Tnpsc | Tamil Current Affairs May 06 2019





Smiley face

Tnpsc | Tamil Current Affairs May 06 2019 | Selvakumar | kalvipriyan


நடப்பு நிகழ்வுகள் – மே 5,6 2019

முக்கியமான நாட்கள்

மே 5 – உலக கை சுகாதார தினம்

  • நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரைக் காப்பது போன்றதாகும். எனவே, ஆண்டுதோறும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் எனும் உலகளாவிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. 2019 தீம் – “why infection prevention and hand hygiene are important for quality care”.

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா

தேசத்தில் முதல் முறையாக மும்பையில்ஒரு தேசம் ஒரு கார்டுதிட்டம்

  • மார்ச் மாதம் அகமதாபாத் மெட்ரோவை துவக்கி வைக்கும் போது பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ‘ஒரு தேசம் ஒரு கார்டு’ திட்டம் தேசத்தில் முதல் முறையாக மகாராஷ்டிராவின் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்.

தெலுங்கானா

சொத்து வரி வசூலில் புதிய சாதனை

  • சாதனையை முறியடிக்கும் விதமாக, 2018-19ம் நிதியாண்டில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தெலுங்கானா நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) 100% சொத்து வரியை வசூல் செய்துள்ளனர். அது மட்டுமின்றி மேலும் 25 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) 98% வரை சொத்து வரியை வசூல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா

கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மண்டல கலை விழாவில் திருநங்கை மாணவர் கலந்து கொண்டார்

  • மாநிலத்தில் முதன்முதலாக, கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மண்டல கலை விழாவில் திருநங்கை மாணவர் கலந்து கொண்டு போட்டியிட்டார். NCC இல் திருநங்கை இனத்திற்கு இட ஒதுக்கீட்டையும் ரியா கோரினார். பேஷன் டிசைனிங் தொழில் புரியும் ரியா இப்போது தனது இரண்டாவது பட்டப்படிப்பைத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் செய்திகள்

சென்னை ..டி.யின் ரோபோ பைப்லைன் கசிவுகளை பரிசோதித்தது

  • சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பைப்லைன் கசிவுகள் மற்றும் பிற குறைபாடுகளை சரிபார்க்க ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். எண்டோபாட் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோ ஐஐடி மெட்ராஸின் ஸ்டார்ட் அப் நிறுவனமான, சோலினாஸ் இன்டெக்ரிட்டி மூலம் சந்தைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

நியமனங்கள்

முன்னாள் .எம்.எஃப் அதிகாரியை பாகிஸ்தான், SBPயின் புதிய ஆளுநராக நியமித்தது

  • சர்வதேச நாணய நிதியத்திற்காக பணிபுரியும் பாகிஸ்தானிய பொருளாதார வல்லுனரான டாக்டர் பக்கிர், ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின்(SBP) ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு செய்திகள்

மேக் இன் இந்தியாதிட்டத்தின்கீழ் கடற்படை சூப்பர் கேரியரை கட்ட இந்தியா இங்கிலாந்து இடையே பேச்சுவார்த்தை

  • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டனின் எச்எம்எஸ் குயின் எலிசபெத்தைப் போன்ற ஒரு மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலை கட்ட இந்திய அரசாங்கத்துடன் இங்கிலாந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விருதுகள்

GLAAD மீடியா விருதுகள் 2019

  • 2019 GLAAD மீடியா விருதுகள் விழாவில் மடோனா, கே உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர், மாற்றத்திற்கான விருதை ஏற்றுக்கொண்டார். மோனே சிறந்த இசைக் கலைஞர் விருதை வென்றார்.

விளையாட்டு செய்திகள்

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி

  • மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பாவும், ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கோஷல் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர். இந்த கோப்பையை முதல்முறையாக சவுரவ் கோஷல் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய போட்டியில் ஒரே நேரத்தில் இரு இந்தியர்கள் மகுடம் சூடுவது இதுவே முதல்முறையாகும்.

ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை

  • போலந்து, வார்சாவில் நடைபெறும் 36 வது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் கவுரவ் சோலங்கி மற்றும் மனிஷ் கவுசிக் தங்கம் வென்றனர். இது தவிர, இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

.பி.எல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனை படைத்தார் ரியான் பராக்

  • ஐ.பி.எல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனை படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக். புது தில்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசாமைச் சேர்ந்த 17 வயதான ரியான் பராக் இந்த சாதனையை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.