TNPSC Current Affairs January 26-27th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
TNPSC Current Affairs 26-27th, January 2019 - Download PDF
TNPSC Current Affairs January 26-27th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்"
- இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்" (3-Year Strategic Programme) செயல்படுத்தப்படஉள்ளது.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இடையே நடந்த சந்திப்புக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
- தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தியாவின் 70-ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
- புதிய கடற்படை விமான தளம் "INS கோஹசா" (Naval Air Base, INS Kohassa, Diglipur, Andaman and Nicobar Islands) அந்தமான் & நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் தொங்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா 26.1.2019
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது.
- 70-வது குடியரசு தினவிழா 26.1.2019 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
- டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்
- குடியரசு தினவிழா அணிவகுப்பை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்
- 2019 குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா பங்கேற்றார்.
- அசோக சக்ரா விருது
- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர் நசிர் அகமது வானியின் மனைவி மகாஜபீனிடம், உயரிய அசோக சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
- கருப்பொருளாக காந்தியடிகள் வாழ்க்கை
- காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு என்பதால், அவரது கொள்கைகள் மற்றும் வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- லெப்டினன்ட் கமாண்டர் அம்பிகா சுதாகரன் தலைமையில் 144 போர் விமானிகள் உள்பட விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
மாநாடுகள் / Conferences
மண்ணின் மொழிகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கம் 2019
- ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2019-ம் ஆண்டை மண்ணின் மொழி ஆண்டாக (2019 - International Year of Indigenous Language) அறிவித்துள்ளது.
- Global Launch Event of IYIL2019 (28 January 2019, UNESCO House, Paris, France)
- ஒரு மொழி தேய்ந்து அழிவதும், பண்பாடு ஒடுங்கிவிடுவதும், அந்த பண்பாடு உலகளாவிய அளவில் பரவுவதை தடுக்கும் விதமாக உலகளாவிய கருத்தரங்கம் 28.1.2019 அன்று பிரான்ஸ் நாட்டில் யுனெஸ்கோ அரங்கில் நடக்கிறது.
- இந்த கருத்தரங்கில்தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairsகுடியரசு தின விழா - தமிழ்நாடு
- இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்.
விருதுகள் / Awards
பாரத ரத்னா விருதுகள் 2019
- 2019-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதுகள் பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு 26.1.2019 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது ஆகும்.
- பிரணாப் முகர்ஜி (முன்னாள் குடியரசுத் தலைவர்)
- நானாஜி தேஷ்முக் (ஜனசங்க தலைவர்)
- புபேன் ஹசாரியா - ( பிரபல பாடகர்)
- இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
- 2015-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரபல கல்வியாளர் மதன்மோகன் மாளவியா (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டில் 3 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதற்கு முன்பு 45 பேருக்கு பாரத ரத்னா வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
- பிரணாப் முகர்ஜி
- மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்.
- காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர் பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசில் நிதி, ராணுவம், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
- திட்டக்கமிஷன் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.
- நானாஜி தேஷ்முக்
- மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக், பாரதீய ஜனசங்கத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் அங்கம் வகித்தவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1999-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது.
- நானாஜி தேஷ்முக் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
- புபேன் ஹசாரியா
- அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புபேன் ஹசாரியா பின்னணி பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறன் கொண்டவர்.
- பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, தாதாசாகேப் பால்கே, அசாம் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
- 2011-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தனது 85 வயதில் மரணம் அடைந்தார்.
- 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 26.1.2019 அன்று அறிவிக்கப்பட்டன.
