நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு ஜூலை 05-06, 2018

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு - ஜூலை 5-6, 2018

உலக நிகழ்வுகள் (International Affairs)

ஜப்பானில் திறக்கப்பட்டுள்ள "உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம்" 
  • உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம், (MORI Building Digital Art Museum) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், திறக்கப்பட்டுள்ளது. (World’s First all-igital art museum-MORI Building Digital Art Museum). 
துபாய் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதர் - ஃபயஸ் முகமது
  • இந்தியச் சிறுவன் ஃபயஸ் முகமது "துபாய் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதர்" என்ற சிறப்பை பெற்றுள்ளான்.
  • துபாய் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தியச் சிறுவன் ஃபயஸ் முகமதுக்கு (வயது 10) "துபாய் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதர்" என்ற சிறப்பு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
நியமனம்/பதவியேற்பு (Appointments)

போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நிர்வாகியாக - இந்திய வம்சாவளி உத்தம் தில்லான் - நியமனம்
  • அமெரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த உத்தம் தில்லான், "போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பு பொறுப்பு நிர்வாகி"யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் - இயக்குனராக விஜய் ஸ்ரீனிவாஸ் நியமனம்
  • காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் இயக்குனர் மற்றும் பொதுமேலாளராக, விஜய் ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • விஜய் ஸ்ரீனிவாஸ், இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
தமிழ்நாடு பொது கணக்கு குழு தலைவராக "துரைமுருகன்" - நியமனம்
  • தமிழ்நாடு பொதுகணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
மாநாடுகள் (Conferences)

இந்தியாவின் முதல் "உலகளாவிய நகர்வுத்திறன் உச்சி மாநாடு 2018"
  • நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பின் சார்பில், இந்தியாவின் முதல் "உலகளாவிய நகர்வுத்திறன் உச்சி மாநாடு 2018" (MOVE: Global Mobility Summit), செப்டம்பர் 7-8 தேதிகளில், டெல்லியில் நடைபெறுகிறது. 
  • MOVE: Global Mobility Summit-உச்சி மாநாடின் நோக்கம்: , வாகன மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான, அரசாங்கத்தின் இலக்குகளையும், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி பொருளாதார மாற்றத்தையம் துரிதப்படுத்த உதவும். 
இந்திய நிகழ்வுகள் (National Affairs)

இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி அலகு, பெங்களூரூ - குறிப்புகள் 
  • இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி அலகு, பெங்களூரூ நகரில் அமைய உள்ளது (India’s first ever state-of-the art e-waste recycling unit). ஆண்டுக்கு 1 லட்சம் வந்துள்ளது, இது வருடத்திற்கு ஒரு லட்சம் டன் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யவுள்ளது. 
  • மத்திய தொழில்நுட்ப மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) இதற்கான பணிகளை மேற்கொள்கிறது. 
CIPET: Central Institute of Plastics Engineering and Technology.

ISRO-வின் விண்வெளி வீரர்களை தப்பிக்க வைக்கும் சோதனை - வெற்றி 
  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவதற்கான சோதனைகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது. 
  • மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட் புறப்படும்போது, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை தப்பிக்க வைக்கும் சோதனை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக நடந்தது.
  • இதற்காக 12.6 டன் எடை கொண்ட விண்கலத்தை விண்ணில் ஜூலை 5 அன்று செலுத்தி சோதனை செய்யப்பட்டது. 
  • தற்போது ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
ISRO: Indian Space Research Organisation

காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS) - தொடக்கம் 
  • புதுடில்லியில் ஜூலை 3 அன்று, காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் (KVIC), காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு என பொருள் படும் "KIMIS" என்ற, ஒருங்கிணைந்த இணைய-சந்தைப்படுத்தல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
KIMIS: Khadi Institution Management and Information System 

