TNPSC Current Affairs 9th January 2019 -Download PDF

Smiley face

TNPSC Current Affairs 9th January 2019 -Download PDF| Selvakumar | kalvipriyan



TNPSC Current Affairs January 9th, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs
மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம் "HDFC Mutual Fund"
  • இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக (AMC-Asset Management Company) HDFC Mutual Fund நிறுவனம் உருவாகியுள்ளது. 
அண்டார்க்டிகாவின் உயர்ந்த சிகரத்தில் ஏறிய "உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி" Dr. Arunima Sinha

  • 2019 ஜனவரி 4 அன்று, அண்டார்க்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் வின்சன் (Antarctica's Highest Peak - Mount Vinson), சிகரத்தை ஏறிய உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி (world’s first female Amputee) என்ற சிறப்பை இந்திய மருத்துவர் அருணீமா சின்ஹா (Dr. Arunima Sinha) பெற்றுள்ளார். 
அமெரிக்காவின் ஆசிய ஆதரவு புதுமுயற்சி சட்டம் (ARIA)

  • அமெரிக்கா (United States), அண்மையில் ஆசிய ஆதரவு புதுமுயற்சி சட்டம் (ARIA-Asia Reassurance Initiative Act) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. 
கேரளாவில் அமையும் "பாரம்பரிய மொழி மையம்" 

  • கேரள மாநிலத்தின் திரூர் நகரில் உள்ள (Thunchath Ezhuthachan Malayalam University) துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மொழி மையம் (Centre for Classical Language) நிறுவ மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - குறிப்புகள் 

  • பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு (10% reservation for economically backward upper caste) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கல்வி, வேலைவாய்ப்புகளில், நாடு முழுவதும் சாதி அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • தற்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க, அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
  • இந்த அரசியல் சாசன திருத்த மசோதா, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு பெற வழிவகை செய்கிறது. 
  • தகுதி: ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள் / Conferences
உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு (GHS) 2019

  • 2019 ஜூலை 21 முதல் 24 வரை, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில், 13-வது உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு (GHS-Global Healthcare Summit-2019) நடைபெற உள்ளது.
சுற்றுச்சுழல் /Environmental Affairs
தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட "பபுக்" (Pabuk) புயல் 
  • அண்மையில் (2019 ஜனவரி) வெப்பமண்டல சூறாவளி 'பபுக்' (Tropical cyclone Pabuk) தாய்லாந்து நாட்டில் உருவானது. ஜனவரி 6 அன்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது.
பொருளாதார நிகழ்வுகள் / Economic Affairs
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-19-ஆம் நிதியாண்டு - கணிப்புகள் 
  • 2018-19 நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என பல்வேறு நிறுவனங்கள் கணிப்புகள் வெளியிட்டுள்ள, அவற்றின் விவரம்:
  1. மத்திய புள்ளியியல் அலுவலகம் - 7.2 %- 
  2. ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) - 7.3 %
  3. பிட்ச் நிறுவனம் - 7.2 %
  • நிதியாண்டு வாரியாக இந்திய பொருளாதார வளர்ச்சி:
  1. 2017-18-ஆம் நிதியாண்டு: 6.7% 
  2. 2016-17 நிதியாண்டு: 7.1% 
  3. 2015-16 நிதியாண்டு: 8.2% 
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, 3 ஆண்டு சிறை தண்டனையால் பதவி இழப்பு 
  • பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
  • 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், பாலகிருஷ்ண ரெட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 மற்றும் 192-ம் பிரிவுகளின் கீழ், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
  • பாலகிருஷ்ண ரெட்டி, ஓசூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக இருந்தார். 
  • பாலகிருஷ்ணரெட்டி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் - நிறுத்தம் 
  • கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணம் அடைந்ததால் காலியிடமாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. 
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs
கிரிக்கெட்

பார்டர்-கவாஸ்கர் கோப்பை 2018-19 (இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2019): தகவல் துளிகள் 
  • சாம்பியன்: இந்திய அணி 
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற, 2019 பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
  • இதன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
  • ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 
  • விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியால் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது.
  • 1947-ம் ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. தனது 12-வது முயற்சியில், 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 
  • டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கேப்டன் விராட்கோலியிடம் வழங்கினார். 
  • தொடர் நாயகன் விருது, இந்திய மட்டை வீச்சாளர் சித்தேஸ்வர் புஜாரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • 1-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி (31 ரன்கள்)
  • 2-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா வெற்றி (146 ரன்கள்)
  • 3-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி (137 ரன்கள்)
  • 4-வது டெஸ்ட் (சிட்னி) - டிரா 
  • வெளிநாட்டில் அதிக டெஸ்ட் தொடர்களை வென்று தந்த இந்திய கேப்டனான கங்குலியின் சாதனையை விராட்கோலி (4-வது முறை) சமன் செய்தார்.
அதிக ரன்கள் எடுத்தவர்கள்: 
  1. சித்தேஸ்வர் புஜாரா (இந்தியா) - 521 ரன்கள்
  2. ரிஷப் பான்ட் (இந்தியா) - 350 ரன்கள்
அதிக ரன்கள் எடுத்தவர்கள்: 
  1. ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா) - 21 விக்கட்டுகள் 
  2. நாதன் லயன் - 21 விக்கட்டுகள் 
கால்பந்து

அதிக கோல்களை அடித்த வீரர்கள்: "சுனில் சேத்ரி" - இரண்டாம் இடம் 
  • இந்தியா கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, சர்வேதேச கால்பந்து போட்டிகளில் தற்போது (7.1.2018) வரை, மொத்தம் 67 கோல்கள் அடித்துள்ளார். 
  • இதன் மூலம் சுனில் சேத்ரி, சர்வேதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 
சர்வேதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் (7.1.2018) 
  1. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 85 கோல்கள் (154 போட்டிகள்)
  2. சுனில் சேத்ரி - 67 கோல்கள் (105 போட்டிகள்)
  3. லியோனல் மெஸ்ஸி - 65 கோல்கள் (128 போட்டிகள்).
டேபிள் டென்னிஸ்
  • தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள் 2019
  • 80-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (National Table Tennis Championship) போட்டிகள், 2019 ஜனவரி 4 முதல் கட்டாக் நகரில் உள்ள தொடங்கவுள்ளது.