமம் – பெயர்
- கல் – மலை
- திரள் – திரட்சி
- துடி – பறை
- அல் – இருள்
- சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
- திரை – அலை
- மருங்கு – பக்கம்
- நாவாய் – படகு
- நெடியவன் – இராமன்
- இறை – தலைவன்
- பண்ணவன் – இலக்குவன்
- பரிவு – இரக்கம்
- குஞ்சி – தலைமுடி
- மேனி – உடல்
- மாதவர் – முனிவர்
- முறுவல் – புன்னகை
- விளம்பல் – கூறுதல்
- கார்குலாம் – மேகக்கூட்டம்
- பார்குலாம் – உலகம் முழுவதும்
- குரிசில் – தலைவன்
- இருத்தி – இருப்பாயாக
- நயனம் – கண்கள்
- இந்து – நிலவு
- நுதல் – நெற்றி
- கடிது – விரைவாக
- முரிதிரை – மடங்கிவிழும் அலை
- அமலன் – குற்றமற்றவன்
- இளவல் – தம்பி
இலக்கணக்குறிப்பு:
- போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- கல்திரள்தோள் – உவமைத்தொகை
- நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
- இருந்தவள்ளல் – பெயரெச்சம்
- வந்துஎய்தினான் – வினையெச்சம்
- கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- குறுகி, சேவிக்க – வினையெச்சம்
- கழல் – தானியாகுபெயர்
- அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
- வருக – வியங்கோள் வினைமுற்று
- பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
- இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
- தேனும் மீனும் – எண்ணும்மை
- மாதவர் – உரிச்சொற்றொடர்
- அமைந்த காதல் – பெயரெச்சம்
- தழீஇய – சொல்லிசை அளபெடை
- கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
- தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
- இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
- நெடுநாவாய் – பண்புத்தொகை
- தாமரை நயனம் – உவமைத்தொகை
- நனிகடிது – உரிச்சொற்றொடர்
- நெடுநீர் – பண்புத்தொகை
- என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- நன்னுதல் – பண்புத்தொகை
- நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை
ஆசிரியர் குறிப்பு:
- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
- இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
- கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
- கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
- இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
- காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
- தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
- கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
- சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நூல்குறிப்பு:
- வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
- கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
- கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
- கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
- காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
- இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்கு கதி” என்பர்.
- குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்.
அண்ணல் அம்பேத்கர்
பிறப்பு:
- மராட்டிய மாநிலத்தில் கொண்கன் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர்பிறந்தார்.
- பெற்றோர் = இராம்ஜி சக்பால், பீமாபாய்.
- செல்வம் நிறைந்த குடும்பத்தில் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
- அவரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
- தந்தை அவருக்கு சூடிய பெயர் பீம்.
கல்வி:
- தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை தம் பெயராக ஆக்கிக் கொண்டார்.
- அம்பேத்கர் 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.
- பரோடா மன்னர் பொருளுதவியுடன் 1912இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915இல் முதுகலைப் பட்டமும் 1916இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
- மும்பையில் சிறிதுகாலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்.
- மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
- அம்பேத்கர் இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
முதல் உரிமைப்போர்:
- 1927ஆம் ஆண்டு மார்ச்சுத் தங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார்.
விடுதலை உணர்வும் வட்டமேசை மாநாடும்:
- இங்கிலாந்து சொல்வதற்கு எல்லாம் இந்தியா தலை அசைக்கும் என்பது தவறு; இந்நிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் என்றார்.
- 1930ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
- அம்மாநாட்டில், “அறைவயித்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று தனது கருத்தை தொடங்கினார்.
- வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் வந்தால் ஒழிய, எங்கள் குறைகள் நீங்கா என மொழிந்தார்.
சட்ட மாமேதை:
- விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்று நேரு விரும்பினார்.
- அம்பேத்கர் சட்ட அமைச்சரானார்.
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்க எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- பலரும் செயல்படாமல் விலகினார். இறுதியில் அம்பேத்கர் ஒருவரே அந்த ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார்.
- 1950ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26ஆம் நாள் இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர்:
- “ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம். உழைப்பும் கல்வியும் அட்டர செல்வம் மிருகத்தனம்” என்றார்.
- கற்பித்தல், அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்புவெருப்பட்ற்ற முறையில் கற்பித்தல் நிகழ வேண்டும் என்றார்.
- 1946ஆம் ஆண்டு, மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்தார்.
- மும்பையில் அவரின் அறிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் உருவாக்கப்பட்டது.
பொருளாதார வல்லுநர்:
- இவர் “இந்தியாவின் தேசிய பங்குவீதம்” என்ற நூலை எழுதினார்.
- தொழில் துறையில் பொருளாதார வளர்ச்சிப் பெற புதுப்புதுக் கருத்துக்களைக் வெளியிட்டார்.
இந்திய வரலாற்றின் புதிய பக்கங்கள்:
- இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.
- சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று. குறிப்பிட்ட சில சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்றார்.
- சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றார்.
- இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது.இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கிறது. அது மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துவிட்டது. இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும்” என்றார்.
அம்பேத்கரின் இலட்சிய சமூகம்:
- அவர், “ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.
- “சனநாயகத்தின் மறுப்பெயர் தான் சகோதரத்துவம்; சுதந்திரம் என்பது சுயோச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று, சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தார்.
பெரியார் போற்றிய பெருந்தகை;
- “அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்; பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் காணமுடியாது” என்று பெரியார் அவரை பாராட்டினார்.
நேரு புகழுதல்:
- “பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சேரும்” என்று நேரு அவரைப் புகழ்ந்தார்.
இராஜேந்திர பிரசாத் புகழ்தல்:
- “அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தனியனாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்” என்று இராஜேந்திர பிரசாத் பாராட்டினார்.
மறைவு:
- நாட்டிற்காக அயராது உழைத்த அண்ணல் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.
பாரத ரத்னா விருது:
- இந்திய அரசு, பாரத ரத்னா(இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு 1990ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
நற்றிணை
சொற்பொருள்:
- அரி – நெற்கதிர்
- சேறு – வயல்
- யாணர் – புதுவருவாய்
- வட்டி – பனையோலைப் பெட்டி
- நெடிய மொழிதல் – அரசரிடம் சிறப்புப் பெறுதல்.
இலக்கணக்குறிப்பு:
- சென்ற வட்டி – பெயரெச்சம்
- செய்வினை – வினைத்தொகை
- புன்கண், மென்கண் – பண்புத்தொகை
- ஊர – விளித்தொடர்
பிரித்தறிதல்:
- அங்கண் = அம் + கண்
- பற்பல = பல + பல
- புன்கண் = புன்மை + கண்
- மென்கண் = மேன்மை + கண்
ஆசிரியர் குறிப்பு:
- மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
- இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
- இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன.
நூல் குறிப்பு;
- பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள்.
- “நல்” என்னும் அடைமொழியை கொண்டு போற்றப்படுவது நற்றிணை.
- இதில் ஐந்து தினைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
- இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
- இப்பாடல்களைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
- தொகுப்பித்தவர் “பன்னாடு தந்த மாறன் வழுதி”.
- இதில் நானூறு பாடல்கள் உள்ளன.
- பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.