Tnpsc/11/Tamil-3

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

மனோன்மணீயம்

நூல் குறிப்பு;

  • நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது இந்நாடகம்.
  • இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
  • எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
  • அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு.
  • இந்நாடகம் 5 அங்கங்களையும் 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  • இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:


  • பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர்.
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மையார்.
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் ஞானாசிரியர் = கோடாக நல்லூர் சுந்தர சுவாமிகள்
  • இவர் இயற்றிய நூல்கள் = நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி.
  • அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரது நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.

கதை:

  • மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
  • அமைச்சர் குடிலன் வஞ்சகம் மிக்கவன்.
  • ஜீவகன் மதுரையை விட்டு திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு தங்கினான்.
  • சுந்தர முனிவர் கோட்டையில் தனக்கு ஒரு அறை பெற்று அதில் சுரங்க வழியை அமைத்தார்.
  • ஜீவகனின் மகள் மனோன்மணி. இவள் சேர நாட்டு அரசன் புருடோத்தமனை கனவில் கண்டு காதல் கொள்கிறாள்.
  • அமைச்சன் குடிலனின் மகன் பலதேவனை, சேர அரசனிடம் தூது அனுப்பினான் மன்னன்.
  • பலதேவனின் முறையற்ற பேச்சால் சினம் கொண்ட சேர அரசன் பாண்டிய நாடு மீது போர் தொடுத்தான்.

சொற்பொருள்:

  • செந்தழல் – வேள்வியில் மூட்டுகிற நெருப்பு
  • வானோர் – தேவர்கள்
  • இந்தனம் – விறகு
  • உகம் – யுகம்
  • திருந்தலீர் – பகைவர்கள்
  • செயமாது – வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
  • காயம் – உடம்பு

இலக்கணக்குறிப்பு:

  • செந்தழல் – பண்புத்தொகை
  • ஆகுக – வியங்கோள் வினைமுற்று
  • போர்க்குறி – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • கனங்கணம் – அடுக்குத்தொடர்

குயில் பாட்டு

ஆசிரியர் குறிப்பு;

  • பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
  • தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
  • இந்தியா, விஜயா என்னும் இதழ்களை வெளியிட்டார்.
  • சுதேசமித்திரன் என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சொற்பொருள்:

  • வாரி – கடல்
  • கோற்றொடியார் – பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
  • குக்குவென – நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
  • பண்ணை – வயல்வெளி
  • வேய் – மூங்கில்

இலக்கணக்குறிப்பு:

  • கானப்பறவை – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரோசை – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • பெருங்கடல் – பண்புத்தொகை
  • பழகு பாட்டு – வினைத்தொகை

அழகர் கிள்ளைவிடு தூது

தூது:

  • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.
  • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பா
  • தூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படும்.
  • தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.

அழகர் கிள்ளைவிடு தூது:

  • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
  • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
  • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
  • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.

ஆசிரியர் குறிப்பு:

  • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
  • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
  • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.

சொற்பொருள்:

அரி – சிங்கம்அரன் – சிவன்
அவுணன் – இரணியன்காயம் – உடம்பு
சேனை – சைனியம்பண்ணும் தொழில் – காத்தல் தொழில்
படி – உலகம்பாதவம் – மருத மரம்
பெண் – அகலிகைபாரம் – பளு
நாரி – சீதாப்பிராட்டிவேலை – கடல்

இலக்கணக்குறிப்பு:

  • வன்காயம் – பண்புத்தொகை
  • அரைத்திடும் சேனை – எதிர்காலப் பெயரெச்சம்
  • மலர்க்கால் – உவமைத்தொகை
  • வன்கானகம் – பண்புத்தொகை

கலிங்கத்துப்பரணி

பரணி:

  • பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர்.
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற
மாண வனுக்கு வகுப்பது பரணி
--- இலக்கண விளக்கப் பாட்டியல்
  • பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றார் உ.வே.சா
  • தோற்றவர் பெயரில் பரணி நூல் வழங்கப்பெறும்.

கலிங்கத்துப்பரணி:

  • தமிழின் முதல் பரணி நூல் இது.
  • இந்நூல் 509 தாழிசைகள் கொண்டது.
  • இந்நூலை ஒட்டக்கூத்தர், “ தென்தமிழ் தெய்வப்பரணி” என்று சிறப்பித்துள்ளார்.
  • இன்றைய ஒரிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.
  • அந்நாட்டின் மீது போர் தொடுக்க முதல் குலோத்துங்கச்சோழன் தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் என்பவரை அனுப்பி வெற்றிபெற்றதை இந்நூல் கூறுகிறது.

செயங்கொண்டார்:

  • கலிங்கத்துப்பரணி பாடியவர் செயங்கொண்டார்.
  • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அவைப்புலவர்.
  • இவரின் காலம் 11ஆம் நூற்றாண்டு அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
  • பலபட்டடைச் சொக்கநாதர் இவரைப் “பரணிக்கோர் செயங்கொண்டார்” எனப் புகழ்ந்துள்ளார்.

சொற்பொருள்:

வரை – மலைசேர – முற்றும்
மாசை – பழிப்பைஎற்றி – உண்டாக்கி
அரை – இடுப்புகலிங்கம் – ஆடை
அமணர் – சமணர்முந்நூல் – பூணூல்
சிலை – வில்அரிதனை – பகை
மடி – இறந்தசயத்தம்பம் – வெற்றித்தூண்
கடகரி – மத யானைவயமா – குதிரை
அபயன் – முதல் குலோத்துங்கச்சோழன்வண்டையார் கோன் – கருணாகரத் தொண்டைமான்

இலக்கணக்குறிப்பு:


மாசை எற்றி – இரண்டாம் வேற்றுமை விரிவன்தூறு – பண்புத்தொகை
போந்து – வினையெச்சம்களம் கண்டோம் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
எரிந்து, நாட்டி – வினையெச்சம்பறித்தமயிர் – பெயரெச்சம்