Tamil Reading 10th Std Page-4

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

புறநானூறு

சொற்பொருள்;

  • துகிர் – பவளம்
  • மன்னிய – நிலைபெற்ற
  • செய – தொலைவு
  • தொடை – மாலை
  • கலம் – அணி

இலக்கணக்குறிப்பு:

  • பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
  • மாமாலை – உரிச்சொற்றொடர்
  • அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை

பிரித்தறிதல்:

  • அருவிலை = அருமை + விலை
  • நன்கலம் = நன்மை + கலம்

ஆசிரியர் குறிப்பு:

  • இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
  • கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
  • அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
  • அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்தினார் கண்ணகனார்.

நூல் குறிப்பு:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
  • இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

பேச்சுக்கலை

பேச்சுக்கலை:

  • நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.

மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:

  • மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.

பேச்சும் மேடைப்பேச்சும்:

  • பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.
  • பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும்.

பேச்சுக்கலையில் மொழியும் முறையும்:

  • மேடைப்பேச்சுக்கு கருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
  • கருத்தைக் விளக்க மொழி கருவியாக உள்ளது.

முக்கூறுகள்:

  • பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்திக் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துக் பேசுவதையே பேச்சுமுறை என்கிறோம்.
  • இதனை எடுத்தல், தொடுதல், முடிதல் எனவும் கூறலாம்.

எடுத்தல்:

  • பேச்சை தொடங்குவது எடுப்பு.
  • தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
  • சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.

தொடுத்தல்:

  • தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல் எனப்படும்.
  • இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே தொடுத்தல் எனப்படும்.

பேச்சின் அணிகலன்:

  • எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகு படுத்துவதே அணி எனப்படும்.
  • கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமையப் பேசுவதே சிறந்த பேச்சாகும்.

உணர்த்தும் திறன்:

  • உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
  • பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின் உள்ளத்தில் தாம் விரும்பும் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.

முடித்தல்:

  • பேச்சை முடிக்கும்போது தான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனதில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும்.
  • பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடிதல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.

பெரியபுராணம்

சொற்பொருள்:

காய்ந்தார் – நீக்கினார்மனை – வீடு
ஆ – பசுமேதி – எருமை
நிறைகோல் – துலாக்கோல்(தராசு)தடம் – தடாகம்
மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்சந்தம் – அழகு
ஈறு – எல்லைகல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
புவனம் – உலகம்சூலை – கொடிய வயிற்றுநோய்
தெருளும் – தெளிவில்லாதகரம் – கை
கமலம் – தாமரைமிசை – மேல்
திருநீற்றுக்காப்பு – திருநீறுநேர்ந்தார் – இசைந்தார்
பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்துஒல்லை – விரைவு
மல்லல் – வளமானஆம் – அழகிய
வால் – கூரியஅரா – பாம்பு
அல்லல் – துன்பம்அங்கை – உள்ளங்கை
உதிரம் – குருதிமேனி – உடல்
மறைநூல் – நான்மறைசேய் – குழந்தை
பூதி – திருநீறுமெய் – உண்மை
பணிவிடம் – பாம்பின் நஞ்சுசவம் – பிணம்

இலக்கணக்குறிப்பு:

செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப்  பெயரெச்சம்வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
உறுவேனில் – உரிச்சொற்றொடர்நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
பந்தர் – கடைப்போலிஅணைந்த வாகீசர் – பெயரெச்சம்
பொங்குகடல் – வினைத்தொகைபெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
அறிந்து, அடைந்து – வினையெச்சம்கரகமலம் – உருவகம்
பொழிந்திழிய – வினையெச்சம்தேசம் – இடவாகு பெயர்
வந்தவர் – வினையாலணையும் பெயர்நற்கரிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
தாய்தந்தை – உம்மைத்தொகைமல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்றுதுளங்குதல் – தொழிற்பெயர்
பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகைஅங்கணர் – அன்மொழித்தொகை
நோக்கி – வினையெச்சம்எழுந்து, சென்று – வினையெச்சம்
பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகைகேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்

பிரித்தறிதல்:

  • செலவொழியா = செலவு + ஒழியா
  • வழிக்கரை = வழி + கரை
  • வந்தணைந்த = வந்து + அணைந்த
  • எம்மருங்கும் = எ + மருங்கும்
  • எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
  • கண்ணருவி = கண் + அருவி
  • உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
  • திருவமுது = திரு + அமுது
  • மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
  • நற்கரிகள் = நன்மை + கறிகள்
  • இன்னமுது = இனிமை + அமுது
  • வாளரா = வாள் + அரா
  • அங்கை = அம் + கை
  • நான்மறை = நான்கு + மறை
  • பாவிசை = பா + இசை

ஆசிரியர் குறிப்பு:

  • பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
  • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
  • இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
  • இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
  • இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
  • இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

  • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
  • அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும்.
  • தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
  • உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.

திரைப்படக்கலை உருவான கதை

திரைப்படத்தின் சிறப்பு:

  • உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
  • அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.

திரைப்படத்தின் வரலாறு:

  • ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
  • ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
  • எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
  • பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

திரைப்படம்:

  • நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
  • கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.

திரைப்படச்சுருள்:

  • திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
  • படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.

படம்பிடிக்கும் கருவி:

  • இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
  • படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

ஒலிப்பதிவு:

  • நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.

திரைப்படக்காட்சிப் பதிவு:

  • ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
  • இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.

கருத்துப்படம்:

  • கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னி” என்பார் ஆவார்.
  • படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.

பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

  • இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
  • பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா.
  • வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
  • அங்கு ஆணையடிப் பள்ளியில் படித்தார். வருமையின் காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை.
  • நாடகங்களில் நடித்து, திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார்.
  • அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் இவரை மிகவும் கவர்ந்தது.
  • நடிப்பையும், அரசியலையும் தம் இரு கண்களாக கருதினார்.
  • மக்கள் அவரை, “புரட்சி நடிகர்” என்றும், “மக்கள் திலகம்” என்றும் போற்றினர்.
  • அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா, “இதயக்கனி” என்று போற்றினார்.
  • இவர் 1963ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
  • 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 1972ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
  • அவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
  • 11 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
  • சென்னை பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
  • இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
  • மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு வழங்கும் திட்டம் ஆக மாற்றினார்.
  • 24.12.1987 ஆன்று இயற்கை எய்தினார்.
  • 1988ஆம் ஆண்டு இந்திய அரசு அவரின் மறைவுக்குப் பின் பாரதரத்னா விருது(இந்திய மாமணி) வழங்கியது.

தமிழ்விடு தூது

சொற்பொருள்:

  • அரியாசனம் – சிங்காதனம்
  • பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  • வரம்பு – வரப்பு
  • ஏர் – அழகு
  • நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
  • நெறிநாலு – வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம்(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)
  • நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
  • சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
  • நாளிகேரம் – தென்னை

இலக்கணக்குறிப்பு:

  • செவியறுத்து  - இரண்டாம் வேற்றுமைத்தொகை

பிரித்தறிதல்:

  • நாற்கரணம் = நான்கு + கரணம்
  • காரணத்தேர் = கரணத்து + ஏர்
  • நாற்பொருள் = நான்கு + பொருள்
  • இளங்கனி = இளமை + கனி
  • விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு

நூற்குறிப்பு:


  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.