Tnpsc | Tamil Current Affairs May 02 2019
நடப்பு நிகழ்வுகள் – மே 2 2019
தேசிய செய்திகள்
கர்நாடகம்
பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சிஐஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் புதிய நகரம் சார்ந்த பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் (BCU), உயர் கல்வி கற்றல் முயற்சிகளுக்கான ஊக்கத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சர்வதேச செய்திகள்
JeM தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1267 குழுவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
திபெத்திய பீடபூமியில் டெனிசோவான்ஸ் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிப்பு
- 1,60,000 ஆண்டுகளுக்கு முன்னால் திபெத்திய பீடபூமியில் டெனிசோவான்ஸ் வாழ்ந்ததற்கான ஆதாரம் சீனாவின் சியாஹே, கான்சுவில் உள்ள பைஷியா கார்ஸ்ட் குகைகளில் இருந்து பெறப்பட்ட கடைவாய்ப்பற்களுடன் கூடிய தாடை எழும்பு பகுப்பாய்வின் மூலம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. டெனிசோவான்ஸ் அல்லது டெனிசோவா ஹோமினின்கள் குறித்த முதல் ஆதாரம் முதன்முதலில் சைபீரியாவிலுள்ள அல்தாய் மலைகளில் உள்ள ஒரு குகையில் 2008ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அறிவியல் செய்திகள்
சந்திரயான் -2
- சந்திரயான் -2, இந்தியாவின் இரண்டாவது சந்திரனுக்கு செல்லும் செயற்கைக்கோளில், ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) & ரோவர் (ப்ரக்யான்) என்ற மூன்று தொகுதிகள் உள்ளன. ஜூலை 09, 2019 – ஜூலை 16, 2019க்கு இடையில் விண்ணில் செலுத்தப்பட சந்திரயான் -2 செயற்கைகோள் திட்டமிடப்படுள்ளது. செப்டம்பர் 06, 2019 அன்று சந்திரனில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் & பொருளாதாரம்
ஜி.எஸ்.டி சேகரிப்பு, ஏப்ரல் 2019 ல் மிக அதிகமான வசூலை பதிவு செய்தது
- 2019 ஏப்ரலில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,13,865 கோடியாகும். 2018 ஏப்ரல் மாதத்தில் வருமானம் ரூ. 1,03,459 கோடியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வருவாயுடன் ஒப்பிடுகையில்05 % வருமானம் அதிகரித்துள்ளது. கோடியாகும். 2019 ஏப்ரல் மாதத்தில் வருமானம் ரூ. 98,114 கோடியாகும். இது மாத சராசரி வருவாயைவிட 16.05% அதிகமாகும்.
- ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிக அதிகமான வசூலை 2019 ஏப்ரல் மாதம் பதிவு செய்தது.
BASF இந்தியா பெற்றோர் நிறுவனத்துடன் வர்த்தக பிரிவுகளை மறுசீரமைக்கின்றது
- BASF இந்தியா அதன் வர்த்தக நிறுவனமான BASF Societas Europaea, ஜெர்மனியின் புதிய பெருநிறுவன மூலோபாயத்தின் அடிப்படையில் ஆறு முக்கிய பிரிவுகளில் தனது வர்த்தகத்தை மறுசீரமைத்துள்ளது.
மெட்ரோ ரெயிலுக்கு ADB நிதியுதவி செய்கிறது
- ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), 1 பில்லியன் டாலர் மும்பை மெட்ரோவுடன் தொடர்பு கொண்டுள்ளது, மேலும் போபால் மெட்ரோ மற்றும் பெங்களூரு மெட்ரோ ஆகியவற்றிற்கு நிதியளிப்பதற்காக அந்தந்த மாநில அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கூடுதலாக புதிய இந்தூர் மெட்ரோ மற்றும் சென்னை மெட்ரோ IIம் கட்டத்திற்கு உதவுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
நியமனங்கள்
- ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா – இந்திய விமானப்படையின் துணை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்
- ஏர் மார்ஷல் எஸ்கே கோஷியா VSM – இந்திய விமானப்படையின் கட்டளைத் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்
சங்கக்காரா, முதல் பிரிட்டிஷ் அல்லாத MCC தலைவராக நியமிக்கப்பட்டார்
- முன்னாள் இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரா பாராட்டுக்குரிய மேரிலேபன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைவர் அந்தோணி ரிபோர்ட் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சங்கக்காராவை அடுத்த தலைவராக அறிவித்தார். இவரது ஒரு ஆண்டு கால பதவிக்காலம் வரும் அக்டோபர் முதல் தொடங்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வருமான வரித் துறை, GSTN இடையே முரண்பாடுகளைத் தடுக்க தரவை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து
- வருமான வரித் துறை மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) இடையே இரு தரப்பு நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நிறுவனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களைவதற்கு வழிவகுக்கும்.
பாதுகாப்பு செய்திகள்
வருணா 19.1 இருதரப்பு பயிற்சி
- 2019 மே1 முதல் மே 10 வரை கோவாவில் வருணா1 இந்திய-பிரெஞ்சு கூட்டு கடற்படை பயிற்சியின் முதல் பகுதி நடைபெற்றது.
- இரண்டாவது பகுதி, வருணா2, மே மாத இறுதியில் டிஜிபோட்டியில் நடைபெற உள்ளது. 1983 ஆம் ஆண்டில் இந்த இருதரப்பு கடற்படை பயிற்சிகள் துவங்கியது இதற்கு 2001ம் ஆண்டு ‘வருணா’ என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு செய்திகள்
ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
- ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு, விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க ஹாக்கி இந்தியா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவர் 2015 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது, 2017 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூட்டில் உலகின் முதல் இடத்தை அபூர்வி பிடித்தார்
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணையான அபூர்வி சாண்டெலா முதலிடத்தையும் அஞ்சும் மௌத்கில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.