TNPSC Current Affairs 10th January 2019 | Download PDF

Smiley face

TNPSC Current Affairs 10th January 2019 | Download PDF| Selvakumar | kalvipriyan



TNPSC Current Affairs January 10th, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.


உலக நிகழ்வுகள்/ International Affairs
TBCC ஹைபர்சோனிக் Engine: சீனா சோதனை
  • ஒலியைப் போல 6 மடங்கு வேகத்தில் விமானங்களைப் பறக்கச் செய்யும் என்ஜின் ஒன்றை சீனா உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்துள்ளது. (TBCC engine, China's home-grown turbine-based combined cycle (TBCC) engine system) 
  • டர்போ அடிப்படையிலான இந்த என்ஜின், சீனா உருவாக்கி வரும் ஆளில்லா அதிவேக விமானங்களில் பொருத்தப்படுகிறது.
இந்தியா-நார்வே இடையே கடல்சார் வர்த்தக பேச்சுவார்த்தை

  • நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் (Norway/Prime minister, Erna Solberg) 3 நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நார்வே பிரதமர் எர்னா எர்னா சோல்பெர்க் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 
  • இந்தியா-நார்வே நாடுகளுக்கிடையே கடல்சார் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • ஐக்கிய நாடுகள் அவையால் வழங்கப்பட்டுள்ள 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இருவரும் விவாதம் நடைபெற்றது.
இந்திய நிகழ்வுகள் / National Affairs
டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேம்படுத்த "நந்தன் நிலேகனி" குழு 
  • இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India, RBI) டிஜிட்டல் கொடுப்பனவுகளை (digital payments) மேம்படுத்துவதற்கான வழிகளைக் கூறுவதற்கு "நந்தன் நிலேகனி" (Nandan Nilekani) தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
மூன்று வட்டார கிராமப்புற வங்கிகள் (RRBs) ஒன்றிணைப்பு 
  • 2019 ஜனவரி 1 முதல், மத்திய அரசு, பஞ்சாப் கிராமின் வங்கி (Punjab Gramin Bank), மால்வா கிராமின் வங்கி (Malwa Gramin Bank) மற்றும் சட்லஜ் கிராமின் வங்கி (Sutlej Gramin Bank) ஆகிய மூன்று பிராந்திய வட்டார வங்கிகளை (Regional Rural Banks, RRBs) ஒன்றிணைத்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் 
  • அண்டை நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் (8.1.2019) நிறைவேற்றப்பட்டது. 
  • அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு, இந்த மசோதாவின் மூலம் இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
DNA மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் 
  • விபத்து உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டோர், குற்றவாளிகள், காணாமல் போன நபர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு, டெக்ஸிபோனாகிளிக் அமிலம் (DNA) மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • குற்றங்களுக்கு தீர்வு காணவும், காணாமல் போனோரை கண்டுபிடிக்கவும், அமெரிக்கா, பிரிட்டன், நார்வே உள்ளிட்ட 60 நாடுகளில் டிஎன்ஏ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: நிறைவேற்றம்
  • பொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதா (124th Amendment Bill, 2019) நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
  • பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினரின் மேம்பாட்டுக்காக சிறப்பு சலுகை அளிக்க மாநிலங்களை அனுமதிக்கும் வகையில், அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவில் திருத்தம் செய்ய இம்மசோதா கோருகிறது.
நியமனங்கள்/ Appointments
IMF அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் "கீதா கோபிநாத்" 
  • சர்வதேச நிதியத்தின் (IMF/International Monetary Fund) 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக (chief economist of IMF), இந்திய-அமெரிக்க பெண்மணி கீதா கோபிநாத் (Gita Gopinath, 48 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • IMF அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி (First female chief economist) "கீதா கோபிநாத்" ஆவார். 
  • கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராக உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் 
  • சர்வதேச நிதியம் (IMF) 
  • அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டும், சர்வதேச நிதியம் (IMF) 189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. 
  • உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை IMF-ன் முக்கிய பணிகள் ஆகும்.
CBI இயக்குநராக "அலோக் வர்மா" பதவியேற்பு 
  • CBI இயக்குநராக (08th January 2019), அலோக் வர்மா (Alok Verma) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
  • மத்திய அரசு, CBI இயக்கு அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பிய, உத்தரவை உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது.
வங்கதேச பிரதமராக "ஷேக் ஹசீனா" பதவியேற்பு 
  • வங்கதேச நாட்டின் பிரதமராக 4-ஆவது முறையாக ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அவர்கள் (7.1.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் (Awami League) கூட்டணி வெற்றி பெற்றது. 
மாநாடுகள் / Conferences
2019 ரைசினா உரையாடல் (Raisina Dialogue), புது டெல்லி
  • 2019 ஜனவரி 8 ஆம் தேதி, நான்காவது ரைசினா உரையாடல் (Raisina Dialogue 2019), புது டெல்லியில் தொடங்கியது. 2019 ஜனவரி 8-10 வரை 3 நாட்கள் நடைபெறுகின்றன.
  • 2019 Raisina Dialogue, "உலக மறு வரிசை: புதிய வடிவவியல்கள்; திரவ பங்களிப்புகள்; நிச்சயமற்ற விளைவுகள் " (A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes) என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.
  • Raisina Dialogue, இந்தியாவின் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும், புவிசார் அரசியல் (geopolitical) மற்றும் புவிசார் மூலோபாய (Geostrategic) Geostrategic மாநாடு ஆகும்.
உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு (GAS) 2019 
  • 2019 ஜனவரி 15 முதல் 16 வரை, உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு (GAS-2019/Global Aviation Summit) மும்பையில் நடைபெறஉள்ளது. 
  • “Flying for all” என்ற கருப்பொருளில் முதல் இந்த உச்சி மாநாடு (GAS-2019) நடைபெறுகிறது.
தேசிய கவிஞர்கள் மாநாடு 2019
  • அகில இந்திய வானொலியின் தேசிய கவிஞர்கள் மாநாடு (All India Radio National Poets Conference 2019, Chennai) ஜனவரி 10, 2019 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
தமிழ்நாட்டின் 33-வது மாவட்டம் "கள்ளக்குறிச்சி" 
  • தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக "கள்ளக்குறிச்சி" மாவட்டம் உருவாக்கப்படுகிறது (Tamil Nadu's 33rd district with Kallakurichi as its headquarters).
  • சட்டப்பேரவை கூட்டத்தில் 2019 ஜனவரி 8 அன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக "கள்ளக்குறிச்சி" உதயமாகிறது.(Tamil Nadu chief minister Edappadi K Palaniswami announced today (8.1.2019), that a new district with Kallakurichi as its headquarters will be created by bifurcating Villupuram district). 
  • தமிழ்நாட்டின் 33-வது மாவட்டங்கள் பட்டியல்: Click Here Download
பசுமை எரிசக்தி முயற்சி: தமிழ்நாடு முதலிடம் 
  • பசுமை எரிசக்தி முயற்சியில் 11,750 மெகாவாட் எரிசக்தி மின் நிறுவு திறனுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை (8.1.2019):

  • டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (ICC Test Rankings 2019) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நேற்று வெளியிட்டது. தரவரிசை விவரம்:
  • பேட்ஸ்மேன் தரவரிசை
    1. விராட் கோலி (இந்தியா)
    2. கனே வில்லியம்சன் (நியூசிலாந்து).
    3. சித்தேஸ்வர் புஜாரா (இந்தியா)
  • பந்து வீச்சாளர் தரவரிசை
    1. காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா) 
    2. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
    3. வெரோன் பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா) 
  • அணிகள் தரவரிசை 
    1. இந்தியா
    2. இங்கிலாந்து
    3. நியூசிலாந்து
    4. தென்ஆப்பிரிக்கா
    5. ஆஸ்திரேலியா
டென்னிஸ்

2019 ஹோப்மன் கோப்பையை வென்ற "சுவிட்சர்லாந்து" அணி 
  • ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டின் ஹோப்மன் கோப்பை (2019 Hopman Cup) டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை Switzerland அணி வென்றுள்ளது. 
கேலோ இந்திய இளையோர் விளையாட்டு  (Khelo India 2019, Pune)
  • இரண்டாவது கேலோ இந்திய இளையோர் விளையாட்டு போட்டி (Khelo India Youth Games 2019) மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் (9.1.2019) தொடங்கியது. 
  • Khelo India Youth Games, இந்தியாவில் நடைபெறும் தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.
  • Khelo India Youth Games, 9th January - 20th January, 2019 in Pune, Maharashtra.
  • ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பலம்வாய்ந்த போட்டியாளர்களாக இந்தியர்களை உருவாக்குவதற்கான தொடக்க முயற்சி இந்த விளையாடு இந்தியா போட்டியாகும்.
  • KHELO INDIA இந்தியாவில் நடைபெறும் தேசிய அளவிலான மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். Under-17 years பள்ளி மாணவர்களும், under-21 years கல்லூரி மாணவர்களும், 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
  • முதலாவது KHELO INDIA 2018 போட்டிகள் டில்லி நகரில், 2018 ஜனவரி 31 - பிப்ரவரி 8 வரை நடைபெற்றது. 
முக்கிய தினங்கள்/ Important Days
வெளிநாடுவாழ் இந்தியர் தினம் - ஜனவரி 9, 2019
  • வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas 2019) ஆண்டுதோறும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் வகையில், 2003-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915 ஆகும். (commemorate the return of Mahatma Gandhi from South Africa to India in 1915), இதன் நினைவாக அந்த நாள் "வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக" தேர்ந்தெடுக்கப்பட்டது. 
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' (Pravasi Bharatiya Samman) என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. Download this file as PDF format in below the button