Tnpsc/11 std/ Tamil-2

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

ஐங்குறுநூறு

நூல் குறிப்பு:

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • அடி எல்லை = 3 முதல் 6
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் என மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.
  • மருதத்திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • முல்லைதிணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • இந்நூலை தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
  • தொகுப்பித்தவர் = சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.

கபிலர்:

  • இவர், “புலனழுக் கற்ற அந்தணாளன்” எனப் புகழப்பட்டவர்.
  • வள்ளல் பாரியின் அவைகளப் புலவர்.
  • குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறு நூற்றில் குருஞ்சித்தினை பாடகள் நூறு, பதிற்றுபத்தில் ஏழாம் பத்து, கலித்தொகையில் குறுஞ்சி கலியில் உள்ள 29 பாடல்கள் முதலியன இவர் பாடியவை.

சொற்பொருள்:

  • தோகை – மயில்
  • வதுவை – திருமணம்

இலக்கணக்குறிப்பு:

  • இருந்ததோகை – பெயரெச்சம்
  • மருள் – உவமவுருபு
  • இழையணி – வினைத்தொகை
  • நாட – அண்மைவிளி
  • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
  • வாழியர் – வியங்கோள் வினைமுற்று
  • நன்மனை – பண்புத்தொகை

திருக்குறள்

நூல்குறிப்பு:

  • “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள்.
  • திருக்குறள் “தமிழர் திருமறை” ஆகும்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.
  • பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களையும் கொண்டுள்ளது.
  • காமத்துப்பால் 25 அதிகாரங்களையும், களவியல், கற்பியல் என்ற இரன்டு இயல்களையும் உடையது.

சொற்பொருள்:

அமரருள் – தேவர் உலகம்உய்க்கும் – செலுத்தும்
ஆரிருள் – நரகம்காக்க – கடைப்பிடித்து ஒழுகுக
செறிவு – அடக்கம்சீர்மை – விழுப்பம், சிறப்பு
தோற்றம் – உயர்வுமாண – மிகவும்
பணிதல் – அடங்குதல்ஒருமை – ஒருபிறப்பு
எழுமை – ஏழு பிறப்புஏமாப்பு – பாதுகாப்பு
சோகாப்பர் – துன்புறுவர்வடு – தழும்பு
கதம் – சினம்செவ்வி – தகுந்த காலம்
தாளாற்றி – மிக்க முயற்சி செய்துதந்த – ஈட்டிய
வேளாண்மை – உதவிபுத்தேள் உலகம் – தேவர் உலகம்
திரு – செல்வம்அற்று – போலும்
இடம் – செல்வம்ஒல்கார் – தளரார்
கடன் – முறைமைகேடு – பொருள்கேடு
கூகை – கோட்டான்இகல் – பகை
தகர் – ஆட்டுக்கிடாய்பொள்ளென – உடனடியாக
செறுநர் – பகைவர்சுமக்க – பணிக
மாற்றான் – பகைவர்பீலி – மயில்தோகை
சாகாடு – வண்டிஇறும் – முரியும்

இலக்கணக்குறிப்பு:

