Tamil Reading 6th Std | Kalvipriyan-5
kalvipriyan Online Test January 2018
தனிப்பாடல்
சொற்பொருள்:
............
இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்பு நோய்
குரைகடல் – ஒலிக்கும் கடல்
நூல் குறிப்பு:
............
புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.
அந்த காலம் இந்த காலம்
ஆசிரியர் குறிப்பு:
............
உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
“பகுத்தறிவு கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர்.
காலம்: 25.09.1899 – 23.05.1981
தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
............
டிவி – தொலைக்காட்சி
ரேடியோ – வானொலி
டிபன் – சிற்றுண்டி
டீ – தேநீர்
கரண்ட் – மின்சாரம்
டெலிபோன் – தொலைபேசி
ஃபேன் – மின்விசிறி
சேர் – நாற்காலி
லைட் – விளக்கு
டம்ளர் – குவளை
சைக்கிள் – மிதிவண்டி
பிலாட்பாரம் – நடைப்பாதை
ஆபிஸ் – அலுவலகம்
சினிமா – திரைப்படம்
டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
ரோடு – சாலை
பிளைட் – விமானம்
பேங்க் – வங்கி
தியேட்டர் – திரைஅரங்கு
ஆஸ்பத்திரி – மருத்துவமனை
கம்ப்யூட்டர் – கணினி
காலேஜ் – கல்லூரி
யுனிவர்சிட்டி – பல்கலைகழகம்
டெலஸ்கோப் – தொலைநோக்கி
தெர்மோமீட்டர் – வெப்பமானி
இன்டர்நெட் – இணையம்
இஸ்கூல் – பள்ளி
சயின்ஸ் – அறிவியல்
மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
நம்பர் – எண்
நாடும் நகரமும்
நாடு:
............
நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த
நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநை யாற்றின் கரையிலுள்ள ஒரு
சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள
மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
சோழநாட்டில் மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள ஓரூர் கொரநாடு என்று
அளிக்கபடுகிறது. கூர்ரைநடு என்பது கொரநாடு என்று மருவிற்று. பட்டுகோட்டை
வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.
நகரம்:
............
சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின்
சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரை துறந்து,
ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
பாண்டிநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகிறது.
இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.
சென்னை:
............
திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால்
பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி
என்பது அல்லிக்குளம். அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும்
அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.
புரம்:
............
“புரம்” என்னும் சொல், சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி
என்று பெற்ற ஊர் பின்னர் “புரம்” என்பது சேர்ந்து காஞ்சிபுரம்ஆயிற்று.
பல்லவபுரம்(பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும்
சில எடுத்துக்காட்டுகளாகும்.
பட்டிணம்:
............
கடற்கரையில் உருவாகும் நகரங்கள் “பட்டிணம்” எனப் பெயர் பெரும்.
காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம்,
சதுரங்கப்பட்டிணம் ஆகியவை “பட்டிணம்” எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.
பாக்கம்:
............
கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்” எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம்,
மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் “பாக்கம்” எனப்
பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்:
............
“புலம்” என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமரைபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
குப்பம்:
............
நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் “குப்பம்” என்னும் பெயரால்
அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை
குறிப்பிடலாம்.
ஆசிரியர்:
............
சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் “ஊரும் பேரும்” என்ற நூலின் இருந்து எடுக்கப்பட்டது.
குற்றாலக் குறவஞ்சி
சொற்பொருள்:
............
வானரங்கள் – ஆண் குரங்குகள்
மந்தி – பெண் குரங்குகள்
வான்கவிகள் – தேவர்கள்
காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
வேணி – சடை
மின்னார் – பெண்கள்
மருங்கு – இடை
நூல் குறிப்பு:
............
இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவஞ்சி.
ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார்.
குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.
மரமும் பழைய குடையும்
சொற்பொருள்:
............
கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்
பீற்றல் குடை –பிய்ந்த குடை
ஆசிரியர் குறிப்பு:
............
அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
............
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும்.
இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது