அகராதி:
- அகரம் + ஆதி =அகராதி
- ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
- அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.
நிகண்டுகள்:
- தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
- நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
- நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
- திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
அகராதி நிகண்டு:
- நிகண்டுகளில் ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
- இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
- இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.
சதுரகராதி:
- வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
- இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
- சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
- வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.
சங்க அகராதி:
- “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
- யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
- இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
பிற அகரமுதலிகள்:
- குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
- இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
- வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.
பவானந்தர்:
- பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.
சண்முகம்:
- மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது
தமிழ் லெக்சிகன்:
- இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
- இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
- இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:
- 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
- இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
- ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
- படங்களுடன் வெளி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.
கணினி உதவியுடன் அகரமுதலி:
- முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
- விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.
கலைக்களஞ்சியம்:
- தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
- இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
- இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.
அபிதான சிந்தாமணி:
- 1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
- இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி கழகம்:
- தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
- இது பத்து தொகுதிகளை உடையது.
- இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.
கலைச்சொல் அகரமுதலி:
- காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
- மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
- அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
திருவள்ளுவமாலை
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காடும் படித்தால் – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி
|
சொற்பொருள்:
- வள்ளை – நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
- அளகு – கோழி
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – கபிலர்
- காலம் – கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றும், சங்ககாலத்திற்கு பின் என்றும் கூறுவர்.
நூல் குறிப்பு:
- திருக்குறளின் சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது.
- இந்நூலில் 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.
- இப்பாடல் அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது.
உவமை:
- சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள் தெளிவாக காட்டும்.
உவமிக்கப்படும் பொருள்:
- வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.
அறிவியல் கருத்து:
- ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் கலீலியோ கலிலி.
- நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில் தேங்கிய சிருபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும் என்ற கபிலரின் சிந்தனை அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துக்கிறது.
நளவெண்பா
சொற்பொருள்:
- ஆழி – கடல்
- விசும்பு – வானம்
- செற்றான் – வென்றான்
- அரவு – பாம்பு
- பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
- வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
- கடா – எருமை
- வெளவி – கவ்வி
- சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
- கொடி – பவளக்கொடி
- கோடு – கொம்பு
- கழி – உப்பங்கழி
- திரை – அலை
- மேதி – எருமை
- கள் – தேன்
- புள் – அன்னம்
- சேடி – தோழி
- ஈரிருவர் – நால்வர்
- கடிமாலை – மணமாலை
- தார் – மாலை
- காசினி – நிலம்
- வெள்கி – நாணி
- மல்லல் – வளம்
- மடநாகு – இளைய பசு
- மழவிடை – இளங்காளை
- மறுகு – அரசவீதி
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – புகழேந்திப் புலவர்
- பிறந்த ஊர் – களத்தூர்
- சிறப்பு – வரகுண பாண்டியனின் அவைப் புலவர்
- ஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி
- காலம் – பனிரெண்டாம் நூற்றாண்டு
- இவரை “வெண்பாவிற் புகழேந்தி” என சிறப்பிப்பர்.
நூல் குறிப்பு:
- நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.
- இந்நூல் சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.
- இதில் 431 வெண்பாக்கள் உள்ளன.
உலகம் உள்ளங்கையில்
- கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
- பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.
- 1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.
- ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார்.
- ஹார்வார்ட் பல்கலைக்கலகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹோவார்டு ஜக்கன் என்பவர் எண்ணிலக்க கணினியை கண்டுபிடித்து அதற்கு “ஹார்வார்டு மார்க்-1” எனப் பெயரிட்டனர்.
- 1960ஆம் ஆண்டு மின்காந்த நாடா பயன்படுத்தி செய்தி அனுப்பப்பட்டது.
- சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டிம்பெர்நெர் லீ என்னும் வல்லுநர் “உலகளாவிய வலைப்பின்னல்” எனப் பெயரிட்டார். இதனை “வையாக விரிவு வலை” எனவும் அழைக்கலாம்.
- “கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்” என பில் கேட்ஸ் கூறுகிறார்.
விவேகசிந்தாமணி
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு தான்அதைச் சம்பு வின்கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள் வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப் போனது வண்டோ பறந்தது பழந்தான் புதுமையோ இதுஎனப் புகன்றாள் |
சொற்பொருள்:
- மது – தேன்
- தியங்கி – மயங்கி
- சம்பு – நாவல்
- மதியம் – நிலவு
நூல் குறிப்பு:
- விவேகசிந்தாமணி என்னும் இநூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
- இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.
பாரதத்தாய்
சொற்பொருள்:
- வாய்மை – உண்மை
- களையும் – நீக்கும்
- வண்மை – வள்ளல் தன்மை
- சேய்மை – தொலைவு
பிரித்து எழுதுக:
- தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – அசலாம்பிகை அம்மையார்
- ஊர் – திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனண
நூல்கள்:
- ஆத்திசூடி வெண்பா
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- காந்தி புராணம்(2034 பாடல்கள்)
- இராமலிங்க சுவாமிகள் பதிகம்(409 பாடல்கள்)
சிறப்பு:
- இவரை "இக்கால ஔவையார்” என திரு.வி.க பாராட்டுகிறார்.