Tamil Reading 8th Std Page-4

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

நாடகக்கலை

நாடகம் – பொருள் விளக்கம்:

  • நாடு + அகம் = நாடகம்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்.
  • நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
  • நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
  • கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
  • இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.

நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:

  • தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
  • நாடகம் என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
  • பிறர் செய்வதைப்போல தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
  • மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.

இலக்கியங்களில் நாடகம்:

  • தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  • “கூத்தாட் டவைக்குல்லாத் தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.
  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று மாதவியை குறிப்பிடுகிறார்.

கூத்து:

  • தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.
  • நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லே வழக்கில் இருந்தது.

அடியார்க்கு நல்லார்:

  • சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.
  • இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.

நாடக நூல்கள்:

  • முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நாடகவியல்:

  • பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.

நாடக ஆராய்ச்சி நூல்கள்:

  • சுவாமி விபுலானந்தர் = மதங்க சூளாமணி
  • மறைமலையடிகள் = சாகுந்தலம்
  • இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.

தொழில்முறை நாடக அரங்குகள்:

  • பம்மல் சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.

காலம்தோறும் நாடகக்கலை:

  • ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் “மத்தவிலாசம்” என்ற நாடக நூலை எழுதியுள்ளான்.
  • பதினொன்றாம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
  • பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.

கட்டியங்காரன் உரையாடல்:

  • பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடலோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:

  • காசி விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
  • பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணியம்”.

தேசிய நாடகங்கள்:

  • “கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
  • இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன.

சிறப்பிடம் பெற்றவர்கள்:

  • பரிதிமாற் கலைஞர் - தமிழ் நாடக பேராசிரியர்
  • சங்கரதாசு சுவாமிகள் - தமிழ் நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர்
  • பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடக தந்தை
  • கந்தசாமி - தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை

கவிமணியின் கூற்று:

  • “நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின் கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக் கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத் தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.

திருக்குறள்

சொற்பொருள்:

  • வழக்கு – நன்னெறி
  • ஆன்ற – உயர்ந்த
  • நயன் – நேர்மை
  • மாய்வது – அழிவது
  • அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
  • நண்பு – நட்பு
  • கடை – பழுது
  • நகல்வல்லர் – சிறிது மகிழ்பவர்

திருவருட்பா

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- இராமலிங்க அடிகள்

சொற்பொருள்:

  • பசியறாது – பசித்துயர் நீங்காது
  • அயர்ந்த – களைப்புற்ற
  • நீடிய – தீராத

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – இராமலிங்க அடிகளார்
  • பெற்றோர் – இராமையா, சின்னம்மை
  • ஊர் – சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்
  • சிறப்பு பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார்
  • சிறப்பு – வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார்.
  • இயற்றிய நூல்கள் – திருவருட்பா, சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
  • கால – 1823-1874

நூல் குறிப்பு:

  • திரு + அருள் + பா = திருவருட்பா.
  • இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகைப் பொருள் கொள்வர்.
  • இது 5818 பாடல் கொண்டது.

தமிழர் வானியல்

வானியல் அறிவு:

  • உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்
  • இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.
மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்

உலகம் தட்டையா? உருண்டையா?

  • பதினைந்தாம் நூற்றாண்டில் தான் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார்.. ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
  • பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலன் கண்டுபிடித்து சொன்னார்.
  • ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம் குரலில் கூறியுள்ளார்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

ஞாயிற்றுக் காட்சி:

  • வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு.
  • சிலபதிகாரத்தில் இளங்கோவடிகள், “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்று போற்றியுள்ளார்.
  • ஞாயிற்றைச் சுற்றிய பாதையை “ஞாயிறு வட்டம்” என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு கூறுகிறது.
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

திங்கள் தோற்றம்:

  • தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை “நாள்மீன்” என்றும், ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை “கோள்மீன்” என்றும் அழைப்பர்.
  • திங்கள் தானே ஒளி வீசுவதில்லை, என்பதை திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
  • திங்களைப் பாம்பு கொண்டற்று என்னும் குறள் “திங்கள் மறைப்பு”(சந்திரகிரகணம்) பற்றியதாகும்.

கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து:

  • கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர்.
  • செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என்றனர்.
  • வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என்றனர். வெள்ளிக்கோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இதனை “விடிவெள்ளி” என்றனர்.
  • புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததால் அதற்கு “அறிவன்” என்றும் பெயருண்டு.
  • வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோலாக வளம் வருவதையே வியாழன் என்றனர்.
  • சனிக்கோளைக் “காரிக்கோள்” என்றழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

தூமகேது:

  • தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் கூறுவர்.
  • தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வான்வழிப் பயணம்:

  • “வளவன் ஏவா வானவூர்தி”(புறநானூறு) கூறுகிறது.
  • வானூர்தி ஒட்டுகிறவனைத் தமிழில் “வலவன்” என அழைத்தனர்.
  • சீவகசிந்தாமணியில் “மயிற்பொறி விமானத்தின்”  கூறப்பட்டுள்ளது.
  • கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய “புட்பக விமானமும்”, பெருங்கதையில் “வானூர்தி வடிவமும்” அதனை இயக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது.

வில்லிபாரதம்

வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் கல்ப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே.
  • வில்லிப்புதூரார்

சொற்பொருள்:

  • வான்பெற்ற நதி – கங்கையாறு
  • களபம் – சந்தனம்
  • துழாய் அலங்கல் – துளசிமாலை
  • புயம் – தோள்
  • பகழி – அம்பு
  • இருநிலம் – பெரிய உலகம்
  • ஊன் – தசை
  • நாமம் – பெயர்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – வில்லிபுத்தூரார்
  • தந்தை – வீரராகவர்
  • ஆதரித்தவர் – வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
  • காலம் – பதினான்காம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:


  • இந்நூல் பத்து பருவங்களை கொண்டது.
  • 4350 விருத்தப் பாக்களால் ஆனது.