TNPSC Current Affairs 18th February 2019




Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs February 18, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானப்பொறியாளர் "ஹினா ஜெய்ஸ்வால்"
  • இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக ஹினா ஜெய்ஸ்வால் (Hina Jaiswal, IAF's First Woman Flight Engineer) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சண்டிகர் நகரை சேர்ந்த விமான லெப்டினென்ட் ஹினா ஜெய்ஸ்வால் (Hina Jaiswal), பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படையில் (IAF, Indian Air Force) ஒரு விமானப் பொறியாளராகப் பணியாற்ற முதல் பெண்மணியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அர்ஜென்டினா அதிபர் "மவுரிசியோ மக்ரி" இந்தியா வருகை
  • Argentina’s President Mauricio Macri India Visit 2019
  • அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி (Mauricio Macri), 3 நாள் பயணமாக (17.2.2019) இந்தியா வந்துள்ளார். 
  • இந்தியா-அர்ஜென்டினா இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 
தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் 'டாக்டர் அனூப் சத்பதி குழு'
  • "தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் முறைகள் (Determining the Methodology for Fixation of the National Minimum Wage)" குறித்த டாக்டர் அனூப் சத்பதி (Dr Anoop Satpathy expert committee) தலைமையிலான நிபுணர் குழு சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 
  • 2018 ஜூலை மாதத்தை கணக்கீடாக கொண்டு, தேசிய குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 375 அல்லது மாதத்திற்கு ரூ 9,750 ரூபாய் என இக்குழு பரிந்துரைத்துள்ளது.
மாநாடுகள்/ Conferences
மியூனிக் பாதுகாப்பு மாநாடு 2019
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-17 வரை மூன்று நாள்கள் மியூனிக் பாதுகாப்பு மாநாடு, ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்றது. 
  • 2019 Munich Security Conference, 15-17 Feb 2019, Munich, Germany
  • இந்தியா சார்பில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பங்கஜ் சரண், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். 
  • இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்பட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தற்கால - எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்பட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தற்கால - எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
  • இரண்டாம் உலகப் போர் போன்ற நிகழ்வு உலகில் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும், உலகின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கும் நோக்கிலும், ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தின் மியூனிக் நகரில் 1963-ஆம் ஆண்டில் பாதுகாப்பு மாநாடு ஒன்றை, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய "இவால்டு ஹென்க்" நடத்தினார். 
  • 1963 முதல், இடைப்பட்டக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் தவிர்த்து அந்த மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுகள்/ Awards and Honors
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா 2019
  • ஜெர்மனி தலைநகர் பெர்லினில், 69 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா (2019 Berlin International Film Festival), 2019 பிப்ரவரி 7 முதல் 17 வரை நடந்தது.
  • தங்கக்கரடி விருது (Golden Bear Award) - Synonyms
  • Nadav Lapid இயக்கிய இஸ்ரேலிய-பிரெஞ்சு திரைப்படம் "Synonyms", தங்கக்கரடி விருதை (Golden Bear) வென்றது.
  • ‘தி ஜியு தியான் சாங்’ என்கிற சீன படத்தில் கணவன்-மனைவியாக நடித்ததற்காக வாங் சிங்சுவான் மற்றும் யோங் மே ஆகியோருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ் 2019: "எலிஸ் மெர்டென்ஸ்" சாம்பியன்
  • 2019 ஆம் ஆண்டின் கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் (Qatar Total Open 2019) போட்டி சாம்பியன் பட்டத்தை பெல்ஜியம் நாட்டின் "எலிஸ் மெர்டென்ஸ்" (Elise Mertens) வென்றுள்ளார்.
  • 2019 கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகா நகரில் நடந்தது. 
  • எலிஸ் மெர்டென்ஸ், ருமேனியாயாவின் சிமோனா ஹாலெப் அவர்களை 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றார். 
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை (17.2.2019) 
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC Test Cricket Rankings), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (17.2.2019) வெளியிட்டது. 
  • பேட்ஸ்மேன்கள் தரவரிசை
  • விராட் கோலி (இந்தியா)
  • கனே வில்லியம்சன் (நியூசிலாந்து)
  • சீட்டேஸ்வர் புஜாரா (இந்தியா)
  • பந்து வீச்சாளர் தரவரிசை
  • பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
  • காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா).
  • பிக்பாஷ் கிரிக்கெட் 2019: "மெல்போர்ன் ரெனகேட்ஸ்" அணி சாம்பியன்
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, 2019 பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான "மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி" சாம்பியன் பட்டத்தை வென்றது.
நடைப்பந்தயம் 

தேசிய ஓபன் நடைப்பந்தய போட்டி, சென்னை
  • 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தன. இதில் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில், ராஜஸ்தானை சேர்ந்த ஜிதேந்தர்சிங் ரத்தோர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்த்தை வென்றார். 
  • ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் (20 வயதுக்குட்பட்டோர்) நடைப்பந்தயத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுராஜ் பன்வார் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் பெண்கள் பிரிவில் உத்தரகாண்ட் வீராங்கனை ரோஜி பட்டீல் தங்கப் பதக்கத்தை வென்றார்.