அடங்காமை – எதிர்மறைத்தொழிற்பெயர்ஆரிருள் – பண்புத்தொகை
காக்க – வியங்கோள் வினைமுற்றுஅதனினூஉங்கு – இன்னிசை அளபெடை
அடங்கியான் – வினையாலணையும் பெயர்மலையினும் – உயர்வு சிறப்பும்மை
எல்லார்க்கும் – முற்றும்மைபணிதல் – தொழிற்பெயர்
உடைத்து – குறிப்பு வினைமுற்றுஎழுமை, ஐந்து – ஆகுபெயர்
காவாக்கால் – எதிர்மறை வினையெச்சம்நன்று – பண்புப்பெயர்
அடங்கல் – தொழிற்பெயர்ஆற்றுவான் – வினையாலணையும் பெயர்
உலகு – இடவாகுபெயர்தந்தபொருள் – பெயரெச்சம்
பொருட்டு – குறிப்பு வினைமுற்றுபெறல் – தொழிற்பெயர்
அறிவான் – வினையாலணையும் பெயர்வாழ்வான் – வினையாலணையும் பெயர்
மற்றையான் – குறிப்பு வினையாலணையும் பெயர்பேரறிவு – பண்புத்தொகை
தப்பாமரம் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்பெருந்தகை – பண்புத்தொகை
கடனறிகாட்சி – வினைத்தொகைஒல்கார் – வினையாலணையும் பெயர்
இல்பருவம் – பண்புத்தொகைஆதல் – தொழிற்பெயர்
கேடு, கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர்பகல்வெல்லும் – ஏழாம் வேற்றுமைத்தொகை
இகல்வெல்லும் – இரண்டாம் வேற்றுமைத்தொகைஒழுகல் – தொழிற்பெயர்
அருவினை – பண்புத்தொகைசெயின் – வினையெச்சம்
கருதுபவர் – வினையாலணையும் பெயர்ஒடுக்கம் – தொழிற்பெயர்
பொருதகர் – வினைத்தொகைஒள்ளியவர் – வினையாலணையும் பெயர்
சுமக்க – வியங்கோள் வினைமுற்றுஒக்க – வியங்கோள் வினைமுற்று
வினைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகைசெயல் – வியங்கோள் வினைமுற்று
செல்வார் – வினையாலணையும் பெயர்அறியார் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒழுகான் – முற்றெச்சம்பெய்சாகாடு – வினைத்தொகை
சாலமிகுந்து – உரிச்சொற்றொடர்கொம்பர் – ஈற்றுப்போலி
ஈக – வியங்கோள் வினைமுற்றுஆகாறு – வினைத்தொகை
கேடு – முதனிலை திரிந்த தொழிற்பெயர்வாழ்க்கை – தொழிற்பெயர்

சீவக சிந்தாமணி

நூல் குறிப்பு;

  • சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள்.
  • இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
  • இவர் சோழ நாட்டினர். சமணத் துறவி.
  • இவர் நரி விருத்தம் என்ற நூலையும் படைத்துள்ளார்.
  • சீவக சிந்தாமணிக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு.
  • இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது.
  • இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் நூல்.
  • இந்நூலிற்கு உரை கண்டவர் = உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
  • சீவகன் வரலாற்றை கூறுவதால் இந்நூல் சீவக சிந்தாமணி எனப் பெயர் வழங்கப்படுகிறது.

காந்தருவதத்தையார் இலம்பகம்:

  • வெள்ளி மலையின் வேந்தன் கலுழவேகன்.
  • அவன் மகள் காந்தருவதத்தை.
  • காந்தருவதத்தையின் தோழி வீணாபதி
  • யாழ்போர் நடந்த இடம் இராசமாபுரம்
  • காந்தருவதத்தை சீதத்தன் என்னும் வணிகனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
  • சீவகனின் நண்பன் நபுலன்
  • போட்டியில் சீவகன் காந்தருவதத்தையை வென்று அவளை மணம் முடித்தான்.

சொற்பொருள்:

சிலை – வில்பொழில் – சோலை
குரங்கின – வளைந்தனபறவை – கின்னரமிதுனம் என்னும் பறவை
கருங்கொடி – கரிய ஒழுங்குமிடறு – கழுத்து
கொடி – ஒழுங்குகடி – விளக்கம்
எயிரு – பல்விம்மாது – புடைக்காது
எரிமலர் – முருக்கமலர்உளர – தடவ
இவுளி – குதிரைகால் – காற்று
நுனை – கூர்மைகடம் – காடு
பிணை – பெண்மான்மாழ்கி – மயங்கி
இழுக்கி – தப்பிஎழினி – உறை
மொய்ம்பு – வலிமைமடங்கல் – சிங்கம்
கணிகை – பொதுமகள்கொல்லை – முல்லைநிலம்
குரங்கி – வளைந்துதூமம் – அகிற்புகை
நிலமடந்தை – பெற்ற தாய்இருவிசும்பு – செவிலித்தாய்
கைத்தாய் – செவிலித்தாய்ஓதி – சொல்லி
புரி – முறுக்குபத்தர் – யாழின் ஓர் உறுப்பு

இலக்கணக்குறிப்பு:

