யார் கவிஞன்?
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டு பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்; ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன். - முடியரசன் |
சொற்பொருள்:
- கைம்மாறு – பயன்
- மாசற்ற – குற்றமற்ற
- தேட்டை – திரட்டிய செல்வம்
- மீட்சி – மேன்மை
- மாலை – நீங்க
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = முடியரசன்
- இயற்பெயர் = துரைராசு
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
- ஊர் = தேனி மாவட்டம் பெரியகுளம்
- இயற்றிய நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
- பணி = காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்.
- பட்டம் = பறம்புமலையில் நடந்த விழாவில் “கவியரசு” என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
- பரிசு = பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966ஆம் ஆண்டின் தமிழக அரசு பரிசு.
- சிறப்பு = முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
- காலம் = 1920-1998
தேவநேயப்பாவாணர்
வாழ்க்கை குறிப்பு:
- பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம்
- ஊர் = சங்கரன்கோவில்
- கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
- காலம் = 07.02.1902 – 15.01.1981
- சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்.
தமிழ்பற்று:
- தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.
தமிழை வளர்த்தவர்:
- தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் = கால்டுவெல்
- தனித் தமிழுக்கு வித்திட்டவர் = பரிதிமாற்கலைஞர்
- தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் = மறைமலையடிகள்
- தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் = தேவநேயப்பாவாணர்
தமிழை மீட்டல்:
- மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்.
- உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
- “உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்” என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
- “தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்” என்று கூறினார்.
அனைத்தும் தமிழில்:
- கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
- பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.
பகலுணவு, இரவுணவு:
- ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார்.
- அங்கு ஒருவர் பாவனாரிடம், “ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார்.
- பாவாணர், “பகல் உணவு, பகல் உணவாகவும்(பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுதுண்ண நேர்ந்தது), இரா உணவு இரா உணவாகவும்(அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன” என்றார்.
- தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.
நீலமலை(நீலகிரி):
- ஒருமுறை நீலமலைக்குச் சென்று அங்கு கிருட்டினையா என்பவர் வீட்டில் உணவு உண்டார்.
- கிருட்டினையா வெளியே சென்று மீண்டும் வீடு வரும்போது பாவாணர் அங்கு விறகு வெட்டி கொண்டு இருந்தார்.
- கிருட்டினையா, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதற்கு, “உண்ட வீட்டிற்கு எதாவது செய்யவேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது” என்றர்.
பாவாணரின் படைப்புகள்:
- தமிழ் வரலாறு
- முதல் தாய்மொழி
- தமிழ்நாடு விளையாட்டுகள்
- தமிழர் திருமணம்
- வடமொழி வரலாறு
- தமிழர் மதம்
- மண்ணிலே வின்
- பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
- உயர்தரக் கட்டுரை இலக்கணம்
- சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
- திருக்குறள் மரபுரை
அகரமுதலி:
- பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
- இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தன்மானம் மிக்கவர்:
- தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்தபோது, “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று வெளியேறினார்.
சிறப்புகள்:
- பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
- இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையதிற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைகப்பட்டுள்ளன.
தமிழன்னைக்கு பெருமை:
- மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.
கம்பராமாயணம்
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வணந்தொரும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே - கம்பர் |
சொற்பொருள்:
- தாது – மகரந்தம்
- பொது – மலர்
- பொய்கை – குளம்
- பூகம் – கமுகம்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – கம்பர்
- ஊர் – நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர்.
- ஆதரித்தவர் – சடையப்ப வள்ளல்
- இயற்றியவை – சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
- காலம் – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
- கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார்.
- இயற்றிய அந்நூலுக்கு “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
- அதுவே கம்பராமாயணம் என் வழங்கப்படுகிறது.
- எனவே, இது வழிநூல் எனப்படுகிறது.
- கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய முறைப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
நூல் குறிப்பு:
- கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.
- அவை பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காடம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகும்.
- இப்பாடல் பால காண்டத்தில் உள்ளது.
- தற்போதைய உத்திரபிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.
விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்! தூண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்! வேறோ வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்! நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்! - பாரதிதாசன் |
சொற்பொருள்:
- திறல் – வலிமை
- மறவர் – வீரர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – பாரதிதாசன்
- இயற்பெயர் – கனக சுப்புரத்தினம்
- பெற்றோர் – கனகசபை,இலக்குமி
- ஊர் – புதுச்சேரி
- காலம் – 29.04.1891-21.04.1964
- சிறப்புப்பெயர்கள் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
சிறப்பு:
- பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.
