Tnpsc | Tamil Current Affairs May 09 2019
நடப்பு நிகழ்வுகள் – மே 9 2019
தேசிய செய்திகள்
ஐக்கிய நாடுகள் நிதியுதவியுடன் மைசூரு ஒரு ‘நிலையான நகரமாக‘ உருவாக உள்ளது
- ஐக்கிய நாடுகளின் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு (UNIDO) ‘நிலையான நகரங்கள்’ எனும் ஒருங்கிணைந்த அணுகுமுறை திட்டத்தின் ஒரு பகுதியாக பைலட் நகரங்களில் ஒன்றாக மைசூரு நகரத்தை அடையாளம் கண்டுள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட ஒரே நகரமாக மைசூர் விளங்குகிறது. அதே நேரத்தில் விஜயவாடா, குண்டூர், போபால் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நான்கு நகரங்கள் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கேரளா
அரக்கால் அரச குடும்பத்தின் புதிய தலைவராக மரியும்மா தேர்வு
- அரக்கால் அரச குடும்பத்தின் புதிய தலைவராக எண்பது வயதான அதிராஜா மரியும்மா என்ற செரியா பிக்குன்னு பீவி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த அரச குடும்பம் கண்ணூர் பழைய பகுதி மற்றும் லட்ச்சத்தீவுகளின் சில சில தீவுகளை ஆண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
KSCDC புதிய கடை திறப்பு
- கேரள மாநில முந்திரி வளர்ச்சி கழகம் (KSCDC) ஐரிஞ்சலகுடாவின் புல்லூரில் உள்ள தனது தொழிற்சாலையில் புதிய கடையை திறந்துள்ளது. KSCDC ஆனது 18 மதிப்பு-மிக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- KAJU இந்தியா 2019, அனைத்து இந்திய முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் கூட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிக அதிக மதிப்பு மிக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதற்காக இந்த நிறுவனம் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் செய்திகள்
இந்தியாவின் புதிய பிட் வைப்பர் பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
- இந்தியாவின் ஐந்தாவது பழுப்பு நிற பிட் வைப்பர் பாம்பு சிவப்பு நிற சாயலுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசோக் கேப்டன் தலைமையிலான ஊர்வனப்பற்றிய அறிஞர்கள் குழு ஒரு புதிய இனமான சிவப்பு-பழுப்பு பிட் வைப்பர் பாம்பை, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள காடுகளில் கண்டறிந்துள்ளது. இந்த பாம்பு ஒரு தனித்துவமான வெப்ப-உணர்திறன் அமைப்பு கொண்ட விஷப் பாம்பு ஆகும்.
ஐஐடி பாம்பே ஆராய்ச்சியாளர்கள் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ நுண்செயலியை உருவாக்கியுள்ளனனர்
- இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி பாம்பே) பொறியியலாளர்கள் AJIT என்றழைக்கப்படும் ஒரு நுண்செயலியை உருவாக்கியுள்ளனர். இது இந்தியாவில் கருத்தாக்கம் செய்யப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட முதல் நுண்செயலி ஆகும். இந்தத் தயாரிப்பு, தொழில், கல்வியாளர் மற்றும் அரசாங்கத்தை ஒன்றாகக் கொண்டு வந்து பிற நாட்டு இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்க வழிவகுக்கும்.
கூகுளின் புதிய தனியுரிமை கருவிகள்
- மக்களுக்கு அதிகமான கட்டுப்பாட்டை வழங்கும் நோக்கில் கூகுள் புதிய தனியுரிமைக் கருவிகளை அறிவித்தது. அது மட்டுமின்றி நிறுவனத்தின் செயற்கை புத்திசாலித்தனமான குரல் உதவியாளர், மலிவான பிக்சல் தொலைபேசிக்கு அப்டேட்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஹோம் பொருட்களுக்கு மறுபெயரிடும் அறிவிப்புகளையும் அறிவித்தது.
வணிகம் & பொருளாதாரம்
ஜெட் ஏர்வேஸின் அலுவலக இடத்தை எச்.டி.எஃப்.சி ஏலத்தில் விட முடிவு
- அடமான கடன் வழங்கும் வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழகம் (எச்டிஎஃப்சி), கடனை திரும்ப செலுத்தாததால் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அலுவலக இடத்தை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.
ஆற்றல் பயன்பாட்டிற்காக PCRA உடன் டாபே[TAFE] ஒப்பந்தம்
- விவசாயத்தில் ஆற்றல் பயன்பாட்டை திறம்பட பயன்படுத்துவதற்காக TAFE (டிராக்ட்டர்கள் மற்றும் பண்ணை உபகரண லிமிடெட்) மற்றும் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் (PCRA) இடையே ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
ரத்தன் டாடா ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியில் முதலீடு
- டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, இந்தியாவில் EV பயன்பாடுகளை அதிகரிப்பதற்காக ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியில் குறிப்பிடப்படாத அளவு முதலீடு செய்துள்ளார். டாடா நிறுவனம் ஓலாவின் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடிடிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
L&T MRH தங்கம் வென்றது
- உலக அளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் (IES) மற்றும் இந்தியாவில் உள்ள L&T மெட்ரோ ரெயில் (ஹைதராபாத்) லிமிடெட்டிற்கு மெட்ரோ ரயிலின் மதிப்பை ஊக்கப்படுத்தியதற்காக ‘தங்கப்பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி
- சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி ஜூனியர் கலப்பு ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் மற்றும் அகுல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தபோதும், ஜெர்மன் ஜோடியான லூகா கர்ஸ்டெட் மற்றும் வனேசா சீகர் ஆகியோரிடம்4 புள்ளிகள் பின்தங்கி தங்க பதக்கத்தை தவறவிட்டனர்.
இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக பிசிசிஐ கூட்டத்தில் மாநில பெண்கள் கேப்டன் பங்கேற்பு
- மும்பையில் நடைபெற உள்ள மே 17 கூட்டத்தின் போது, சமீபத்தில் நிறைவடைந்த உள்ளூர் விளையாட்டு போட்டியை மதிப்பீடு செய்வதற்காக பெண்களின் மாநிலக் குழுக்களின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆண் சகாக்களுடன் இணைய உள்ளனர். பி.சி.சி.ஐயின், ” வருடாந்திர உள்ளூர் கேப்டன்கள் மற்றும் பயிற்யாளர்கள் கூட்டத்தில்” பெண்கள் அணியின் அனைத்து மாநில கேப்டன்களையும் அழைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.