Tamil Reading 6th Std | Kalvipriyan-4
kalvipriyan Online Test January 2018
தேசியம் காத்த செம்மல்
பிறப்பும் வளர்ப்பும்:
............
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.
பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார்.
இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.
ஆசிரியர் = குறைவற வாசித்தான் பிள்ளை.
கல்வி:
............
கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளிலும், பின்பு பசுமலை
உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார்.
இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது,
அங்கு ப்ளேக் நோய் பரவியதால் இவரின் கல்வி நின்றது.
பொதுத்தொண்டில் நாட்டம்:
............
32 சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்.
சமபந்தி முறைக்கு ஊக்கம் அளித்தார்.
குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.
சாதியை பற்றி:
............
“சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது
பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைதானே தவிரச் சாதியையும்
நிறத்தையும் அல்ல; சாதியையும் நிறமும் அரசியலுக்குமில்லை,
ஆன்மீகத்திற்கும் இல்லை.
நேதாஜி:
............
முத்துராமலிங்கர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.
வாய்பூட்டு சட்டம்:
............
விடுதலை போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வட
இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் தேவருக்கும் வாய்பூட்டு
சட்டம் போட்டது.
தேசியம் காத்த செம்மல்:
............
முத்துராமலிங்க தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க பாராட்டினார்.
அரசியல் வாழ்க்கை:
............
முத்துராமலிங்கர் ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறையும் வெற்றி பெற்றார்(1937, 1946, 1952, 1957, 1962).
தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றார்.
சிறந்த பண்பாளர்:
............
“தெய்வீகம், தேசியம்” ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்.
“வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என்று கூறினார்.
பாராட்டு பெயர்கள்:
............
வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை.
மனிதனின் மனநிலை:
............
“பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில்
வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என்று இறப்பின் நிலை பற்றி
கூறியுள்ளார்.
மனிதனின் மனநிலையை “இருள், அருள், மருள், தெருள்” என குறிப்பிடுகிறார்.
மறைவு:
............
55 ஆண்டுகள் வாழ்ந்து 1963ம் அக்டோபர் 30இல் தம் பிறந்தநாள் அன்றே இயற்கை எய்தினார்.
சிறப்பு:
............
முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப்
பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும்
16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்.
திருக்குறள்
சொற்பொருள்:
............
ஈரம் – அன்பு
அளைஇ – கலந்து
படிறு – வஞ்சம்
அமர் – விருப்பம்
முகன் – முகம்
துவ்வாமை – வறுமை
நாடி – விரும்பி
இனிதீன்றல் – இனிது + ஈன்றல்
செய்யும் தொழிலே தெய்வம்
............
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை “மக்கள் கவிஞர்” என்று அழைப்பர்.
இவர் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள “செங்கப்படுத்தான்காடு”.
காலம்: 13.04.1930 – 08.10.1959
கல்லிலே கலைவண்ணம்
............
கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் தாராசுரம்.
இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
கோவிலில் உள்ள சிற்பங்கள்:
............
முப்புரம் எரித்தவன்(திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர்(கஜசம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் “சரிகமபதநி” எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
கார்ல் சாகன் கூற்று:
............
தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே
இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும்
வான்வெளி இரகிசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன்
கூறுகிறார்.
தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள்
துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை மரபு அடையாளச்சின்னமாக
யுனெஸ்கோஅறிவித்துள்ளது. இக்கோவிலை “கலைகளின் சரணாலயம்” என்றே கூறலாம்.
சாதனை பெண்மணி மேரிகியூரி
............
கியூரி அம்மையார் 1867ம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.
தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை
நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக்
கொடுத்ததும், தாதி போல் பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார்.
மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார்.
அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்துகொண்டார்.
அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்சியில் ஈடுபட்டார்.
மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தயை பெற்றெடுத்தார்.
இடைவிடாத ஆராச்சியின் பயனாக, கணவன், மனைவி இருவரும் முதலில்
பொலோனியும் என்னும் பொருளை கண்டுபிடித்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள்
இடைவிடாது ஆராய்ச்சி செய்து ரேடியம் என்னும் பொருளை கண்டுப்பிடித்தனர்.
இவ்விரண்டு அறிய கண்டுபிடிப்புகளுக்காக மேரி கியூரிக்கும் அவர் கணவருக்கும்
1903ம் ஆண்டு “நோபல் பரிசு” வழங்கப்பட்டது.
இவரின் கண்டுபிடிப்பைப் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம்
டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன் வந்த போதும் தனது அறிவியல்
கண்டுபிடிப்பை அறிவியல் உலகிற்கே கொடையாக கொடுத்தார்.
மேலும் அவருக்கு இரண்டாவது முறையாக 1911ஆம் ஆண்டு ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேரி கியூரி 1934இல் இயற்கை எய்தினார்.
கியூரியின் இறப்பிற்குப்பின் அவர் மகள் ஐரினும், மருமகன் சாலிட்
கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கை
கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்சிக்காக 1935ம் ஆண்டு நோபல் பரிசினை
பெற்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.