இயற்றிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- அழகின் சிரிப்பு
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- குருஞ்சித்திட்டு
- தமிழியக்கம்
- பிசிராந்தையார்
காட்டுயிரிகள்
- தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை குறிப்பிட்டுள்ளார்.
- ஓரறிவு = மெய்யினால் அறியும் உயிர்(புல், மரம்).
- ஈரறிவு = மெய், கண் கொன்டது(நத்தை, சங்கு).
- மூவறிவு = மெய், வாய், மூக்கு கொண்டது(எறும்பு, கரையான், அட்டை).
- நாலறிவு = மை, கண், மூக்கு, வாய் கொண்டது(நண்டு, தும்பி, வண்டு).
- ஐயறிவு = மெய், கண், மூக்கு, வாய், செவி(விலங்கு, பறவை).
- ஆறறிவு = மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம்(மனிதர்).
- அக்டோபர் முதல் வாரத்தை அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடி வருகிறது.
- வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் = 1972
- ஒவ்வோராண்டும் அக்டோபர் மாதம் நான்காம் நாள் “உலக வனவிலங்கு நாள்” கொண்டாடப்படுகிறது.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
சொற்பொருள்:
- மதி – அறிவு
- அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
- உதயம் – கதிரவன்
- மதுரம் – இனிமை
- நறவம் – தேன்
- கழுவிய துகளர் – குற்றமற்றவர்
- சலதி – கடல்
- புவனம் – உலகம்
- மதலை – குழந்தை
- பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – குமரகுருபரர்
- பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
- ஊர் – திருவைகுண்டம்
- இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
- சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
- இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
- காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு;
- 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
- இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது பிள்ளைத்தமிழ்.
- பத்து பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள் கொண்டது.
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
- ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.
- புள்ளிருக்குவேளூரில் (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி.
- அவர் மீது பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர் பெற்றது.
இலக்கியத்தில் நகைச்சுவை
நகைச்சுவை:
- இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
- இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
- நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.
தொல்காப்பியம்:
- தொல்காப்பியம், “எள்ளல், இளமை, அறியாமை, மடமை” ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
திருக்குறள்:
- நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத வந்த வள்ளுவர்,
- என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார் காந்தியடிகள்
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். |
- காந்தியடிகள், நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கருதினார்.
இலக்கியங்களில் நகைச்சுவை:
- கம்பராமாயணத்தில் கம்பரின் நகைச்சுவை உணர்வு அவர் தம் பாடல்களின் மூலம் அறியலாம்.
- வாலியை பற்றி அனுமனிடம் இராவணன் வினவும் போது, அனுமன் அதற்கு, “அஞ்ச வேண்டா! அரக்கர் தலைவா, வாலியும் இறந்தான், அவனது வாழும் இறந்துவிட்டது! ஆனால் சூரியகுலத் தோன்றலாகிய வாலியின் அழிவுக்குக் காரணமானது இராமனின் ஒரு கணையே என்பதை மட்டும் மறந்துவிடாதே!” எனக் கூறினான்.
அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர மடைந்தா னன்றே வெஞ்சின வாழி, மீலான், வாளும்போய் வீழ்ந்ததன்றே |
- இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை, அவனின் வாழை பற்றி தான் கவலை.
கலிங்கத்துப்பரணி:
- சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார் நகைச்சுவை உணர்வு தோன்ற, பல பாடல்களைப் பாடியுள்ளார்.
- காணமுடியாத பேய்களை உருவாக்கி, உயிருள்ள உண்மைப்பிறவிகள் போல் நம் கண்முன்னே நடமாடவிட்டு நகைச்சுவைக்குரிய செயல்களை அவற்றிடையே காட்டியுள்ளார்.
காளமேகப்புலவர்:
- இரு பொருள் தருமாறு பாடுவதில் வல்லவர்.
- “நாங்கள் கவிராசர்கள்” என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி என்பதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு
வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே? – சாலப் புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள் கவிராயர் என்றிருந்தக் கால். |
எனும் பாடலைப் பாடினார்.
பாரதிதாசன்:
- பாவேந்தர் பாரதிதாசன் மயிலின் கழுத்து நீண்டு இருப்பதாய் நகைச்சுவையுடன் பாடியுள்ளார்.
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ கறையொன் றில்லாக் கலாப மயிலே! நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான். |
- பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீடு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம் மயில் அப்படிப் பார்காதாம்” அனக் கூறுகிறார்.
கவிமணி:
- நாஞ்சில் நாடு கவிஞர் கவிமணி தேசிய விநாயகம், “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் நகைச்சுவை நூலினை அளித்துள்ளார்.
- இந்நூல் “நகைச்சுவை களஞ்சியம்” எனப்படுக்கிறது.