- பத்ம விருதுகள் மொத்தம் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2019 பத்ம விருதுகள்
- பத்ம விபூஷண் விருது - 4 பேர்
- பத்ம பூஷண் - 14 பேர்
- பத்மஸ்ரீ விருது - 94 பேர்
- பெண்கள் - 21 பேர்
- வெளிநாட்டில் வசிப்பவர்கள் - 11 பேர்
- திருநங்கை - ஒருவர் (நர்த்தகி நடராஜ்)
- பத்ம விபூஷண் விருது 2019 (04)
- தேஜன்பாய் - நாட்டுப்புற பாடகர், சத்தீஷ்கார்
- அனில்குமார் மனிபாய் நாயக் - தொழில் அதிபர், மகாராஷ்டிரா
- பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே - நாடக கலைஞர், மகாராஷ்டிரா
- இஸ்மாயில் உமர் குல்லே - பொது விவகாரங்கள், ஜிபோட்டி, ஆப்பிரிக்கா
- பத்ம பூஷண் விருது 2019 (14)
- ஜான் சேம்பர்ஸ் (வெளிநாட்டவர்) - அமெரிக்கா
- சுக்தேவ் சிங் திந்த்சா - பொது விவகாரங்கள் - பஞ்சாப்
- பிரவின் கோர்டன் (வெளிநாட்டவர்) - பொது விவகாரங்கள் - தென்னாப்பிரிக்கா
- மகாசியா துரம் பால் குலாட்டி - வர்த்தகம் & கைத்தொழில்-உணவு பதப்படுத்துதல் - தில்லி
- தர்ஷன் லால் ஜெயின் - சமூக வேலை - ஹரியானா
- அஷோக் லக்ஷ்மிராரா குகடே - மருத்துவம் - கட்டுப்படியாகக்கூடிய சுகாதார பராமரிப்பு - மகாராஷ்டிரா
- கரியா முண்டா - பொது விவகாரங்கள் - ஜார்கண்ட்
- புதடித்யா முகர்ஜி - கலை-இசை-சிதார் - மேற்கு வங்கம்
- மோகன்லால் விஸ்வநாதன் நாயர் - கலை - நடிப்பு - திரைப்பம் ட - கேரளா
- எஸ். நம்பி நாராயண் - அறிவியல் மற்றும் பொறியியல்-விண்வெளி - கேரளா
- குல்தீப் நாயர் (இறையியல்) - இலக்கியம் & கல்வி (பத்திரிகை) - தில்லி
- பச்சேந்திரி பால் - விளையாட்டு (மலையேறுதல்) - உத்தரகண்ட்
- வி. கே. ஷங்குங் - சிவில் சர்வீஸ் - டெல்லி
- ஹுக்தேவ் நாராயண் யாதவ் - பொது விவகாரங்கள் - பீகார்
- ‘பத்மஸ்ரீ’ விருதுகள் 2019 (94)
- தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தமிழ்நாட்டை சேர்ந்த ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ளவர்கள்
- பங்காரு அடிகளார் - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீட ஆன்மிக குரு
- சரத் கமல் - டேபிள் டென்னிஸ் வீரர்
- நர்த்தகி நடராஜ் - பரதநாட்டிய கலைஞர் (திருநங்கை)
- மதுரை சின்னப்பிள்ளை - சமூகசேவகி
- டாக்டர் ஆர்.வி.ரமணி - கண் சிகிச்சை நிபுணர்
- ஆனந்தன் சிவமணி - டிரம்ஸ் இசைக்கலைஞர்
- டாக்டர் ராமசாமி வெங்கடசாமி - அறுவை சிகிச்சை நிபுணர்
- கர்நாடகா மாநிலத்தின் பெயரில் நடிகர் பிரபுதேவா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்மஸ்ரீ வென்ற விளையாட்டு வீரர்கள்
- சரத்கமல் - டேபிள் டென்னிஸ் - தமிழ்நாடு
- கவுதம் கம்பீர் - கிரிக்கெட் அணி
- சுனில் சேத்ரி - கால்பந்து அணியின் கேப்டன்
- அஜய் தாகூர் - கபடி அணி
- செஸ் வீராங்கனை ஹரிகா,
- வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி
- கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங்
- மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா
- பச்சேந்திரி பால் - மலையேற்றம் - உத்தரகாண்ட்
- பத்மஸ்ரீ விருதை "கீதா மேத்தா" ஏற்க மறுப்பு
- இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் கீதா மேத்தா, ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும், எழுத்தாளருமான கீதா மேத்தா, தனக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுத்துள்ளார்.
