TNPSC Current Affairs April, 2019, Daily Current AffairsAApril2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
TNPSC Current Affairs April 14 2019
ஏப்ரல் 14
தமிழ்
Download Tamil PDF –Click Here
Download English PDF –Click Here
இந்திய நிகழ்வுகள்
- அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி – 2019ல் (ADIBF – 2019) இந்தியாவானது கௌரவ நாடு விருந்திரனராக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த புத்தக கண்காட்சியானது அரபு நாடுகளின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய வெளிப்பாட்டை காட்சிபடுத்துகிறது.
உலக நிகழ்வுகள்
- பங்குகளின் மதிப்பில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக ஹாங்காங்கின் பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சக்தி வாய்ந்த கணினி ஒப்புருவாக்கத்தை (Computer Stimulation) பயன்படுத்தி உருகிய சங்கிலி நிலை (Chain – Melted State) என்ற புதிய பருப்பொருளின் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
- உருகிய சங்கிலி நிலையின் போது, அணுக்கள் – ஒரே நேரத்தில் திட மற்றும் திரவமாக இருக்கும். சோடியம் மற்றும் பிஸ்மத் உள்ளிட்ட கூறுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
விருதுகள்
- பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியப் பெண்ணான “தீபா மாலிக்” – கிற்கு நியூசிலாந்து பிரதம அமைச்சரின் 2019ம் ஆண்டிற்கான எட்மண்டு ஹில்லாரி தோழமை விருதைப் பெற்றுள்ளார்.
- இவர் 2016ம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
- ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இந்திய குடியரசிற்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக சிறப்பான சேவையை அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான “செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் ஆர்டர்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
- இஸ்ரேலின் தேசியத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 5வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
- நெதன்யாகு மிக நீண்ட காலம் பதவிலிருக்கும் பிரதமராக சாதனை படைக்கவுள்ளார். “நெஸட்” என்பது இஸ்ரேலின் பாராளுமன்றம் ஆகும்.
புத்தகங்கள்
- ‘அரசியலமைப்பு சட்டமன்றத்தில் டாக்டர். பீமராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்’ (Selected Speeches of Dr. Bhimrao Ambedkar in the Constituent Assemble) என்ற புத்தகத்தை “A.சூர்ய பிரகாஷ்” என்பவர் வெளியிட்டுள்ளார்.
- இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர். அம்பேத்கர் ஆவார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.