TNPSC Current Affairs January 19th and 20th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
TNPSC Current Affairs 19-20th January 2019 - Download PDF
TNPSC Current Affairs January 19th and 20th January 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs
L&T நிறுவன பீரங்கி தொழிற்சாலை - குறிப்புகள்
- குஜராத் மாநிலத்தில் சூரத் நகருக்கு உள்ள ஹஜிரா என்ற இடத்தில் உள்ள லார்சன் அண்டு டூப்ரோ (L&T) நிறுவனம், பீரங்கி உற்பத்தி பிரிவை (Armoured Systems Complex of Larsen and Toubro in Hazira, Gujarat) தொடங்கியுள்ளது.
- இந்த L&T நிறுவனத்தின் பீரங்கி (K9 Vajra-T)தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று திறந்துவைத்தார்.
- ‘கே9 வஜ்ரா’ என்ற பீரங்கிகள் (K9 Vajra-T 155 mm/52-caliber tracked self-propelled Howitzer guns programme) இந்த நிறுவனத்தில் ஒப்பந்தப்படி ரூ.4,500 கோடியில் 100 பீரங்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.
- L&T நிறுவனம் 2017-ம் ஆண்டு ராணுவ அமைச்சகத்திடம் ‘கே9 வஜ்ரா’ என்ற ராணுவ பீரங்கிகள் தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துகொண்டது.
- ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை "L&T
- இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை "L&T நிறுவனம்" ஆகும்
- இந்த நிறுவனத்தில் கே9 வஜ்ரா பீரங்கிக்காக 400 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சுமார் 13 ஆயிரம் உதிரிபாகங்களை தயாரிக்கின்றன. இதில் வெளிநாட்டு உதவியின்றி அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
- K9 Vajra-Thunder பீரங்கி
- K9 Vajra-T ராணுவ பீரங்கியின் தொழில்நுட்பம் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. தென்கொரியாவின் ஹான்வா நிறுவனத்துடன் எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- கே9 வஜ்ரா பீரங்கி 50 டன் எடையும், 47 கிலோ குண்டுகளை 43 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறனும் கொண்டதாகும்.
- இந்திய சினிமா வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மும்பையில் "முதல் இந்திய சினிமா அருங்காட்சியகம்" (National Museum of Indian Cinema, Mumbai) அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சினிமா அருங்காட்சியகத்தை ஜனவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளது.
- குஜராத் மாநிலம், காந்திநகரில் உலக முதலீட்டாளர்களை கவர்வதற்கான ‘துடிப்பான குஜராத் உலகளாவிய மாநாடு’ மற்றும் கண்காட்சியை (Vibrant Gujarat Global Summit 2019) பிரதமர் நரேந்திர மோடி (18.1.2019) தொடங்கி வைத்தார்.
- எளிதில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு உகந்த 50 முன்னணி நாடுகளின் பட்டியலில், இந்தியா தற்போது 77-வது இடத்தில் உள்ளது.
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந்தேதி தொடங்குகிறது (Budget Session 2019 Jan 31 to Feb 13, 2019). இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி13-ந்தேதி வரை நடைபெறுகிறது. 2019 ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
நியமனங்கள் / Appointments
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக "தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் கன்னா" பதவியேற்பு
- இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக, நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் கன்னா (Supreme Court New judges, Dinesh Maheshwari, Sanjiv Khanna) ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (Chief Justice of India Ranjan Gogoi) பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.
மாநாடுகள் / Conferences
உலக ஆரஞ்சு திருவிழா 2019
- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில், 2019 உலக ஆரஞ்சு திருவிழா (World Orange Festival 2019, Nagpur) ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறுகிறது. 2019 இந்த ஆண்டு நடப்பது இரண்டாவது உலக ஆரஞ்சு திருவிழா (2nd World Orange Festival) ஆகும்.
விருதுகள் / Awards
2019 பிராங்கோ-ஜேர்மன் மனித உரிமை விருது: யூ வென்செங் (Yu Wensheng)
- சீனாவில் தடுப்புக் காவலில் உள்ள சீன வழக்கறிஞர், யூ வென்செங் (Yu Wensheng), 2019-ஆம் ஆண்டின் பிராங்கோ-ஜேர்மன் மனித உரிமைகள் விருதை (Franco-German Human Rights Award) பெற்றுள்ளார்.
- ‘நாடாளுமன்ற ரத்தினம்’ விருது வழங்கும் விழா (Sansad Ratna Awards 2019) சென்னை ராஜ்பவனில் (19.1.2019) நடைபெற்றது. விருது பெற்றோர் விவரம்:
- நாடாளுமன்ற நிலைக்குழு (நிதி) தலைவர் எம்.வீரப்ப மொய்லி, மேல்சபை உறுப்பினர்கள் ரஜனி பாட்டீல், ஆனந்த் பாஸ்கர் ரபோலு, எம்.பி.க்கள் சுப்ரியா சுலே, பர்த்ருஹாரி மஹ்தப், என்.கே.பிரேமசந்திரன், அனுரக் சிங் தாக்கூர், நிஷிகாந்த் துபே, ராஜீவ் சங்கர்ராவ் சாத்தவ், ஸ்ரீரங் அப்பா பர்னே, தனஞ்செய் பீம்ராவ் மகாதீக், ஹீனா விஜயகுமார் காவித் ஆகிய 12 பேருக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுகளை வழங்கினார்.
- ‘பிரைம் பாயிண்ட் பவுண்டேசன்’, ‘பிரசன்ஸ் இணையதள மாத இதழ்’ மற்றும் ‘சன்சத் ரத்னா விருது குழு’ ஆகியவை, இணைந்து நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களுக்கு ‘நாடாளுமன்ற ரத்தினம்’ வழங்கி வருகின்றன.
தமிழ்நாடு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
எண்ணூர்-மாமல்லபுரம் இடையே "சென்னை வெளிவட்ட சாலை"
- தமிழ்நாட்டின் எண்ணூர் துறைமுகம், மாமல்லபுரத்தையும் இணைக்கிற வகையில் 133.65 கி.மீ. தொலைவுக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
- இந்த சென்னை வெளிவட்ட சாலை அமைப்பதற்கு ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், டெல்லியில் கையெழுத்தானது.
- விண்வெளி துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான ஆய்வு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்க்கெலா, இந்தூர் நகரங்களில் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் (ISRO, Young Scientists programme 2019) உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் வீதம் 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகத்தில் அறிவியல் திட்டம் தொடர்பாக ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விளையாட்டு நிகழ்வுகள் / Sports Affairs
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி
- இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
- ஆஸ்திரேலிய மண்ணில், இரு நாட்டு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதல்முறையாகும்.
- தொடர்நாயகன் விருது: எம். எஸ். தோனி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- தோனி, மூன்று ஆட்டங்களில் 51, 55, 87 ரன்கள் எடுத்தார்
- யுஸ்வேந்திர சாஹல் (6/42) சாதனை
- இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், 3-வது போட்டியில்42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
- அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்
- ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) - 224 ரன்
- டோனி (இந்தியா) -193 ரன்
- இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியா 2019
- T20 போட்டித் தொடர்: 1-1 சமநிலை
- ஒரு நாள் தொடர்: 2-1 - இந்தியா வெற்றி
- டெஸ்ட் தொடர்: 2-1 - இந்தியா வெற்றி
- தொடரை இழக்காத முதல் அணி - இந்திய அணி
- ஆஸ்திரேலிய பயணத்தில் எந்த ஒரு தொடரையும் இழக்காமல் திரும்பும் முதல் வெளிநாட்டு அணி என்ற சிறப்பை இந்திய அணி பெற்றுள்ளது.
- இந்திய-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் 2019
- இந்திய அணி அடுத்து, நியூசிலாந்தில் இந்திய அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் (NZvIND 2019, India-New Zealand Cricket 2019) பங்கேற்கிறது.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council, ICC) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) மனு சவ்னி (Manu Sawhney) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய பெண்கள் குத்துச்சண்டை பயிற்சியாளர் "முகமது அலி காமர்"
- இந்திய பெண்கள் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான (chief coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக "முகமது அலி காமர்" (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.