- தமிழ்நாடு குடியரசு தின விழா விருது பெற்றவர்கள் விவரம்
- அண்ணா பதக்கம் (வீர தீர செயல்கள்) 2019
- நா.சூர்யகுமார் - திருமங்கலம், சென்னை
- க.ரஞ்சித்குமார் - போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்
- ரா.ஸ்ரீதர் - மேலையூர், தஞ்சாவூர் மாவட்டம்
- காந்தியடிகள் காவலர் பதக்கம் 2019
- ரா.வேதரத்தினம் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கடலூர் மாவட்டம்
- அ.பிரகாஷ், காவல் ஆய்வாளர், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
- கோ.ராஜேந்திரன் - காவல் உதவி ஆய்வாளர், விக்கிரமங்கலம், அரியலூர் மாவட்டம்
- ரெ.திருக்குமார் - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருச்சி, காந்தி மார்க்கெட்
- பெ.கோபி - தலைமைக் காவலர், சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்
- வேளாண்மைத் துறை சிறப்பு விருது
- செ.சேவியர் - செட்டியாபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் (திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம்)
- கோட்டை அமீர் விருது
- மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர்களுக்கு கோட்டை அமீர் என்ற பெயரில் விருது - றிவிக்கப்படவில்லை.
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs
டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2019: சாம்பியன்கள்
- ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
- சாம்பியன்கள் விவரம்:
- பெண்கள் ஒற்றையர் பிரிவு: நவோமி ஒசாகா (ஜப்பான்)
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு: நோவக் ஜோகோவிச் (செர்பியா)
- நவோமி ஒசாகா
- பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 7-6 (7-2), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
- இதன் மூலம் பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை "நவோமி ஒசாகா" பிடித்துள்ளார்.
- ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
- நோவக் ஜோகோவிச்
- ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
- ஜோகோவிச் - 7-ஆவது முறை வென்று சாதனை
- ஆண்கள் ஒற்றையர் பிரிவுஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஜோகோவிச் 7-ஆவது முறையாக வென்றுள்ளார். முன்னதாக, ரோஜர் பெடரர் மற்றும் ராய் எமேர்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.
- கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் - ஜோகோவிச் சாதனை
- விம்பிள்டன், அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருப்பதால், கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் சாதனையை நோவக் ஜோகோவிச் புரிந்துள்ளார்.
2019 இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் போட்டி: சாய்னா நெவால் சாம்பியன்
- 2019 இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்ன்றுள்ளார்.
- ஸ்பெயினின் கரோலினா மரீன், சாய்னா இடையே நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், கரோலினா மரீன் காலில் காயமடைந்து தொடந்து பங்கேற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டதால், இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா-நியூசிலாந்து 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி
- நியூசிலாந்து நாட்டின் மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் "குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர்" என்ற சிறப்பை நேபாள கிரிக்கெட் அணியின் "ரோகித் பாடெல்" பெற்றுள்ளார்.
- ரோகித் பாடெலின் தற்போதைய வயது 16 ஆண்டு 146 நாட்கள் ஆகும்.
- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் பாடெல், 55 ரன் (58 பந்து) அடித்தார்.
- இதற்கு முன்பு இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 16 ஆண்டு 213 நாட்களில் சர்வதேச போட்டியில் குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.
சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ்: "பான்ட்சுலா லெவான்" சாம்பியன்
- சென்னையில் நடந்த, 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில், ஜார்ஜியா வீரர் பான்ட்சுலா லெவான், 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முக்கிய தினங்கள் / Important Days
சர்வதேச சுங்க தினம் (International Customs Day) - ஜனவரி 26
- ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று சர்வதேச சுங்க தினம் (International Customs Day) கடைபிடிக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் தங்கள் வேலைகளில் எதிர்கொள்ளும் நிலைமைகள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
- ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று "சர்வதேச ஹோலோகாஸ்ட் படுகொலை நினைவு தினம்" (International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust) கடைபிடிக்கப்படுகிறது.
- ஹோலோகாஸ்ட் படுகொலை, என்பது இரண்டாம் உலகப்போரின் போது அடோல்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் அடோல்ப் ஹிட்லரின் நாஜி படைகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு இனப்படுகொலை ஆகும், இதில் மூன்றில் இரண்டு பகுதி ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 2018 ஜனவரி 28 அன்று தேசிய நோய்த்தடுப்பு தினம் (National Immunisation Day) கடைபிடிக்கப்படுகிறது.