TNPSC Current Affairs 23-24, January 2019 - Download PDF

Smiley face

TNPSC Current Affairs 23-24, January 2019 - Download PDF| Selvakumar | kalvipriyan



TNPSC Current Affairs January 23rd and 24th  January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக நிகழ்வுகள் / International Affairs 
சீனாவின் மக்கள்தொகை - 139 கோடி 
  • சீனாவின் மொத்த மக்கள் தொகை, 2018-ஆம் ஆண்டில் 139.5 கோடியை எட்டியுள்ளது. 
  • இதில், 60 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை 24.9 கோடியாக (18%) உள்ளது. 
  • 2018-ஆம் ஆண்டில் மட்டும் 1.52 கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
  • நேபாளத்தில் ரூ.100-க்கு அதிகமான இந்திய கரன்சிக்குத் தடை
  • நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளும், வர்த்தகர்களும், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் ரூ.100-க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கரன்சி நோட்டுகளை வைத்திருக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் நேபாள ராஷ்டிர வங்கி தடை விதித்துள்ளது.
  • ரூ.100 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள இந்திய கரன்சிகளை பொதுமக்களும், வர்த்தகர்களும் பயன்படுத்தலாம்.
இந்திய நிகழ்வுகள் / National Affairs 
புது டெல்லியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம் 
  • 2019 23 ஜனவரி, பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில் புது டெல்லியில் செங்கோட்டையில் (Red Fort) "சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியக"த்தை (Subhash Chandra Bose museum) திறந்து வைத்தார்.
அரசமைப்புச் சட்டத்தின் 371(A) பிரிவு 
  • அரசமைப்புச் சட்டத்தின் 371(A) பிரிவு நாகாலாந்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. அதன்படி, நாகா இன மக்களின் மதம் மற்றும் சமூகம் சார்ந்த நடைமுறைகள், நாகா பாரம்பரிய சட்டம் மற்றும் செயல்முறை, நில உரிமை, நில மற்றும் மூலதனங்கள் பகிர்வு ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்துக்கு, நாகாலாந்து சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையேல், மத்திய அரசு இயற்றும் சட்டம் மாநிலத்துக்குப் பொருந்தாது.
  • 2019 ஜனவரி 8-ஆம் தேதி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • அரசமைப்புச் சட்டத்தின் 371(A) பிரிவின்படி, நாகாலாந்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், அங்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பொருந்தாது என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில முதல்வர் நெபியூ ரியோ கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு உரிமைகள் வழங்கும் 35 (A) சட்டப்பிரிவு
  • ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் 35 (A) சட்டப்பிரிவு ஆகும். 1954-ஆம் ஆண்டு அரசமைப்பில் சேர்க்கப்பட்ட 35 (A) சட்டப்பிரிவானது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தையும், அங்குள்ள மக்களுக்கு சிறப்பு உரிமைகளையும் வழங்குகிறது. 
ஜம்மு-காஷ்மீரில் "ராவி நதி பாலம்" திறப்பு
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராவி நதி மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 22.1.2019 அன்று திறந்து வைத்தார்.
  • இந்த பாலத்தின் மூலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் இடையேயான பயண தூரம் 45 கிலோ மீட்டரில் இருந்து 8.6 கிலோ மீட்டராக குறைகிறது. 
ஆந்​திராவில் காபு சமூ​கத்​தி​ன​ருக்கு 5% உள்​ஒ​துக்​கீடு
  • மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய 10 சத​வீத ஒதுக்​கீட்​டின் கீழ், பொரு​ளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 5 சத​வீத இட​ஒ​துக்​கீடு வழங்​கப்​ப​டும் என்று ஆந்​திர அரசு அறி​வித்​துள்​ளது. மீத​முள்ள 5 சத​வீ​தத்தை காபு சமூக மக்​க​ளுக்கு உள்​ஒ​துக்​கீ​டாக வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
மாநாடுகள் / Conferences
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு (PBD) 2019 
  • உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி நகரில்,15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (15th Pravasi Bharatiya Divas, Convention, 21-23 January 2019, Varanasi, Uttar Pradesh) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 21.1.2019 தொடங்கி வைத்தார்.