உயர் கல்வி ஆராய்ச்சி: ரூ. 1 லட்சம் கோடி நிதி திரட்ட - ஒப்புதல்
  • உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி நிதி நிறுவனம் (Higher Education Financing Agency), 2022-ம் ஆண்டுக்குள், ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டிக்கொள்வதற்கு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 3 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு - முதல் கூட்டம் 
  • டெல்லியில் மத்திய நீர் ஆணைய அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் முதல் கூட்டம், ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் ஜூலை 5 அன்று நடைபெற்றது. 
  • தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், மத்திய அரசின் பிரதிநிதிகள் என காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 8 உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • காவிரி படுகையில் கிடைக்கும் மழைநீர் அளவு தொடர்பான சூழ்நிலை, அப்பகுதிகளில் கிடைக்கும் மழைநீர் புள்ளி விவரங்களை சேகரித்தல், சாகுபடி மற்றும் அறுவடை தகவல்கள், ஒவ்வொரு அணைகளின் நீர் இருப்பு மற்றும் திறப்பு குறித்த மாதாந்திர அடிப்படையிலான தகவல்களை சேகரிப்பது தொடர்பான நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
  • காவிரி ஒழுங்காற்றுக்குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், டெல்லியில் ஜூலை 2 அன்று நடைபெற்றது. 
கேரள கல்லூரிகளில் திருநங்கையருக்கு - இடஒதுக்கீடு
  • கேரளத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 
ஏர்-இந்தியா நிறுவனத்தில் - தைவான் நாட்டுப் பெயர் 'தைப்பே' என மாற்றம் 
  • மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தைவான் நாட்டை, சீன வழக்கப்படி, 'தைப்பே' என, தன் இணையதளத்தில், ஏர்-இந்தியா நிறுவனம், பெயர் மாற்றம் செய்துள்ளது. 
  • கிழக்கு ஆசிய நாடான தைவான், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தைவானின் பெயரை, சீனா, தைப்பே என மாற்றிவிட்டது. 
தமிழ்நாடு நிகழ்வுகள் (Tamil Nadu Affairs)

ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலத்தில் அமையும் "சியட் நிறுவன டயர் உற்பத்தி ஆலை"
  • தமிழ் நாட்டில், "காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம்" கிராமத்தில் "சியட் நிறுவனம்" (CEAT) புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கவுள்ளது.
  • ஸ்ரீபெரும்புதூரில் "சியட்' டயர் உற்பத்தி ஆலையைத் தொடங்குவதற்கான ப#3009;ரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் சியட் நிறுவனம் இடையே, சென்னை தலைமை செயலகத்தில், ஜூலை 5 அன்று செய்து கொள்ளப்பட்டது. 
தமிழ்நாடு சட்டசபையில் "8 சட்ட மசோதாக்கள்" நிறைவேற்றம் 
  • தமிழ்நாடு சட்டசபையில் ஜூலை 5 அன்று, 8 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டன. அவற்றின் விவரம்: 
  1. சிவ் நாடார் மற்றும் சாய் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா 
    • சிவ் நாடார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம்
    • சாய் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் 
  2. தனியார் சட்டக் கல்லூரிகளை நிறுவுதல்
  3. தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம், 
  4. தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்துதல், .
  5. கரும்பு கொள்முதல் விலையை ஒழுங்குபடுத்துதல், 
  6. நிலச் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம், 
  7. தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் சட்டம் 
தமிழ்நாட்டில் "தொழில்-வணிக நிறுவனங்களின் நில உச்சவரம்பு" - 30 ஏக்கராக உயர்வு
  • தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதி பெறாமல் வைத்துக் கொள்ளக் கூடிய நிலத்தின் உச்சவரம்பு 15 ஏக்கரில் இருந்து 30 ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்த 30 ஏக்கர் உச்சவரம்பு உயர்வு என்பது புன்செய் நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.20 கோடிக்குக் குறையாத முதலீடு கொண்ட தொழில் அல்லது வணிக நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கான சட்ட மசோதாவை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜூலை 5 அன்று தாக்கல் செய்தார். 
விளையாட்டு நிகழ்வுகள் (Sports Affairs) 

கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
  • இங்கிலாந்தில் நடைபெறும், இந்திய-இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முக்கிய தினங்கள் (Important Days) 

ஜூலை 2

உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் - ஜூலை 2
  • உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் (WSJD-World Sports Journalists Day) ஆண்டுதோறும் ஜூலை 2 அன்று, விளையாட்டுப் பத்திரிகையாளர்களின் சேவைகளை ஊக்குவிப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது. 
ஜுலை 4

அமெரிக்கா விடுதலை தினம் - ஜுலை 4
  • அமெரிக்காவின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • 1776-ம் ஆண்டு ஜுலை 4 அன்று சுதந்திர பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. 
ஜூலை 6

உலக விலங்கு மற்றும் மனிதர்களிடையே பரவும் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு தினம் - ஜூலை 6 
  • பிரெஞ்சு வேதியியல் அறிஞர் லூயி பாஸ்டர், 1885 ஆம் ஆண்டு ஜூலை 6  ஆம் நாள் அன்று வெறி நாயால் கடிக்கப்பட்ட ஜோசப் மீஸ்ட்ர் எனும் சிறுவனுக்கு முதன்முறையாக தடுப்பூசி அளித்து அச்சிறுவனை காப்பாற்றினார். 
  • கொடுரமான ரேபீஸ் நோய்க்கு முதன் முதலில் தடுப்பூசி அளித்ததன் காரணமாக, ஜூலை 6-ம் நாள் உலக விலங்கு மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப் படுகின்றது.