TNPSC Current Affairs January 8th, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள்/National Affairs
ASI-அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நினைவுச்சின்னங்கள்-2018
- 2018-ஆம் ஆண்டில், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ASI-Archaeological Survey of India), பின்வரும் கட்டமைப்புகளை "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களாக (Monuments of national importance in 2018)" அறிவித்துள்ளது. அவற்றின் விவரம்:
- பழைய உயர் நீதிமன்ற கட்டிடம் நாக்பூர் (Nagpur Old High Court Building), மகாராஷ்டிரா
- ஆகா கான் மற்றும் ஆதி கானா ஹவேலி (Haveli of Agha Khan and Hathi Khana), ஆக்ரா, உத்திரப்பிரதேசம்
- நீம்ரானா பாவோரி (Neemrana Baori) - இராஜஸ்தான்
புதிய இந்திய ரூபாய்நோட்டுகள்: சட்டப்பூர்வமாக்க நேபாளம் கோரிக்கை
- இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை நேபாள நாட்டில் சட்டப்பூர்வமானது என அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு நேபாள அரசு கடிதம் எழுதியுள்ளது (Nepal writes to india to Banned new Indian currency notes as legal).
- ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய இந்தியப் பணம் மட்டுமே நேபாளத்தில் சட்டப்பூர்வமானது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெயில் நிலையங்களில் பயணிகளை அனுமதிப்பதில் புதிய திட்டம்
- விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் "உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு சோதனை திட்ட முறை"யை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- கர்நாடக மாநிலம் உப்பள்ளி, உத்திரபிரதேசம், பிரயாக் ராஜ் (அலகாபாத்) ஆகிய ரெயில் நிலையங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது
- இந்த திட்டத்தின்படி பயணிகள் செல்லும் ரெயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள நுழைவு வாயில் மூடப்படுகிறது.
விவாகரத்து சட்டத் திருத்த மசோதா 2019
- விவாகரத்து சட்டத் திருத்த மசோதா (Personal LawsAmendment Bill 2019, LokSabha) நாடாளுமன்ற மக்களவையில் (7.1.2019) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி விவாகரத்து கோரும் சட்ட விதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கி சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு "10% இட ஒதுக்கீடு"
- முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. (Cabinet approves 10% reservation economically backward).
நியமனங்கள்/Appointments
பாகிஸ்தான் தலைமை நீதிபதி "ஆசிப் சயித் கோசா"
- பாகிஸ்தான் நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக (Chief Justice of Pakistan) நீதிபதி ஆசிப் சயித் கோசா (Justice Asif Saeed Khosa) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள் /Conferences
சர்வதேச பட்டம் விடும் திருவிழா 2019, குஜராத்
- குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா ஜனவரி 6 அன்று தொடங்கி 13 வரை நடைபெறுகிறது. (International Kite Festival 2019, Sabarmati Riverfront, Ahmedabad, Gujrat, 6 Jan 2019-13 Jan 2019)
- இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் இந்த Kite Festival 2019-ல் பங்கேற்றுள்ளன.
- 1989-ஆம் ஆண்டிலிருந்து, Ahmedabad-நகரம் அதிகாரப்பூர்வ உத்தாரயன் (Uttarayan) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக International Kite Festival-ஐ நடத்துகிறது.
விருதுகள் /Awards
வாழ்நாள் சாதனையாளர் விருது: இரா.கிருஷ்ணமூர்த்தி
- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, "தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29-ம் ஆண்டு கருத்தரங்கில்" தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும்,தினமலர் நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
- பெருவளுதிழா நாணயம்: 1984-ம் ஆண்டு தமிழ் பிராமிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த சங்ககால அரசர்களால் உருவாக்கப்பட்ட "பெருவளுதிழா நாணயம்" தான் நாணயவியல் குறித்த எனது ஆராய்ச்சிக்கு தூண்டுகோளாக அமைந்தது என இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சுற்றுச்சுழல் /Environmental Affairs
அந்தமான் பகுதியில் "பாபுக்" புயல் தாக்கம்
- தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் 2019 ஜனவரி 3 அன்று உருவான ‘பாபுக்’ புயல், ஜனவரி 6 அன்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது.
- மத்திய உள்துறை அமைச்சகம் பாபுக் புயல் குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்தது.
தமிழ்நாடு நிகழ்வுகள்/Tamil Nadu Affairs
தமிழ்நாடு போக்குவரத்து கழக 555 புதிய பேருந்துகள் - அறிமுகம்
- தமிழ்நாடு போக்குவரத்து கழகம் (Tamil Nadu State Transport Corporation) சார்பில் ரூ.140 கோடி மதிப்பில் 555 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி (7.2.2019) துவக்கி வைத்தார்.
- சென்னை 56, கோவை 146, மதுரை 63, சேலம் 112, விழுப்புரம் 82, கும்பகோணம் 96 பஸ்கள் இயக்குப்பட உள்ளன. சிவப்பு நிறத்திலான (TNSTC New Red Bus) இந்த பஸ்களில் பஸ் நிறுத்தத்தை முன்னரே அறிவிக்கும் வசதி இடம்பெற்றுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்/Sports Affairs
கிரிக்கெட்
2018-19 பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய அணி
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற, 2019 பார்டர்-கவாஸ்கர்கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.இன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
- விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியால் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது.
- ஆட்ட நாயகன் விருது, தொடர் நாயகன் விருது, இந்திய மட்டை வீச்சாளர் சித்தேஸ்வர் புஜாரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- 1-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி (31 ரன்கள்)
- 2-வது டெஸ்ட் - ஆஸ்திரே#3015;லியா வெற்றி (146 ரன்கள்)
- 3-வது டெஸ்ட் - இந்தியா வெற்றி (137 ரன்கள்)
- 4-வது டெஸ்ட் - டிரா
ஆமதாபாத் நகரில் "உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்"
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் (world’s largest cricket stadium, Motera in Ahmedabad) கட்டப்பட்டு வருகிறது.
- இந்த மைதானத்தில் 63 ஏக்கர் பரப்பளவில், ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.
- தற்போது உலகின்மிகப்பெரிய மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCC-Melbourne Cricket Ground) விளங்குகிறது. இந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது.
குத்துச்சண்டை
தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள், கர்நாடகா
- கர்நாடகா மாநிலம் விஜயநகரவில் மூன்றாவது தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள், டிசம்பர் 31, 2018 முதல் 2019 ஜனவரி 6 வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் விவரம்:
- லவ்லினா போர்கோகெயின் (68 கிலோ எடைப்பிரிவு) - தங்கப்பதக்கம்
- சிம்ரஞ்சித் கெளர் (69 கிலோ எடைப்பிரிவு) - தங்கப்பதக்கம்
- மஞ்சு ராணி (48 கிலோ எடைப்பிரிவு) - தங்கப்பதக்கம்
- மனிஷா மவுன் (54 கிலோ பிரிவு) - வெள்ளிப்பதக்கம்
ஆக்கி
தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி 2019, சென்னை
- ஒன்பதாவது தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி 2019 (B Division) ஜனவரி 8 முதல் சென்னையில் நடைபெறுகிறது.
- சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் (9th Hockey India Senior Men National Championship 2019) போட்டிகளில், 41 அணிகள் பங்கேற்கின்றன. Download this file below the link as PDF