|
TNPSC Current Affairs February 2-3, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள்/ National Affairs
Ariane-5 ராக்கெட் மூலம் ஏவப்படும் "GSAT-31" செயற்கைகோள்
- தகவல் தொடர்பு வசதிக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள் (GSAT-31), பிப்ரவரி 6-ந் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ (Ariane-5, VA247)மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
- 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக (GSAT-31 is the country’s 40th communication satellite),‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation)‘ISRO’ உருவாக்கி உள்ளது.
- ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டது, ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ (I-2K Bus) வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள் ஆகும்.
- இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீனரக ‘சிக் சவர்’ துப்பாக்கிகள் (Sig Sauer rifles) வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ‘சிக் சவர்’ துப்பாக்கிகள், சீனாவுடனான 3600 கி.மீ. தூர எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு இன்சாஸ் (Insas rifles) துப்பாக்கிகளுக்கு பதிலாக வழங்கப்படஉள்ளது.
- தமிழ்நாட்டில் செயல்படும் பல்லவன்-பாண்டியன் கிராம வங்கிகள் இணைந்து "தமிழ்நாடு கிராம வங்கி" என்ற பெயரில் (Tamil Nadu Grama Bank) புதிய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
- "தமிழ்நாடு கிராம வங்கி" இந்தியன் வங்கி கட்டுப்பாட்டில், இந்தியன் வங்கியின் சார்பு வங்கியாக இயங்க உள்ளது.
- சேலம் தலைமையகம்
- ‘தமிழ்நாடு கிராம வங்கி’ ஏப்ரல் 1-ந்தேதி முதல் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.
- தமிழகத்தில் இந்தியன் வங்கியின் சார்புடைய வங்கியாக செயல்படும் பல்லவன் கிராம வங்கியும் ( Pallavan Grama Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்புடைய வங்கியாக செயல்படும் பாண்டியன் கிராம வங்கியும் (Pandyan Grama Bank) செயல்பட்டு வந்தன.
- சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தற்போது 625 கிளைகளுடன், ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிறப்பான வங்கி திட்டங்களை, வங்கி சேவைகளை வழங்க உள்ளது.
- Pallavan Grama Bank and Pandyan Grama Bank two regional rural banks merged as the new entity as Tamil Nadu Grama Bank.
- நிதி அமைச்சக பொறுப்பை கவனிக்கும் ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பிப்ரவரி 1, 2019 பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், இடைக் கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
- 2019-2020 இடைக் கால நிதிநிலை அறிக்கை - முக்கிய அம்சங்கள்
- வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுகிறது. வரி விலக்கு உச்சவரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2 ஆண்டுகளில் வரி கணக்குகள் தாக்கல் பணிகள் முற்றிலும் மின்னணு மயமாக்கப்படும்.
- வரி வருவாய் தற்போது கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
- வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 6 கோடியே 85 லட்சமாக உயர்ந்து உள்ளது.
- 2 வீடுகளுக்கு வீட்டுக் கடன் வட்டி சலுகை வழங்கப்படும்.
- தொழிலாளர் குடும்பத்துக்கான நலநிதி ரூ.2.6 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுகிறது.
- பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 22 வகை வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையை விட 1½ மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.
- 2 ஹெக்டேருக்கும் குறைவான (சுமார் 5 ஏக்கர் வரை) சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
- இராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இராணுவத்தில் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 2019-2020-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுகிறது.
- மீன்வளத்துறை என்ற பெயரில் தனி அமைச்சகம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இலவச சமையல் கியாஸ் இணைப்பு இதுவரை 6 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ‘ஆயுஷ்மான் பாரத்’ சுகாதார திட்டத்தின் கீழ் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
- அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் 100 ரூபாய் செலுத்தினால், 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தேசிய அளவில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.38 ஆயிரத்து 572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.27 ஆயிரத்து 584 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக ரூ.58 ஆயிரத்து 166 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் மின்னணு மயமாக்கப்படும்.
- 22-வது எய்ம்ஸ் மருதுவமனை அரியானா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
- சினிமா படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
- பசுக்கள் மேம்பாட்டுக்காக "ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- இடஒதுக் கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உள்ளது.
- இதற்காக கல்வி நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
- 2019-2020-ம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாகவும்,
- 2020-2021-ம் நிதி ஆண்டில் 3 சதவீதமா#3006;கவும் இருக்கும்.
- இந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருக்கும்.
- மேலும் இந்த ஆண்டில் மொத்த செலவு ரூ.27 லட்சத்து 84 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
நியமனங்கள்/ Appointments
CBI புதிய இயக்குனராக "ரிஷி குமார் சுக்லா" நியமனம்
- மத்திய புலன் விசாரணை பணியகத்தின் (CBI, Central Bureau of Investigation), புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். (New CBI director Rishi Kumar Shukla)
- IPS அதிகாரி ரிஷி குமார் சுக்லாவை CBI இயக்குனராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்/ Economic AffairsGST வருவாய் - ஜனவரி 2019
- 2019 ஜனவரி GST
- மொத்த GST வருவாய் ரூ.1,02,503 கோடி
- மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ.17,763 கோடி
- மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ.24,826 கோடி
- ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (IGST) ரூ.51,225 கோடி
- செஸ் ரூ.8,690 கோடி
- 2018 டிசம்பர் GST வருவாய்
- ரூ.94,725 கோடி
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairsகால்பந்து
ஆசிய கோப்பை கால்பந்து 2019: கத்தார் அணி ‘சாம்பியன்’
- 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் (2019 AFC Asian Cup), ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற்றது.
