|
TNPSC Current Affairs February 11, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள்/ National Affairsகண்டுபிடிப்பு கொள்கை குறியீடு 2019: இந்தியா 36 வது இடம்
- அமெரிக்க சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸின் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கை மையம் (GIPC, Global Innovation Policy Center) சமீபத்தில் தனது, 2019 ஆம் ஆண்டிற்கான "கண்டுபிடிப்பு கொள்கை குறியீட்டு" (Innovation Policy Index 2019) பட்டியலை வெளியிட்டது. (2019 US Chambers International IP Index).
- 50 நாடுகள் கொண்ட, 2019 கண்டுபிடிப்பு கொள்கை குறியீட்டு பட்டியலில், இந்தியா 36 வது இடத்த்தை பெற்றுள்ளது.
பன்னாட்டு கடல்சார் பயிற்சி "கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019"
- ஜிபூட்டி, மொசாம்பிக் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் அருகே நடைபெற்ற "கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019" (Cutlass Express 2019) என்ற பன்னாட்டு கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படையின் "INS Trikand" போர் கப்பல் பங்கேற்றது.
- "கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019" (8th edition of multinational maritime exercise) பயிற்சி, 201ஜனவரி 27 முதல் பிப்ரவரி 19 வரை நடைபெற்றது.
இந்திய விமானப்படைக்கு புதிய 4 "சினூக்' ஹெலிகாப்டர்கள்
- விமான தயாரிப்பு முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து, புதிதாக 4 சினூக் ரக (CH47F (I) Chinooks) ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. (Boeing Chinook helicopters for IAF).
- குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
- இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு செல்லப்பட்டும். இந்திய விமானப் படையில் நிகழாயாண்டில் சேர்க்கப்படும்.
- இராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றையும், ராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதற்கும்,
- பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், போர்க்காலங்களில் ஒட்டுமொத்தமாக அகதிகளை வெளியேற்றுவதற்கும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் சினூக் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம்.
- அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
"ஜல்பைகுரியில் அமையும் கல்கத்தா உயர்நீதிமன்ற "Circuit Bench"
- கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் Circuit Bench மேற்கு வங்காள மாநிலத்தின் "ஜல்பைகுரி (Jalpaiguri)" மாவட்டத்தில் அமைக்கப்படஉள்ளது? ஜல்பைகுரி (Jalpaiguri)
- மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பய்குரியில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்ச் அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தார்ட் ஆரிய பழங்குடியினர்"
- அண்மையில் செய்திகளில் வெளிப்பட்ட "தார்ட் ஆரிய பழங்குடி" (Dard Aryan Tribe), மக்கள் ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir) மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் லடாக் பகுதியில் வசிக்கும் "தார்ட் ஆரிய பழங்குடியினர்", ஆடை அலங்காரங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அண்மையில் டெல்லியில் "தார்ட் ஆரிய பழங்குடி விழா 2019 (Dard Aryan Festival (Aryan Utsav) நடைபெற்றது.
சென்னை IIT-இல் "இராபர்ட்-பாஷ் மையம் (RBC-DSAI)
- தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான "இராபர்ட்-பாஷ் மையம் (RBC-DSAI) சென்னை, இந்திய அறிவியல் கழகத்தில் (IIT Madras) நிறுவபட்டுள்ளது. (Robert Bosch Center for Data Science and Artificial Intelligence, RBC-DSAI).
தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
திருப்பூரில் பிரதமர் பங்கேற்ற அரசு விழா (10.2.2019)- குறிப்புகள்
- டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் போக்குவரத்து
- சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை, பிப்ரவரி 10 அன்று, திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் புதுப்பாளையம் பிரிவில் நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- மெட்ரோ ரெயில் சேவையின் முதல் கட்டம் முடிவடைந்து செயல் பட்டு வந்துள்ளது.
- முதல் வழித்தடம்:
- சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை
- 2-வது வழித்தடம்:
- சென்டிரல் முதல் பரங்கிமலை வரை
- திருப்பூரில் நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த பணிகள் விவரம்:
- திருப்பூரில் ரூ.75 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணி.
- சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டம்.
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம்.
- சென்னை கே.கே.நகரில் 19 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மற்றும் 470 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை.
- எண்ணூர் கடற்கரையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்) முனையம்.
- சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (CPCL) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டம்.
- சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன மயமாக்கல் பணியை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
- சென்னையில் ஒரு நாளுக்கு 260 விமானங்கள் புறப்பாடும், 260 விமானங்கள் வருகையுமாக உள்ளது. வருங்காலத்தில் இந்த விமான சேவை அதிகரிக்க உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்
இந்திய-நியூசிலாந்து T20 கிரிக்கெட் தொடர் 2019 - குறிப்புகள்
- நியூசிலாந்து நாட்டில், இந்திய-நியூசிலாந்து (ஆண்கள்) அணிகள் இடையே நடந்த T20 கிரிக்கெட் போட்டித்தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- நியூசிலாந்து அணி விக்கெட் கீப்பர் "டிம் செய்பெர்ட்" தொடர்நாயகன் வ#3007;ருதை பெற்றார். (India New Zealand T20I series 2019).
- இந்திய-நியூசிலாந்து பெண்கள்அணிகள் இடையே நடந்த T20 கிரிக்கெட் போட்டித்தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மிக வேகமாக T20 ஐம்பது ரன்கள் - "ஸ்மிருதி மந்தானா" சாதனை
- அண்மையில் T20 கிரிக்கெட் போட்டியில் மிக வேகமாக ஐம்பது ரன்களை எடுத்த (Indian female cricketers, scored fastest T20I fifty) வீராங்கனை என்ற சிறப்பை இந்திய வீராங்கனை "ஸ்மிருதி மந்தானா (Smriti Mandhana)" பெற்றுள்ளார்.
- நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் "ஸ்மிருதி மந்தானா" 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
டென்னிஸ்
2019 சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை: "கோரென்டின் மோடெட்" சாம்பியன்
- 2019 சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கோரென்டின் மோடெட், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹாரிசை வீழ்த்தி பட்டத்தை வென்றார்
2019 தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி: "ரயில்வே அணி" சாம்பியன்
- 2019 தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி (A DIVISION) சாம்பியன்ஷிப் போட்டியில் ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- ரயில்வே அணி பஞ்சாபை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
- முன்னதாக மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரோலிய அணி 4-1 என பஞ்சாப் சிந்து வங்கியை வென்று வெண்கலம் வென்றது.
- தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி 2019 - முடிவுகள்
- ரயில்வே அணி - தங்கப்பதக்கம்
- பஞ்சாப் அணி - வெள்ளி
- பெட்ரோலிய அணி - வெண்கலம்.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
பெண்களுக்கான சர்வதேச அறிவியல் தினம் - பிப்ரவரி 11
- பெண்களுக்கான சர்வதேச அறிவியல் தினம், பிப்ரவரி 11 அன்று கடைபிடிக்கப்படுகிறது. (International Day of Women and Girls in Science, 11 February).
- பெண்களுக்கான சர்வதேச அறிவியல் தின மையக்கருத்து (International Day of Women and Girls in Science 2019 Theme): "Investment in Women and Girls in Science for Inclusive Green Growth".