இந்திய நிகழ்வுகள்
TNPSC Current Affairs 6-7, January 2019, Download PDF
தேஜஸ்' அதிவேக ரயில் சோதனை
- அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய "தேஜஸ்' ரயில் (Tejas Express) சோதனை ஓட்டம் ஜனவரி 5 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- "தேஜஸ்' ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர் வழியாக விழுப்புரம் வரை 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.
- தேஜஸ் ரயிலை சென்னை ICF தொழிற்சாலை தயாரித்துள்ளது.
- "தேஜஸ்' ரயில் சென்னை-மதுரை (Second Tejas train to run between Chennai-Madurai Tejas Rail) இடையே பகல் நேர ரயிலாக விரைவில் இயக்கப்படஉள்ளது.
- முதலாவது தேஜஸ் ரயில் (First Tejas train operated between Mumbai and Goa) மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு இயக்கப்பட்டது.
கோயல் கரோ மண்டல் அணை திட்டம், ஜார்க்கண்ட்
- ஜார்க்கண்ட் மாநிலம், டால்டன்கஞ்ச் பகுதியில், கோயல் கரோ மண்டல் அணை திட்டம் (Koel-Karod Dam Project) உள்பட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 5 அன்று தொடங்கி வைத்தார்.
- ஜார்க்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களில், சுமார் 19,604 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடையும்.
மன்மோகன் சிங் திரைப்படம் "The Accidental Prime Minister"
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய "The Accidental Prime Minister" திரைப்படம் தயாரிக்க பட்டுள்ளது.
- இந்தத் திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார்.
பாகிஸ்தான் ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய சின்னமாக அறிவிப்பு
- பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள பழங்கால இந்து மத தலமான ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக்கவுன்சில் துணைத்தலைவர்: மயில்சாமி அண்ணாதுரை
- தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் (Tamil Nadu State Council for Science and Technology) துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியுடெல்லி உலகப் புத்தக கண்காட்சி 2019
- 27-வது நியுடெல்லி உலகப் புத்தக கண்காட்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஜனவரி 5 அன்று (New Delhi World Book Fair, NDWBF 2019),தொடங்கி வைத்தார்.
- நியுடெல்லி உலகப் புத்தக கண்காட்சி 2019, ஜனவரி 5 முதல் 13 வரை நடைபெறுகிறது.
- ஷார்ஜா அரசின் மக்கள் தொடர்பு துறை தலைவரான ஷேக் பஹிம் பின் சுல்தான் அல் காசிமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
2019 சென்னை புத்தக கண்காட்சி - தொடக்கம்
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (bapasi), 42-வது சென்னை புத்தக கண்காட்சி (Chennai Book Fair 2019, January 4-20, 2019) தொடக்க விழா ஜனவரி 4 அன்று சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்நடைபெற்றது.
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
- 2019 சென்னை புத்தக கண்காட்சி விருதுகள்
- சிறந்த பதிப்பாளர் (பதிப்பக செம்மல் க.கண்பதி விருது) - முல்லை பழனியப்பன்
- சிறந்த பெண் எழுத்தாளர் (அம்சவேணி பெரியண்ணன் விருது) - ஜி.திலகவதி
- சிறந்த விற்பனையாளர் (பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது) - இக்கின்பாதம்ஸ்
- சிறந்த சிறுவர் அறிவியல் நூல் (நெல்லை சு.முத்து விருது) - கோவி.பழநி
- பபாசி-சிறந்த நூலகர் விருது - ச.இளங்கோ சந்திரகுமார்
- சிறந்த குழந்தை எழுத்தாளர் (குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது) - சபீதா ஜோசப்
- சிறந்த தமிழறிஞர் (பாரி செல்லப்பனார் விருது) - க.ப.அறவாணன்
- சிறந்த ஆங்கில எழுத்தாளர் (ஆர்.கே.நாராயண் விருது) - காயத்ரி பிரபு
சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு மாநாடு (BRAQCON) 2019, சென்னை
- சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு மாநாடு (BRAQCON 2019) 2019 ஜனவரி 22 முதல் 25 வரை சென்னை, மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் (CIBA-Central Marine Fisheries Research Institute) நடத்தவுள்ளது.
- இந்த மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தொடங்கிவைக்கவுள்ளார்.
விருதுகள்
ராம்நாத் கோயங்கா விருதுகள் 2018
- இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதை (Ramnath Goenka Excellence in Journalism Awards) வழங்கி வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 29 ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருதுகளை வழங்கினார்.
- பிராந்திய மொழி சிறந்த ஊடகவியலாளர் விருது - மு. குணசேகரன் (நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி)
- அச்சு ஊடகங்களுக்கான புலனாய்வு செய்திப்பிரிவு - விஜயகுமார் (தி இந்து)
- சுற்றுச்சூழல் செய்திப்பிரிவு - சந்தியா ரவிஷங்கர் (தி வயர்)
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் - தொடங்கிவைப்பு
- 2019 பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் 5 அன்று தொடங்கி வைத்தார்.
- பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
- பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் விவரம்:
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய்.
- ரூ. 100 ரொக்கம்
விளையாட்டு நிகழ்வுகள்
கபடி
2018 புரோ கபடி லீக்: "பெங்களூரு புல்ஸ்" சாம்பியன்
- 2018-ஆம் ஆண்டிற்கான புரோ கபடி லீக் (Pro Kabaddi 2018) போட்டியில் பெங்களூரு புல்ஸ் (Bengaluru Bulls) அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- பெங்களூரு புல்ஸ் அணி 38-33 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக பட்டத்தை வென்றது.
- 2018 புரோ கபடி லீக் தொடர்-விருதுகள்
- மதிப்புமிக்க வீரர் விருது: பவன் குமார் (பெங்களூரு புல்ஸ்)
- சிறந்த ரைடர் விருது: பர்தீப் நார#3021;வல் (பாட்னா பைரட்ஸ்) கேப்டன் பர்தீப் நார்வலும் (ரூ.10 லட்சம்), டேக்கிள்ஸ் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர் விருது: நிதேஷ் குமார் (உ.பி.யோத்தா)
டென்னிஸ்
2019 மகாராஷ்ட்ரா ஓபன் டென்னிஸ்: சாம்பியன்கள் விவரம்
- 2019 மகாராஷ்ட்ரா ஓபன் டென்னிஸ் (2019 Maharashtra Open) போட்டிகள், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே நகரில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 5 வரை நடைபெற்றது.
- சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியல்:
- ஒற்றையர் பிரிவு (Singles): கெவின் ஆண்டர்சன் (தென்னாபிரிக்கா)
- இரட்டையர் பிரிவு (Doubles): போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி (இந்தியா)
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்-ரிஷாப் பான்ட்
- இந்திய விக்கெட் கீப்பர் 21 வயதான ரிஷாப் பான்ட், சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் 159 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் (Rishabh Pan, First Indian Wicketkeeper Scores Test Century) என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
- 7-வது விக்கெட் சாதனை
- சிட்னி டெஸ்டில் ரிஷாப் பான்டும், ஜடேஜாவும் 7-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் (224 பந்து) சேர்த்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு ஒரு ஜோடியின் உலக சாதனை இதுவாகும். Download this file below the link as PDF