  • 2019 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் (2019 PBD Theme) கருப்பொருள்:
  • "புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்திய புலம்பெயர்ந்தோரின் பங்கு" (Role of Indian Diaspora in building New India), என்பதாகும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு, வழக்கமாக ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) நடைபெறும் கும்பமேளா மற்றும் 70-ஆவது இந்திய குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க  வசதியாக இந்த மாநாடு இந்த முறை 2019 ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
  • இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சகமும் உத்தரப் பிரதேச அரசும் ஒன்றிணைந்து இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
  • இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த "மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத்" பங்கேற்றுள்ளார். 
விருதுகள் / Awards 
ஆஸ்கர் விருதுகள் 2019: பரிந்துரை பட்டியல் வெளியீடு 
  • சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் 21.1.2019 அன்று வெளியானது.
  • உலக திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள், 2019 பிப்ரவரி 22ஆம் தேதி அளிக்கப்படவுள்ளன.
பொருளாதார நிகழ்வுகள் / Economic Affairs
இந்தியா, வேகமாக வளரும் பொருளாதார சக்தி: IMF கணிப்பு 
  • சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை சர்வதேச செலாவணி நிதியம் (IMF) வாஷிங்டனில் 20.1.2019 அன்று வெளியிட்டது. 
  • இந்த அறிக்கையில் (IMF World Economic Outlook January 2019), சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
  • 2019-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.
  • 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு 
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது, 
  • சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. 
  • 1990 ஆம் ஆண்டு 3.9 சதவீதமாக இருந்த பிறகு, தற்போது, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது (2018) பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
சென்னையில் "மாணவர் காவல் படை" தொடக்கம்
  • தமிழகத்தில் முதன் முதலில் சென்னையில் "மாணவர் காவல் படை" தொடங்கப்பட்டுள்ளது. 
  • சென்னையில் "மாணவர் காவல் படை" ஜனவரி 22 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும், நல்ல சிந்தனையையும் வளர்க்கும் வகையில் தமிழக காவல்துறை, வருவாய்த் துறை,பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளன. 
  • இந்த மாணவர் படையில், சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும், 138 பள்ளிகளைச் சேர்ந்த 6,072 மாணவ-மாணவிகள் இணைந்துள்ளனர். 
  • மாணவர் காவல் படைத் திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் 2018 ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 
இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதை 
  • சென்னை புறநகர் ரயில் சேவை 235.5 கி.மீ. தொலைவு சுற்றுப் பாதையாக வருகிறது. இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறவுள்ளது. தற்போது சென்னை புறநகர் ரயில் சேவை 225.5 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படுகிறது.
  • தக்கோலம் முதல் அரக்கோணம் வரையிலான அந்த 9.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்சேவை தொடங்கிவிட்டால் "இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக" மாறும்.
  • தற்போதைக்கு கொல்கத்தாவில்தான் இந்தியாவிலேயே மிக நீண்ட ரயில்வே (35 கி.மீ.) சுற்றுப் பாதை உள்ளது. 
  • 2019 ஜனவரி 25ம் தேதி இப்புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பிப்ரவரி இறுதியில் சேவை தொடங்க உள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை 235.5 கி.மீ.
  • சென்னை கடற்கரையில் (0 கி.மீ.) இருந்து பயணத்தைத் தொடங்கினால் அங்கிருந்து தாம்பரம் (28.6 கி.மீ.) வந்து - செங்கல்பட்டு (59.6 கி.மீ.) பிறகு - காஞ்சிபுரம் (95.6 கி.மீ.) அப்படியே - அரக்கோணம் (123.5 கி.மீ.) - திருவள்ளூர் (162.3 கி.மீ.) - நேராக பெரம்பூர் (225.5 கி.மீ.) பிறகு அங்கிருந்து சென்னை கடற்கரை (232.5 கி.மீ.). 
சேலத்தில் "கால்நடைப் பூங்கா"
  • நாட்டு இனக் காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் 1,600 ஏக்கரில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. 
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019
  • தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. 
  • தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேலும் பெருக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு சார்பில் நடைபெறும், இந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஜனவரி 23-24 ஆகிய இரு நாட்களில் நடைபெறுகிறது.
  • இம்மாநாட்டில் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10-ந் தேதிகளில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
  • வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறைக்கான தொழில் கொள்கை-2019
  • சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறைக்கான தொழில் கொள்கை-2019-ஐ வெளியிட்டார். 
  • வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2019 வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைக்கான வானூர்தி வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தியில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். 
  • தனியார் மற்றும் அரசு இணைந்து வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் பூங்கா குறைந்தபட்சம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும். 
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs 
ஆக்கி
ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டமாக ஆக்கி தொடர் 2019
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான முதல் தகுதிச் சுற்று ஆட்டமாக ஆக்கி தொடர் (ஆண்கள்) போட்டி, 2019 ஜூன் 6 முதல் 16 வரை புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது.
  • 2019 ஜூன் 15 முதல் 23 வரை, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் பெண்கள் பிரிவு ஆட்டம் நடைபெறவுள்ளது.
மாரத்தான் 
டாட்டா மும்பை மாரத்தான் 2019 
  • 2019 டாட்டா மும்பை மாரத்தான் பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் கென்யாவின் காஸ்மோஸ் லகாட்டும், பெண்கள் பிரிவில் எதியோப்பியாவின் வொர்க்நேஷ் அலெமுவும் சாம்பியன் பட்டம் வென்றனர். பந்தய தூரம் 42.195 கி.மீ ஆகும்.
  • இந்தியர்களுக்கான போட்டி மகளிர் பிரிவில் ஆசிய தங்கமங்கையான சுதா சிங் முதலிடம் பெற்றார். 2 மணி, 34 நிமிடங்கள், 56 வினாடிகளில் பந்தயதூரததை கடந்து தனிப்பட்ட சாதனையை படைத்தார்.
டேவிஸ் கோப்பை டென்​னிஸ் 2019
  • இந்​தி​யா-​இத்​தாலி அணி​க​ளுக்கு இடை​யி​லான டேவிஸ் கோப்பை டென்​னிஸ் போட்டி 2019 பிப்​ர​வரி மாதம் கொல்​கத்தா செளத் கிளப் மைதா​னத்​தில் நடை​பெ​று​கி​றது. 
கிரிக்கெட் விருதுகள்
ICC கிரிக்கெட் விருதுகள் 2018 - தொகுப்பு 
  • ICC-இன் மூன்று விரு​து​கள்: "விராட் கோலி" சாத​னை​ 
    • சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ICC), 2018-ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள் வீரர், மற்​றும் ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது என 3 (ஹாட்ரிக்) விரு​து​களை இந்​திய கிரிக்கெட் அணி​யின் கேப்​டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
    • ICC-இன் ஐந்தே மூன்று விருதுகளை ஒரு சேர வென்ற ஒரே வீரர் கேப்​டன் விராட் கோலி ​ஆவார்.
    • ஓரே நேரத்​தில் இந்த 3 விரு​து​க​ளை​யும் வென்ற முதல் கிரிக்கெட் வீரர் கோலி ஆவார்.
  • 2018 சிறந்த டெஸ்ட் வீரர் - விராட் கோலி
  • 2018 சிறந்த ஒரு​நாள் வீரர் - விராட் கோலி
  • 2018 சிறந்த வீர​ருக்​கான "கேரி சோபர்ஸ் விருது" (Sir Garfield Sobers Trophy for Cricketer of the Year) - விராட் கோலி
  • 2018-ஆம் ஆண்டில் விராட் கோலி
    • 13 டெஸ்ட்​க​ளில் மொத்​தம் 1322 ரன்​கள் (சரா​சரி 55,08), 
    • 14 ஒரு நாள் போட்டி​க​ளில் 1201 ரன்​கள் (6 சதங்​கள், சரா​சரி 133.55) 
    • 10 T20 ஆட்​டங்​க​ளில் 211 ரன்​கள் 
​வ​ள​ரும் இளம் வீரர் விரு​து-​ரி​ஷப் பந்த் (இந்தியா)
  • 2018-​ஆம் ஆண்​டுக்​கான ஐசிசி வள​ரும் வீரர் விருது இந்​திய இளம் விக்கெட் கீப்​பர் ரிஷப் பந்த்​துக்கு வழங்​கப்​ப​டு​கி​றது. 
  • இங்​கி​லாந்​தில் அந்​நாட்​டுக்கு எதி​ராக சத​ம​டித்த முதல் இந்​திய விக்கெட் கீப்​பர்-ரி​ஷப் பந்த்
  • ​சி​றந்த நடு​வருக்கான "டேவிட் ஷெப்​பர்ட் விருது" - குமார் தர்​ம​சே​னா (இலங்கை)
  • ICC ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது - கேன் வில்​லி​யம்​சன் (நியூ​சி​லாந்து)
  • ICC விருதுகள் 2018: பெண்கள் 
    • ICC சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை - ஸ்மிரி மந்தானா (இந்தியா)
    • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான-ராகேல் ஹீஹோ-ஃபிளின்ட் விருது - ஸ்மிரி மந்தானா (இந்தியா)
    • ICC பெண்கள் சிறந்த T20 வீராங்கனை: அலிஸா ஹேலி (ஆஸ்திரேலியா)
    • ஆண்டின் ICC மகளிர் எழுச்சிபெற்ற கிரிக்கெட் வீராங்கனை: சோஃபி எக்கோஸ்டோன் (இங்கிலாந்து)
  • ICC ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​கள் கேப்​ட​னாக "விராட் கோலி" தேர்வு
    • ICC ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​க​ளின் கேப்​ட​னாக விராட் கோலி தேர்வு செய்யப்​பட்​டுள்​ளார்.
    • 2018 ஆம் ஆண்​டுக்​கான அணி​களை ICC அறி​வித்​துள்​ளது . 
  • ICC டெஸ்ட் அணி:​
    • விராட் கோலி (கேப்​டன்), ரிஷப் பந்த், ஜஸ்ப்​ரீத் பும்ரா, (இந்​தியா), டாம் லத்​தம், கேன் வில்​லி​யம்​ஸன், ஹென்றி நிக்​கோல்ஸ் (நியூ​ஸி​லாந்து), திமுத் கரு​ணா​ரத்னே (இலங்கை), ஜேஸன் ஹோல்​டர் (மே.இ.​தீ​வு​கள்), ரபாடா (தென்​னாப்​பி​ரிக்கா), நாதன் லயன் (ஆஸ்​தி​ரே​லியா), முக​மது அப்​பாஸ் (பாகிஸ்​தான்). 
  • ICC ஒரு நாள் அணி:​
    • விராட் கோலி (கேப்​டன்), ரோஹித் சர்மா, குல்​தீப் யாதவ், ஜஸ்ப்​ரீத் பும்ரா (இந்​தியா), ஜானி பேர்ஸ்​டோவ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (இங்​கி​லாந்து), ரஷீத் கான் (ஆப்​கா​னிஸ்​தான்), முஸ்​த​பி​ஸுர் ரஹ்​மான் (வங்​க​தே​சம்).
ICC Awards 2018 
Women's Winners 2018
  • ICC Women's ODI Cricketer of the Year - Smriti Mandhana (India)
  • Rachael Heyhoe-Flint Award for Women's Cricketer of the Year - Smriti Mandhana (India)
  • ICC Women's T20I Player of the Year
  • Alyssa Healy (Australia)
  • ICC Women's Emerging Cricketer of the Year
  • Sophie Ecclestone (England)
Men's Winners 2018
  • ICC ODI Cricketer of the Year - Virat Kohli (India)
  • ICC Test Cricketer of the Year - Virat Kohli (India)
  • ICC ODI Cricketer of the Year - Virat Kohli (India)
  • ICC Associate Cricketer of the Year - Calum Macleod (Scotland)
  • Captain of ICC Test Team of the Year - Virat Kohli (India)
  • Captain of ICC Men’s ODI Team of the Year - Virat Kohli (India)
  • ICC Emerging Player of the Year: Rishabh Pant (India)
  • ICC Associate Player of the Year: Calum McLeod (Scotland)
  • ICC Spirit of Cricket Award: Kane Williamson (New Zealand)
  • ICC Umpire of the Year: Kumar Dharmasena (Sri Lanka)
  • ICC T20I Performance of the Year: Aaron Finch (Australia) 
இந்தியா-நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் 2019: இந்திய அணி: வெற்றி
  • நியூசிலாந்து நாட்டின் நேப்பியர் நகரில் நடந்த, நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.
  • இந்த போட்டியின் போது, சூரிய ஒளியின் தாக்கத்தினால் ஆட்டம் 37 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
TNPSC Current Affairs 23rd and 24th  January 2019 PDF