தமிழின் ஓரெழுத்துச் சொற்கள்
எழுத்துமொழிக்கு எழுத்தே அடிப்படை. எழுத்துக்கள் சேர்ந்து சொற்களை உருவாக்குகிறோம். பொருள் தரக்கூடிய ஓர் எழுத்துச் சொற்களும் (one letter words) உண்டு. ஆங்கில மொழியின் அதிகாரப்பூர்வமான ஒரே ஓரெழுத்துச் சொல் ‘I” என்பது மட்டும் தான். ஆனால் தமிழ் மொழியிலோ பொருளுள்ள ஒரேழுத்துச் சொற்கள் மொத்தம் நாற்பத்தியிரண்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு எழுத்துச் சொற்களை தமிழில் ‘ஓரெழுத்தொருமொழி’என்று அழைக்கின்றனர். அனைத்துச் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் (meanings) கிழே காணலாம்.
உயிர் எழுத்துக்களில் ஓரெழுத்துச் சொற்கள் :
ஆ – பசு
ஈ – ஈ எனும் பூச்சி (Fly)
ஊ – உணவு (food)
ஏ – அம்பு (arrow)
ஐ – தலைவன் (leader)
ஓ – மகிழ்ச்சி
‘ம’ வரிசை :
மா – அழகு (beauty), மேன்மை
மீ – உயர்ச்சி
மூ – மூப்பு, மூன்று
மே – அன்பு, மேம்பாடு
மை – எழுது மை (ink)
‘த’ வரிசை :
தா – அழிவு, தாண்டுதல்
தீ – நெருப்பு, இனிமை
தூ – தூய்மை, பகை
தே – கடவுள், அருள்
தை – வருடத்தின் ஒரு மாதம், தைத்தல்
‘ப’ வரிசை :
பா – பாட்டு, அழகு
பூ – மலர், புவி (உலகம்)
பே – நுரை, மேகம்
பை – கொள்கலம் (bags), இளமை
போ – போதல் (go)
‘ந’ வரிசை :
நா – நாக்கு, அயலார் (neighbour)
நீ – [முன்னிலை] நீ (you)
நே – அன்பு, அருள்
நை – இகழ்ச்சிக் குறிப்பு
நோ – நோய், துன்பம்
‘க’ வரிசை :
கா – காத்தல், சோலை
கூ – நீலம்
கை – கை, ஒழுக்கம்
கோ – அரசன், பசு
‘வ’ வரிசை :
வா – வருதல் (come)
வீ – மலர், விரும்புதல்
வை – வைத்தல், வைக்கோல்
வௌ – கைப்பற்றுதல், ஒலிக்குறிப்பு
‘ச’ வரிசை :
சா – சாதல், சோர்தல்
சீ – இகழ்ச்சிக் குறிப்பு, இலக்குமி
சே – காளை மாடு, சிவப்பு
சோ – மதில், நகர்
’ய’ வரிசையில் :
யா – யாவை, ஒரு வகை மரம்
குறில் எழுத்துக்களில்:
நொ – துன்பம், நோய்
து – உண், அசைத்தல்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்