- அபுதாபியில் நடந்த இறுதிப்போட்டியில் கத்தார் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
- அல்மோஸ் அலி (9 கோல்கள்)
- 2019 ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் மதிப்புமிக்க வீரராக "கத்தார் வீரர் அல்மோஸ் அலி" தேர்வு செய்யப்பட்டார்.
- அல்மோஸ் அலி, ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தொடரில் அதிக கோல் அடித்த வீரர் (9 கோல்கள்) என்ற சாதனை படைத்தார்.
- 2021-ம் ஆண்டில் நடக்கும் ‘பிபா’ கான்பெடரேஷன் கோப்பை போட்டிக்கு கத்தார் தகுதி பெற்றது.
புரோ கைப்பந்து லீக் போட்டி 2019
- முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி 2019, பிப்ரவரி 2 அன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
- கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை - மிதாலி ராஜ் சாதனை
- 200 ஒருநாள் போட்டியில் ஆடிய முதல் வீராங்கனை என்ற சிறப்பை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் "மிதாலி ராஜ்" (Mithali Raj, first female cricketer played 200 ODIs) பெற்றுள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு 200-வது ஒருநாள் போட்டியாகும்.
- 36 வயதான மிதாலி ராஜ் 1999-ம் ஆண்டு, முதல் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய பெண்கள் அணி இதுவரை 263 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறது.
- இதில் 200 ஆட்டத்தில் மிதாலி ராஜ் இடம் பிடித்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒரு நாள் போட்டி வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை (2.2.2019) வெளியிட்டுள்ளது.
- இப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana), பேட்டிங் தரவரிசையில்முதலிடத்தை பிடித்துள்ளார்.
- பந்து வீச்சாளர் தரவரிசையில் பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் முதலிடத்தில் உள்ளார்
- ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)
- எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
- மெக் லானிங் (ஆஸ்திரேலியா)
- சட்டர்த்வெய்ட் (நியூசிலாந்து)
- மிதாலிராஜ் (இந்தியா).
- மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு 2019-2020-ம் ஆண்டுக்கு ரூ.2,216.92 கோடியாக உயர்த்தப்பட்டுருக்கிறது. இவற்றில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு (சாய்) ஒதுக்கப்படும் தொகை ரூ.395 கோடியில் இருந்து ரூ.450 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கொல்கத்தாவில் நடந்த, 2019 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தகுதி சுற்று, இத்தாலி அணி 3-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.
- இதன் மூலம் இத்தாலி அணி மாட்ரிட்டில் 2019 நவம்பர் மாதம் நடைபெறும் பிரதான சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி அடுத்து ஆசிய மண்டல போட்டியில் விளையாடஉள்ளது.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
உலக ஈர நிலங்கள் தினம் - பிப்ரவரி 2
- யுனெஸ்கோ அமைப்பு, பிப்ரவரி 2-ஆம் நாளை ஈர நில நாள் (2 February
- World Wetlands Day) என அறிவித்துள்ளது.
- ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்க உதவுகிறது.
- கடல்கோள் என்னும் சுனாமி அலைகளை தடுக்கிறது.
- கடல் நீர் உட்புகாமல் தடுக்கிறது. வெள்ள நீரை உள்வாங்கி வெள்ள சேதத்தை தடுக்கிறது.
- 2019 உலக ஈர நிலங்கள் தின (World Wetlands Day 2019 Theme) மையக்கருத்து:
- "ஈரநிலங்கள் மற்றும் காலநிலை மாற்றம்" (Wetlands and Climate Change).
- World Wetlands Day 2019, 2 February 2019
- 2 February is World Wetlands Day.
- This day marks the date of the adoption of the Convention on Wetlands on 2 February 1971, in Ramsar, Iran.
- It commemorates the need to maintain the ecological character of wetlands and to plan 'wise' for its sustainable use.
- World Wetlands Day 2019 theme is "Wetlands and Climate Change".
- தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள், பிப்ரவரி 3, 2019 அன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணா 1969 பிப்ரவரி 3 அன்று காலமானார்.
- 1967-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஆனார். சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்.
- இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கினார்.
- மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தின் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்ற புதிய பெயரினை சூட்டினார்.
- ஈரானில் மதகுரு அயதுல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம், தலைநகர் டெஹ்ரானில் பிப்ரவரி 1 அன்று தொடங்கி பிப்ரவரி 11 கடைபிடிக்கப்படுகிறது.
- ஈரானில் அயதுல்லா கோமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பெஹலவி வம்ச மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது.