TNPSC Current Affairs 13-14, January 2019 | Download PDF

Smiley face

TNPSC Current Affairs 13-14, January 2019 | Download PDF| Selvakumar | kalvipriyan



. TNPSC Current Affairs January 13th, 2019 and January 14th 2019, in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs
தேர்தலில் "டிஜிட்டல் ஊடக பிரச்சாரம்" குறித்த "உமேஷ் சின்ஹா" அறிக்கை 
  • தேர்தலுக்கு முன்பான 48 மணி நேரத்தில், டிஜிட்டல் ஊடக பிரச்சாரம் (Digital media and campaigning during last 48 hours before polls) குறித்த அறிக்கையை "உமேஷ் சின்ஹா" (Umesh Sinha Committee) தலைமையிலான குழு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
லடாக்கில் அமையும் "உலகின் மிகப் பெரிய சோலார் திட்டம்" 
  • ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை (Leh-Ladakh solar power generation programme) அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
  • கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை, லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • சுமார் ரூ.45000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டம் 2023-ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
  • தற்போது சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு (10% Economically Weaker Sections Quota) வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 7.1.2019 அன்று ஒப்புதல் அளித்தது. 
  • 124-ஆவது திருத்த சட்ட முன்வடிவுக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8.1.2019 அன்று ஒப்புதல் பெறப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் 9.1.2019 அன்று நிறைவேறியது. 
  • இந்த மசோதாவை சட்டமாக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 12.1.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். 
  • முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு "எதிராக அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம்" ஆகியவை அண்மையில் பிறப்பிக்கப்பட்டன. இந்த 3 அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 12.1.2019 அன்று ஒப்புதல் அளித்தார்.
"சார்தாம்" இணைப்பு சாலை திட்டம் 
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் "சார்தாம்" (Char Dam Project) என அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு அனைத்து காலநிலையிலும் சென்று வரக்கூடிய வகையில் இந்த இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
முக்கிய தினங்கள் / Important Days
குரு கோவிந்த் சிங் - 350-ஆவது பிறந்ததினம் 
  • 10-வது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்ததினத்தையொட்டி (13 January, Guru Gobind Singh Jayanti 2019), அவரது நினைவாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி (ஜனவரி 13, 2019) நாணயம் வெளியிடுகிறார்.
  • குரு கோவிந்த் சிங், சீக்கியர்களைக் கொண்டு "கல்சா (Khalsa) என்னும் படைப் பிரிவை" உருவாக்கினார்.
மாநாடுகள் / Conferences
சர்வதேச ஒட்டக விழா
  • ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் சர்வதேச ஒட்டக விழா 12.1.2019 அன்று தொடங்கியுள்ளது. 2 நாட்கள் ஒட்டக விழா நடைபெறுகிறது. 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
சிட்னி மைதான கௌரவ உறுப்பினர்களான "வீரர் விராட் கோலி, ரவி சாஸ்திரி 
  • சிட்னி கிரிக்கெட் மைதான கௌரவ உறுப்பினர் (SCG-Sydney Cricket Ground honorary membership) என்ற சிறப்பை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Indian skipper Virat Kohli, coach Ravi Shastri) ஆகியோர் பெற்றுள்ளனர்.
  • சிட்னி கிரிக்கெட் மைதான கௌரவ உறுப்பினர் என்ற சிறப்பை, விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் தவிர சச்சின் டெண்டுல்கர் மற்றும் ப்ரெய்ன் லாரா ஆகியோர் பெற்றுள்ளனர்.
 இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா தோல்வி 
  • இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் இடையே, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
  • இந்திய வீரர் ரோகித் சர்மா 133 ரன்கள் எடுத்தார்.
  • ஆயிரம் வெற்றிகள் - ஆஸ்திரேலியா சாதனை
  • இந்தியாவிற்கு எதிரான, சிட்னியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் ஆயிரமாவது வெற்றி இதுவாகும் ((டெஸ்ட், ஒரு நாள், T20 போட்டிகள்). 
  • சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் வெற்றிகள் பெற்றுள்ள முதல் அணி ஆஸ்திரேலியா ஆகும்.
  • அதிக வெற்றிகளை பெற்றுள்ள அணிகள் விவரம்: 
  • ஆஸ்திரேலியா - 1000 வெற்றிகள்
  • இங்கிலாந்து - 774 வெற்றிகள்
  • இந்தியா - 711 வெற்றிகள்
  • ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் - ரோகித் சர்மா
  • ரோகித் சர்மா, ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 64 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
  • இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம். எஸ். தோனி ஒரு நாள் ஆட்டத்தில் (50 ஓவர்கள்) 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் திராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரர் தோனி ஆவார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் / Tamil Nadu Affairs
தமிழ்நாடு அரசின் "கல்வி தொலைக்காட்சி"
  • தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்காக கல்வி தொலைக்காட்சி ஜனவரி 21-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
  • கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் - வெளியீடு
  • காலை 5 மணி முதல் இரவு 1 மணி வரை 17 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. 
  • குறளின் குரல் 
  • இந்த நாள் இனிய நாள் 
  • நலமே வளம் 
  • குருவே துணை 
  • ஓடி விளையாடு பாப்பா
  • வல்லது அரசு
  • வரலாற்று பார்வை 
  • இரவு 11.30 மணி முதல் 12 மணி வரை - ‘NEET’, TNPSC, போன்ற போட்டி தேர்வுகளுக்கான கற்பித்தல் நிகழ்ச்சி.  
TNPSC Current Affairs 13th and 14th  January 2019 PDF