Tnpsc | Tamil Current Affairs May 10 2019





Smiley face

Tnpsc | Tamil Current Affairs May 10 2019 | Selvakumar | kalvipriyan


நடப்பு நிகழ்வுகள் – மே 10 2019

முக்கியமான நாட்கள்

மே 10 – உலக பல்லுறுப்பு நோய் தினம்

  • மிகக்கொடுமையான பல்லுறுப்பு நோயை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 10ம் தேதி ‘உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. நமது உடலில் தோல் மட்டுமில்லாமல் மூளை, சிறுநீரகம், நுரையிரல், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள், எலும்புகளையும் தாக்கும் கொடிய நோயை பல்லுறுப்பு நோய் என்கிறோம்.

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

சக்தி, போலீஸ் ஆயுதக்கிடங்கில் புதிய ஆயுதம்

  • போலீஸ் துறையின் புதிய ஆயுதமாக ‘சக்தி’ விளங்குகிறது, இது பெண்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் காயப்படுத்துதலிருந்து பாதுகாப்பதற்காக திறம்பட உதவுகிறது. துயரத்தில் உள்ள பெண்களை காப்பாற்றுவதற்காக ‘நீல நிறத்தில் பெண்கள் [‘Women in blue’] குழு உருவாக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு

உயிரி இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க சென்னை போலீஸ் தயார்நிலை

  • சென்னை நகரில் உயிரியல் மற்றும் வேதியியல் நாசவேலைகளை சமாளிக்க சென்னை போலீசார் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) தொழில்நுட்ப உதவியுடன், நகர்ப்புற போலீஸ், அதன் ரோந்து வாகனங்களில் மொபைல் கதிரவீச்சு கண்டறிதல் அமைப்பு (MRDS) சாதனங்களை நிறுவியுள்ளது.

அறிவியல் செய்திகள்

இந்தியாவின் முதல் மெகா அறிவியல் கண்காட்சி

  • இந்தியாவின் முதல் மெகா அறிவியல் கண்காட்சி விஞ்ஞாண் சமாஜம் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. இந்தக் கண்காட்சி அணு சக்தி துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் & பொருளாதாரம்

FY19ல் வங்கி கடன்கள் 13.2% வளர்ச்சி

  • முந்தைய நிதியாண்டு வங்கி கடன்3%-த்தை ஒப்பிடும்போது, 2018-19 நிதியாண்டில் வங்கி கடன் 13.2% வளர்ச்சியுற்றுள்ளது. இந்த ஆண்டு குறிப்பாக ​​சேவைகள் மற்றும் சில்லரை துறைகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வைப்புத்தொகையின் 6.7% வளர்ச்சியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வளர்ச்சி 10% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்கரோவின் புதிய பிராண்ட் தூதராக அமீர் கான் அறிவிக்கப்பட்டார்

  • காலணி பிராண்டாக வால்கரோ 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வால்கரோவின் புதிய பிராண்ட் தூதராக அமீர் கான் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.

நியமனங்கள்

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம்

  • இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் . அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டியின் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் பெயரை செயற்குழுவுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
  • அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் தனது பணியை தொடங்க இருக்கிறார். அவர் 3 ஆண்டு காலம் இந்த பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாசீனா இடையே இந்திய மிளகாய் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்

  • இந்திய வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வதவான் மற்றும் சீன பொது நிர்வாகத் துறை அமைச்சர், லீ குவாவும் புதுடில்லியில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தவும் வர்த்தகம் மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு இந்திய மிளகாயை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

பாதுகாப்பு செய்திகள்

இந்திய கடற்படை கப்பல்கள் கொல்கத்தா, சக்தி கூட்டுப்பயணம்

  • இந்திய கடற்படை கப்பல்கள் கொல்கத்தா மற்றும் சக்தி ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கப்பல்களுடன் தென் சீனக் கடலில் கூட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப்பயணத்தின் இரண்டாவது கட்டம் 09 மே முதல் 12 மே 2019 வரை தென் சீனக் கடலில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கட்டம் II முடிந்தவுடன், இந்திய கடற்படை கப்பல்கள் கொல்கத்தா மற்றும் சக்தி உட்பட அனைத்து பங்குபெறும் கப்பல்களும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX) 2019ல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

விருதுகள்

ஆண்டின் சிறந்த சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை லூக் ஷா வென்றார்

  • மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து ஆட்டக்காரர் லூக் ஷா 2018-19 ஆண்டின் சிறந்த சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை வென்றார். சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை இவர் பெறுவது முதல்முறையாகும்.