TNPSC Current Affairs January 17th and 18th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National AffairsEWS 10% ஒதுக்கீடு: குஜராத் மாநிலத்தில் அமல்
- பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான (EWS-Economically Weaker Sections) 10% ஒதுக்கீடு குஜராத் மாநிலத்தில் (India’s first state to implement 10% quota) முதன் முதலாக அமலாகவுள்ளது.
- போதை மருந்து முறைகேடுகளை களைய "ஐந்தாண்டு திட்டம்"
- இந்திய அரசு, நாட்டில் போதை மருந்து முறைகேடுகளை களைய (five-year action plan to address drug abuse) 2018-2023 ஆகிய ஐந்தாண்டு கால திட்டத்தை தயாரித்துள்ளது.
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் (EWS) 10% இடஒதுக்கீடு இந்தியாவில் முதல் மாநிலமாக குஜராத்தில் (14.1.2019) நிறைவேற்றப்பட்டது.
- அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து ‘சீ பாக்ஸ்’ (Shebox, www.shebox.nic.in/) என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளனர்.
- 2018 வணிகம் செய்ய எளிதான மாநிலங்கள் பட்டியலில் (ACI's Ease Of Doing Business (EDB) Index 2018) ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2 வது இடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
- தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (FEO, Fugitive Economic Offender)" என்று முதன்முறையாக இந்திய வர்த்தகர் "விஜய் மல்லையா (Vijay Mallaya)" அறிவிக்கப்பட்டுள்ளார்.
- கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யார் வனவிலங்கு காப்பகத்தில் அகஸ்தியர் கூடம் மலை உள்ளது. 1,868 மீட்டர் உயரம் கொண்ட அகஸ்தியர் கூடம் மலையில் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கப்பட்டுள்ளது.
மாநாடுகள் / Conferences