Tamil Reading 10th Std Page-5

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

தொன்மைத் தமிழகம்

மனித நாகரிகத் தொட்டில்:

  • முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.

சிலாபதிகாரப் பாடல்:

  • தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.
  • இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும்.
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் 
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

பாவேந்தர்:

  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்கி கூறுவது
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் 
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

வாணிகம்:

  • தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
  • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.

கடல் வாணிகம்:

  • கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும்,சந்தனமும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.
  • கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
  • தமிழர்கள் சாவகநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

தனிநாயகம் அடிகளாரின் கூற்று:

  • தமிழ்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இர்ருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.

மொழித் தொன்மை:

  • “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
  • “தமில்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
  • “கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின்” என் மணிவாசகம் கூறுகிறது.

ஏற்றுமதியும் இறக்குமதியும்:

  • தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி குறிப்பிடும் நூல்கள், பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும்.
  • காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் கூறுகிறது.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் ....
.... மயங்கிய நனந்தலை மறுகு.

இசைக்கலை:

  • பண்டையக்காலத் தமிழர்களின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
  • “நரம்பின் மறை” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
  • ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
  • இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
  • “பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறுகிறது.
  • குழலினிது யாழினிது என்று இசைபோளியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.

உழவுத் தொழில்:

  • “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்கிறது திருக்குறள்.
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எகிறது புறநானூறு.
  • உழவுக்கு சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம்.

பழந்தமிழர் வாழ்வு:

  • அறத்தின் அடிப்படையில் தொடங்கியது தமிழர் வாழ்வு.
  • “களிறு எரிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்னும் புறப்பாடல், வீரத்தினை முதல் கடமையாக்கின்றது.
  • ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் வீரத்தினை பாடியுள்ளார்.

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல்:

  • தொல்பழங்காலம் பற்றிய ஆய்வையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பர்.
  • தொல்லியலை ஆங்கிலத்தில், “ஆர்க்கியாலாஜி” எனக் குறிப்பிடுவர்.
  • மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் இருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே தொன்மைக்காலம் என்பர்.

காவிரிப்பூம்பட்டினம்:

  • 1963ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் பூம்புகார் அருகில் உள்ள “கிழார்வெளி” என்னும் இடத்தில மேற்கொண்ட கடல் அகழ்வாய்வின் போது கி.மு.மூன்றாம் நூற்றாண்டை சார்ந்த கட்டட இடிபாடுகள் கிடைத்தன.
  • இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை, அரைவட்டவடிவ நீர்த்தேக்கம், புத்தவிகாரம்(புத்த பிக்குகள் தங்குமிடம்), வெண்கலத்தால் ஆன புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.
  • இவ்வாய்வு காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரம் இருந்ததை உறுதி செய்தது.

காசுகள்:

  • தருமபுரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களால் செய்யப்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவற்றின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிலோ முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இக்காசுகளில் சூரியன் மலைமுகடு, ஆறு, காளை, ஸ்வஸ்திகம், கும்பம் முதலிய சின்னங்கள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

முதுமக்கள் தாழிகள்:

  • பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது.
  • இவ்வைகைத் தாழிகள், “முதுமக்கள் தாழிகள்” என்கிறோம்.
  • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
  • கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டங்களைச் சார்ந்த இத்தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம், செம்பினால் ஆன ஆண், பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினால் ஆன கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன.

திருக்குறள்

சொற்பொருள்:

மூத்த – முதிர்ந்தகேண்மை – நட்பு
தேர்ந்து – ஆராய்ந்துநோய் – துன்பம்
உறாஅமை – துன்பம் வராமல்பேணி – போற்றி
தமர் – உறவினர்வன்மை – வலிமை
தலை – சிறப்புசூழ்வார் – அறிவுடையார்
செற்றார் – பகைவர்இல் – இல்லை
தகைமை – தன்மைஏமரா – பாதுகாவல் இல்லாத
மதலை – துணைஎள்ளுவர் – இகழ்வர்
பொய்யா விளக்கம் – அணையா விளக்குஇருள் – பகை
ஈனும் – தரும்தீதின்றி – தீங்கின்றி
புல்லார் – பற்றார்உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
உல்குபொருள் – வரியாக வரும்பொருள்தெரு – பகை
குழவி – குழந்தைசெவிலி – வளர்ப்புத்தாய்
குன்று – மலைசெருக்கு – இறுமாப்பு

இலக்கணக்குறிப்பு:

அறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகைதிறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேர்ந்து கொளல் – வினையெச்சம்கொளல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உற்றநோய் – பெயரெச்சம்உறாஅமை – செய்யுளிசை அளபெடை
பெற்றியார் – வினையாலணையும் பெயர்கொளல் – தொழிற்பெயர்
வன்மை – பண்புப்பெயர்ஒழுகுதல் – தொழிற்பெயர்
சூழ்வார் – வினையாலணையும் பெயர்தக்கார் – வினையாலணையும் பெயர்
துணையார் – வினையாலணையும் பெயர்இல்லை – குறிப்பு வினைமுற்று
பகைகொளல் – இரண்டாம் வேற்றுமைத்தொகைபொய்யா விளக்கம் – ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
அறனீனும் – இரண்டாம் வேற்றுமைத்தொகைவந்த பொருள் – பெயரெச்சம்
திறன் – கடைப்போலிவாராப் பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தன்ஒன்னார் – ஆறாம் வேற்றுமைத்தொகைவேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
ஈன்குழவி – வினைத்தொகைசெல்வச்செவிலி – உருவகம்
குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகைசெய்க – வியங்கோள் வினைமுற்று
செறுநர் செருக்கு – ஆறாம் வேற்றுமைத்தொகைஒண்பொருள் – பண்புத்தொகை

தேவாரம்

சொற்பொருள்:

இடர் – துன்பம்ஏமாப்பு – பாதுகாப்பு
பிணி – நோய்நடலை – துன்பம்
சேவடி –இறைவனின் செம்மையான திருவடிகள்நமன் – எமன்

இலக்கணக்குறிப்பு:

  • நற்சங்கு – பண்புத்தொகை
  • வெண்குழை – பண்புத்தொகை
  • மலர்ச்சேவடி – உவமைத்தொகை
  • மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்:

  • பிநியறியோம் = பிணி + அறியோம்
  • எந்நாளும் = எ + நாளும்
  • நாமென்றும் = நாம் + என்றும்

ஆசிரியர் குறிப்பு;

  • திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்.
  • இவரது தமக்கையார் திலகவதியார்.
  • இயற் பெயர் = மருணீக்கியார்
  • சிறப்பு பெயர்கள் = தருமசேனர், அப்பர், வாகீசர்.
  • இவரின் நெறி = தொண்டு நெறி
  • இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். அதனால் இவரை “தாண்டக வேந்தர்” எனப்படுவார்.
  • இவரது காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
  • திருவாமூர், கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்து உள்ளது.

நூல் குறிப்பு:

  • தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்று கூறுவர்.
  • தே+ஆரம் எனப் பிரித்து தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
  • அப்பர் அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

விண்ணியல அறிவு:

  • உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
  • ஆன்மஇயல் ஏசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
  • பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது.
  • உலகம் என்னும் தமிழ்ச்சொல் “உலவு” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும்.
  • ஞாலம் என்னும் சொல் “ஞால்” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் “தொங்குதல்”.
  • வானத்தில் காற்றில்லாப் பகுதி உண்டு எம்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனை “வறிது நிலைஇய காயமும்” என்னும் புறநானூறு வரி விளக்குகிறது.
  • “வலவன் ஏவா வானூர்தி” என்னும் புறநானூற்றுத் தொடரினால் தமிழர்கள் வானூர்தியை விண்ணில் செலுத்தி இருக்கலாம் என அறியப்படுகிறது.

பொறியியல் அறிவு:

  • கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
  • இதனைத் “தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த” என்னும் பதிற்றுபத்து வரிகள் குறிப்பிடும்.
  • நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை, “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறியமுடிகிறது.
  • பெருங்கதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் “டிராய்” போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது.

கனிமவியல் அறிவு:

  • சிலப்பதிகாரம் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குகிறது.
  • ஊர்கான் காதையில்,
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
என்னும் இவ்வடிகள் ஐவகை மணிகளை விளக்குகிறது.

மண்ணியல் அறிவு:

  • தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்ப பாகுபடுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். மேலும் செம்மண், களர்நிலம், உவர்நிலம் எனவும் பகுத்துள்ளனர்.
  • நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் எனவும், சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் எனவும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
  • செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனைச் “செம்புலப் பெயல் நீர்போல” என்னும் குறுந்தொகை வரி உணர்த்தும்.
  • உவர்நிலம், மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன்தருவதில்லை. இதனை, “அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” என்னும் புறநானூறு வரிகள் விளக்குகிறது.
  • எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம். இதனைப் “பயவாக் களரனையர் கல்லாதவர்” என்பார் திருவள்ளுவர்.

அணுவியல் அறிவு:

  • ஔவை,”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி’ என்று சொல்கிறார்.
  • “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” எனக் கம்பர் கூறுவார்.
  • இதன் மூலம் அணுச்சேர்ப்பும் அனுப்பிரிப்பும் பற்றிய கருத்துக்கள் அறியப்பட்டுள்ளது.

நீரியல் அறிவு:

  • நீரியல் இயக்கமே உலகை வளப்படுத்துகிறது.
  • இதனை, திருவள்ளுவர் தன் குரலில் கூறியுள்ளார்.
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மருத்துவ அறிவு:

  • “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்பார் திருமூலர்.
  • திருவள்ளுவர் “மருந்து” என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.
  • இன்று பரவலாகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

அறுவை மருத்துவம்:


  • “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
  • அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பரின் வாக்கு அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
  • மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவி சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
  • “புல்லாகிப் பூடாய்” என்னும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாய் கூறுகின்றன.
  • “மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” எனத் தொடங்கும் பாடலடிகள் கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கின்றன.