TNPSC Current Affairs January 3, 2019, Download as PDF

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan



TNPSC Current Affairs dated January 3rd, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams and Tamil Nadu State Government/Central Government Competitive Examinations 2019.

தமிழ்நாடு நிகழ்வுகள் 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 2019
  • தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2019-ஆம் ஆண்டின் முதல் கூட்ட தொடரை, மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜனவரி 2 அன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன் முக்கிய விவரங்கள்:
  • தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் ஆவார். 
  • பொங்கல் சிறப்பு தொகுப்பு
  • அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.
  • இந்த தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். 
  • ரூ.1,000 ரொக்கம்: மேலும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000, அரசால் வழங்கப்படவுள்ளது.
  • தமிழ்நாட்டில், 2.01 கோடி குடும்பங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பொது விநியோக திட்ட "ஸ்மார்ட் அட்டைகள்" வழங்கப்பட்டுள்ளது.
சென்னை இரண்டாம் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஒப்புதல்
  • மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - கோயம்பேடு வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் (Chennai Metro Rail phase 2) திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 
  • சென்னை வர்த்தக மையத்தில், ஜனவரி 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு TNGIM 2019- TN GLOBAL INVESTORS MEET 2019) நடைபெற உள்ளது. ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், 2019 மாநாட்டின் பங்களிப்பு நாடுகளாகப் பங்கெடுக்க உள்ளது.
உலக நிகழ்வுகள் 

UNESCO அமைப்பை விட்டு வெளியேறும் அமெரிக்கா, இஸ்ரேல்
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் UNESCO அமைப்பை விட்டு அதிகாரபூர்வமாக வெளியேற (United States and Israel officially quits UNESCO) முடிவெடுத்துள்ளன.
நிலவின் இருண்டபக்கத்தில் "சாங் இ-4" (Chang'e 4) சீன விண்கலம்
  • நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் நிலவின் இருண்ட மறுபக்கத்தில் சீன விண்கலம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. 
  • சீனாவின் சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தில், இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் சீன செயற்கைக்கோள் தரையிறங்கியுள்ளது.
Fehmarn Belt Fixed Link சுரங்கப்பாதை திறப்பு 
  • Denmark and Germany ஆகிய இரு நாடுகளை இணைக்கும் Fehmarn Belt Fixed Link சுரங்கப்பாதை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. 
இந்திய நிகழ்வுகள் 

உலகின் மிக சக்திவாய்ந்த இடைமறி ஏவுகணை - S-400
  • உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த இடைமறி ஏவுகணையான, ரஷ்யா நாட்டின் S-100 ஏவுகணை கருதப்படுகிறது. 
  • S-400 அதிநவீன ஏவுகணையை இந்தியாவுக்கு 2019-ஆம் ஆண்டு முதல் ரஷியா அளிக்கவுள்ளது.
  • S-400 தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே 2018 அக்டோபர் மாதம் ரூ.40,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
3 வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 2 அன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகளான "பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி"யை இணைக்கும் (Bank of Baroda, Vijaya Bank, Dena Bank) முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி "பரோடா வங்கி"
  • விஜயா மற்றும் தேனா வங்கிகளின் இணைப்பு மூலம் பரோடா வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும். வருகிற நிதியாண்டு முதல் (ஏப்ரல் 1, 2019) இந்த 3 வங்கிகளும் இணைந்து ஒரே வங்கியாக செயல்படஉள்ளது.
ASEAN பாமாயில் இறக்குமதி வரி 40%ஆக குறைப்பு 
  • ஆசியான் (ASEAN) நாடுகளிலிருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா பாமாயில் எண்ணெய் (Palm oil Import Tax) மீதான இறக்குமதி வரியை 44 %-லிருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள் 

பிரேசில் அதிபர் ஜெயர் போல்சன்
  • பிரேசில் நாட்டின் புதிய அதிபராக (Brazil President) ஜெயர் போல்சன் (Jair Bolsonaro) பதவியேற்றுள்ளார்.
Ujjwala sanitary Napkin Initiative-சுகாதார திட்டம் - ஒடிசாவில் தொடக்கம் 
  • மத்திய அரசு, Ujjwala sanitary Napkin Initiative-என்ற சுகாதார திட்டத்தை (சானிடரி நாப்கின்), ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் தொடங்கியுள்ளது.
விருதுகள் 

2019 தேசிய நிருத்ய ஷிரோமணி விருது: ஆனந்தி நேயோ அனாம்
  • 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய நிருத்ய ஷிரோமணி விருது (2019 National Nritya Shiromani Award), ஆனந்தி நேயோ அனாம் (Anindita Neogy Anaam) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.