TNPSC Current Affairs 12th February 2019




Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs February 12, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
முக்கிய தினங்கள்/ Important Days 
தேசிய குடற்புழு நீக்க தினம் - பிப்ரவரி 10
  • தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day February 10, 2019) பிப்ரவரி 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
தேசிய யுனானி தினம் (National Unani Day) - பிப்ரவரி 11
  • யுனானி மருத்துவ ஆய்வாளர் ஹகிம் அஜ்மல் கான் பிறந்த நாளான பிப்ரவரி 11 ஆம் தேதி, ஆண்டுதோறும் தேசிய யுனானி தினம் (National Unani Day) கொண்டாடப்படுகிறது.
தேசிய உற்பத்தித்திறன் தினம் - பிப்ரவரி 12
  • 2019 பிப்ரவரி 12 ஆம் தேதி தேசிய உற்பத்தித்திறன் தினமாக (National Productivity Day February 12) கடைபிடிக்கப்படுகிறது. 
  • தேசிய உற்பத்தித்திறன் வாரம் - பிப்ரவரி 12-18 
  • 2019 பிப்ரவரி 12 முதல் 18 வரை தேசிய உற்பத்தித்திறன் வாரமாக (National Productivity Week 2019) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 தேசிய உற்பத்தித்திறன் வாரத்தின் மையக்கருத்து: “Circular Economy for Productivity & Sustainability”
உலக வானொலி தினம் (World Radio Day) - பிப்ரவரி 13 
  • ஆண்டுதோறும் பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் (World Radio Day) கொண்டாடப்படுகிறது. 
  • ஐக்கிய நாடுகள் சபைய 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது. இந்த நாளில் தான் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 13 முதல்முறையாக ரேடியோ தொடங்கப்பட்டது. 
  • 2019 ஆண்டின் ரேடியோ தின (World Radio Day Theme 2019) மையக்கருத்து:
    • உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி (Dialogue, Tolerance and Peace).
இந்திய நிகழ்வுகள்/ National Affairs 
‘ககன்யான்’ திட்டம்: விண்வெளிக்கு செல்ல 10 வீரர்கள் தேர்வு
  • அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொள்ள இருக்கிறது. 2021-ம் ஆண்டு ‘ககன்யான்’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
  • ‘ககன்யான்’ திட்டத்துக்காக விமானப்படையில் பணியாற்றும் 10 பேர் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.
  • பயிற்சியின் முதல் இரண்டு கட்டங்கள் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவ நிறுவனம் (ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்) மற்றும் விமானப்படை நிறுவனத்தில் (இந்திய ஏர்போர்ஸ் இன்ஸ்டிட்யூட்) நடக்கும். அதன் பிறகு இறுதி கட்டமாக வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
  • அதில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். 
  • ‘ககன்யான்’ திட்டம் மூலம் 16 நிமிட பயணத்தில் 3 இந்திய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் கள். அவர்கள் 7 நாட்கள் வரை விண்வெளியில் உள்ள ‘லோ ஆர்பிட்டில்’ தங்கி பின்பு பூமிக்கு திரும்புவார்கள். இந்த திட்டத்தில் ஒரு பெண் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது, இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். 
Let's Talk On Air: Conversations with Radio Presenters - புத்தகம் வெளியீடு 
  • ராகேஷ் ஆனந்த் பக்ஷி (Rakesh Anand Bakshi),“Let's Talk On Air: Conversations with Radio Presenters" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். உலக வானொலி தினமான (World Radio Day) பிப்ரவரி 13 அன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs

ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம்

  • சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகை எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் (Chennai Central metro station) ஆசியாவிலேயே பெரிய சுரங்க ரெயில் நிலையம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
  • இந்த ரெயில் நிலையத்தில் ரெயில்கள் வந்து செல்ல மட்டும் 2 அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • சென்டிரல்-பரங்கிமலை செல்லும் ரெயில்கள் முதல் அடுக்கிலும்(2-வது தளம்), வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் செல்லும் ரெயில்கள் 2-வது அடுக்கிலும்(3-வது தளம்) வந்து செல்கின்றன. தரை தளத்தில் இருந்து 60 அடி ஆழம் மற்றும் 100 அடி ஆழத்தில் இவை ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டு உள்ளன. 
  • சென்டிரல் சுரங்க ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரெயில்வே தலைமையகம், பூங்கா மற்றும் பூங்கா நகர் ரெயில் நிலையங்கள், ரிப்பன் மாளிகை, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு செல்லும் வகையில் 5 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • இந்த ரெயில் நிலையத்துக்கு சுமார் 1 லட்சம் பயணிகள் வந்து செல்லலாம். 500 கார்கள் மற்றும் ஆயிரம் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்துவதற்கும் ‘பார்க்கிங்’ வசதி உள்ளது. 
பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் 
  • தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பள்ளி மாணவ-மாணவிகள், 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது.
  • மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு, 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட வேண்டும்.
  • இந்த மரக்கன்றை மாணவர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திலோ, சொந்த நிலங்களிலோ, பள்ளி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ நட்டு ஒரு ஆண்டு அதனை பராமரிக்க வேண்டும்.
  • அப்படி 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை முழுமையாக நிறைவேற்றும் மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் ஆறு பாடங்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். 
60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் தலா ரூ.2 ஆயிரம் - சிறப்பு நிதி உதவி 
  • தமிழ்நாட்டில் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்களும், நகர்ப்புரத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியை பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-2019 துணை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படஉள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை 11.2.2019
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் (T 20) போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC T20 Cricket Rankings 2019) 11.2.2019 அன்று வெளியிட்டது.
  • அணிகள் தரவரிசை 
    1. பாகிஸ்தான் அணி 
    2. இந்திய அணி 
    3. தென்ஆப்பிரிக்க அணி
  • பேட்ஸ்மேன்கள் தரவரிசை 
    1. பாபர் அசாம் (பாகிஸ்தான்)
    2. காலின் முன்ரோ (நியூசிலாந்து)
    3. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) 
  • பந்து வீச்சாளர்கள் தரவரிசை 
    1. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்
    2. குல்தீப் யாதவ் (இந்தியா) 
    3. ஷதாப் கான் (பாகிஸ்தான்)
  • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை 
    1. மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) 
    2. ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 
    3. முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 
டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை 11.2.2019

  • உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் (

    ATP Rankings 2019) 

    தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் 11.2.2019 அன்று வெளியிட்டது. 
  • பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ( 97-வது இடம்) 
    • உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • ஆண்கள் ஒற்றையர் தரவரிசை 
    1. ஜோகோவிச் (செர்பியா) 
    2. ரபெல் நடால் (ஸ்பெயின்)
    3. அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி)
    4. ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா)
    5. கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 
  • பெண்கள் ஒற்றையர் தரவரிசை 
    1. நவோமி ஒசாகா (ஜப்பான்)
    2. கிவிடோவா (செக் குடியரசு) 
    3. சிமோனா ஹாலெப் (ருமேனியா) 
    4. ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 
    5. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 
விருதுகள்/ Awards and Honors
'பாப்டா' விருதுகள் 2019
  • பிரிட்டன் திரைப்பட துறையின் உயரிய கவுரவமாக பாப்தா' விருதுகள் கருதப்படுகின்றன. 72வது பாப்தா விருது வழங்கும் விழா, 10.2.2019 அன்று லண்டனில் நடந்தது. (72nd British Academy Film Awards 2019, BAFTAs) 
  • தி பேவரைட் திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. ரோமா திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது. 
    • சிறந்த திரைப்படம் - ரோமா (மெக்சிகோ) 
    • ஆங்கிலம் அல்லாத மொழியி சிறந்த படம் - ரோமா 
    • சிறந்த இயக்குனர் - அல்போன்சா குவரோன் (ரோமா) 
    • சிறந்த ஒளிப்பதிவாளர் - அல்போன்சா குவரோன் (ரோமா) 
    • சிறந்த நடிகர் விருது - ராமி மாலேக் (போகிமியன் ராப்சோடி) 
    • சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மன் (தி பேவரைட்)
    • சிறந்த துணை நடிகர் - மஹெர்ஷாலா அலி (கிரீன் புக்)
    • சிறந்த துணை நடிகை - ரேச்சல் வைசிஸ் (தி பேவரைட்).
கிராமி விருதுகள் 2019 - தகவல்கள்
  • அமெரிக்காவில் இசைத் துறையில் சாதனை படைப்போருக்கு வழங்கப்படும் உயரிய விருதான "கிராமி' விருதுகள் 1959-ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டிற்கான 61-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 10.2.2019 அன்று நடைபெற்றது. (

    61st Annual Grammy Awards 2019).

  • 2019 கிராமி விருதுகள் விழாவில் 49 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்த விழாவை 15 முறை கிராமி விருதை பெற்றவரான அலிசியா கீஸ் தொகுத்து வழங்கினார். 
  • ஆண்டின் சிறந்த பாடலாக childish gambino-வின் This Is America என்ற மியூசிக் அல்பம் தேர்வு செய்யப்பட்டது.
  • பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா, மூன்று பிரிவுகளில் விருது வென்றுள்ளார். 
  • எலெக்ட்ரோனிக் அல்பம் மற்றும் நடனப்பிரிவில் உமன் வோர்ல்ட் வைட் (woman world wide) பாடலுக்கு விருது அளிக்கப்பட்டது.
  • இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.