எழீஇ – சொல்லிசை அளபெடைசிறுநுதல் – அன்மொழித்தொகை
பாவை – உவமை ஆகுபெயர்சிலைத் தொழில் – ஆறாம் வேற்றுமைத்தொகை
கருங்கொடி – பண்புத்தொகைஇருங்கடல் – பண்புத்தொகை
கடிமிடறு – உரிச்சொற்றொடர்பவளச்செவ்வாய் – உவமைத்தொகை
விரிமலர் – வினைத்தொகைகோதை – உவமை ஆகுபெயர்
எரிமலர் – உவமத்தொகைசெவ்வாய் – அன்மொழித்தொகை
ஒப்ப – உவமஉருபுஇன்னரம்பு – பண்புத்தொகை
விடுகணை – வினைத்தொகைதிண்டேர் – பண்புத்தொகை
வடிநுனை – வினைத்தொகைஅடுதிரை – வினைத்தொகை
கழித்தவேல் – பெயரெச்சம்அன்ன – உவமஉருபு
நீக்கி – வினையெச்சம்நெடுங்கண் – பண்புத்தொகை
தடங்கண் – உரிச்சொற்றொடர்சுரந்து, முதிர்ந்து – வினையெச்சம்
நின்றாள் – வினையாலணையும் பெயர்போக, நடக்க – வியங்கோள் வினைமுற்று
கமழ் ஓதி – அன்மொழித்தொகைகாளை – உவம ஆகுபெயர்

சீறாப்புராணம்

நூல் குறிப்பு:

  • சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
  • சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம்(பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம்(செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம்(செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.
  • பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.
  • மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.
  • சீறாப்புரானத்தில் நபிகளின் வாழ்வு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
  • பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அது “சின்ன சீறா” என வழங்கப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு:

  • உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
  • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
  • பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.

விடமீட்ட படலம்:

  • நபிகளின் நண்பர் = அபூபக்கர்
  • இருவரும் தங்கி இருந்த இடம், தௌர் மலைக்குகை.
  • குகையில் இருந்த ஒரு பொந்தின் வழியாக வந்த பாம்பு அபூபக்கரின் உள்ளங்காலை தீண்டியது.
  • அபூபக்கர் மயக்கம் அடையும் நிலையில் நபிகள் உறக்கம் களைந்து எழுந்து நடந்ததை அறிந்து கொண்டார்.
  • நபிகள் தனது எச்சில் தடவி அபூபக்கரை மீட்டார்.

சொற்பொருள்:

கான் – காடுநகம் – மலை
சிரம் – தலைமுழை  -  குகை
வளை – புற்றுபாந்தள் – பாம்பு
பிடவை – துணிவெருவி – அஞ்சி
பொறி – புள்ளிகள்உரகம், பணி – பாம்பு
பருவரல் – துன்பம்நித்திரை – தூக்கம்
கடி – மணம்காந்தி – பேரொளி
நறை – தேன்பரல் – கல்
கெந்தம் – பற்கள்வேகம் – சினம்
சென்னி – தலைமரைமலர் – தாமரை மலர்
கோடிகம் – ஆடைகால் – காற்று
கான்று – உமிழ்ந்துபன்னகம் – பாம்பு
வரை – மலைபுடை – வளை, பொந்து
முரணி – மாறுபட்டுபுதியன் – இறைவன்

இலக்கணகுறிப்பு:


செழுந்துயில் – பண்புத்தொகைஇகலவர் – வினையாலணையும் பெயர்
மலைமுழை -  ஏழாம் வேற்றுமைத்தொகைவெருவி, கிழித்து – வினையெச்சம்
போர்த்த பிடவை – பெயரெச்சம்இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
அறிகிலார் – எதிர்மறை வினையாலணையும் பெயர்மதிமுகம் – உவமத்தொகை
கடிநறை – உரிச்சொற்றொடர்மலர்ந்தாள் – உவமைத்தொகை
மென்மலர் – பண்புத்தொகைவல்லுடல் – பண்புத்தொகை
படுவிடம் – வினைத்தொகைபரந்து, தாக்கி – வினையெச்சம்
என்ன – உவமஉருபுமதி – உவம ஆகுபெயர்
அருமறை – பண்புத்தொகைநின்றோன் – வினையாலணையும் பெயர்
நினைத்தவர் - வினையாலணையும் பெயர்வெவ்விடம் – பண்புத்தொகை