Tamil Reading 6th Std | Kalvipriyan-3

kalvipriyan Online Test January 2018 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan



பழமொழி நானூறு

சொற்பொருள்:

............
  • ஆற்றவும் = நிறைவாக
  • தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும்
  • ஆறு = வழி, நதி, ஓர் எண்
  • உணா = உணவு
  • அரையன் = அரசன்

  • பிரித்து எழுதுக:

    ............
  • நாற்றிசை = நான்கு + திசை
  • ஆற்றுணா = ஆறு + உணா
  • நூல் குறிப்பு:

    ............
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நானூறு பாடல்களை கொண்டது.
  • ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
  • “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்.

  • ஆசிரியர் குறிப்பு:

    ............
  • இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
  • முன்றுறை என்பது ஊர்பெயர்.
  • அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
  • முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
  • மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

    ............
  • நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார்.
  • இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார்.
  • நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.1935
  • நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.
  • புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு.
  • மேலும் நேரு, பிளோட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும் கூறுகிறார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நூல் என்றும் கூறுகிறார்.
  • டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நாவல், உலகில் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின் நூல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
  • நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருனுமான பெட்ராண்ட் ரஸ்ஸல்.
  • புத்தக படிப்பு என்பது 1000 முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
  • கேம்ப்ரிட்ஜ் – இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்
  • சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
  • மில்டன் – ஆங்கில கவிஞர்
  • பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
  • காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
  • டால்ஸ்டாய் – ரஷ்ய நாடு எழுத்தாளர்
  • பெர்னார்ட் ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
  • பெட்ரண்ட ரஸ்ஸல் – சிந்தனையாளர், கல்வியாளர்
  • அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
  • கிருபளானி – விஸ்வபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்
  • சித்தர் பாடல்

    சொற்பொருள்:

    ............
  • வெய்ய வினை – துன்பம் தரும் செயல்
  • வேம்பு – கசப்பான சொற்கள்
  • வீறாப்பு – இறுமாப்பு
  • பலரில் – பலருடைய வீடுகள்
  • கடம் – உடம்பு
  • பிரித்து எழுதுக:

    ............
  • பலரில் – பலர் + இல்(வீடுகள்)
  • பாடல் குறிப்பு:

    ............
  • சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
  • பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள்.
  • கடுவெளி சித்தர் என்பவர் உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்.
  • தாகம்

    கவிதை தரும் செய்தி:

    ............
  • யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
  • ஆசிரியர் குறிப்பு:

    ............
  • “கவிகோ” என்று அலைகபடுபவர் அப்துல் ரகுமான்.
  • புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர்.
  • இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
  • எழுதிய நூல்:

    ............
  • சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
  • பெரியார்

    ............
  • பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்
  • இயற் பெயர் = இராமசாமி
  • ஊர் = ஈரோடு
  • “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.
  • பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.
  • கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
  • தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.
  • பெண் விடுதளிக்கு முதல் படியாக பெண்கள்  எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதி பெரியார் வலியுறுத்தினார்.
  • 17.09.1879 இல் பிறந்து, 24.12.1973 இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.
  • 1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
  • நடுவண் அரசு 1978 ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
  • புறநானூறு

    சொற்பொருள்:

    ............
  • ஒன்றோ – தொடரும் சொல்
  • அவல் – பள்ளம்
  • மிசை – மேடு
  • நல்லை – நன்றாக இருப்பாய்
  • நூல் குறிப்பு:

    ............
  • புறநானூறு = புறம் + நான்கு + நூறு
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
  • எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.
  • சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை உடையது.
  • தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக புறநானூறு திகழ்கிறது.
  • ஆசிரியர் குறிப்பு:

    ............
  • ஔவையார் சங்கப்புலவர்.
  • அதியமானின் நண்பர்.
  • அறிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்.
  • சங்க கால பெண் கவிஞர்களுள் மிகுதியான பாடலை பாடியவர்.
  • சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.
  • திண்ணையை இடித்து தெருவாக்கு

    ஆசிரியர் குறிப்பு:


    ............
  • திருவண்ணாமலை மாவட்டம் குவளையில் பிறந்தவர்.
  • புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
  • இவரை “எழுச்சி கவிஞர்” என்பர்.
  • காலம்: 26.02.1947 – 13.05.2000