முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ்:
- கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
- பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.
- ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
- பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.
குமரகுருபரர்:
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
- தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
- பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சிவகாமசுந்தரி.
- பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
- திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.
- நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.
சொற்பொருள்:
புலராமே – வறண்டு விடாமல் | கம்முதல் – குரல் தேய்ந்து மங்குதல் |
விரல் – பெருவிரல் | சிவவாமே – சிவக்காமல் |
அஞ்சனம் – கண்மை | கலுழ்தல் – அழுதல் |
தாள் – கால் | வயித்தியநாதபுரி – புள்ளிருக்குவேளூர் |
இலக்கணக்குறிப்பு:
மெல்லிதழ் – பண்புத்தொகை | மென்குரல் – பண்புத்தொகை |
நுண்டுளி – பண்புத்தொகை | கண்மலர் – உருவகம் |
பொழி திருமுகம் – வினைத்தொகை | ஆடுக – வியங்கோள் வினைமுற்று |
பெத்தலகேம் குறவஞ்சி
குறவஞ்சி:
- குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும்.
- உலாப் போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி காதல் கொண்டு, அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்து குறி கேட்பதும், குறத்தி தலைவியின் கையைப் பார்த்து கைக்குறி, முகக்குறி, பல்லிசொல் போன்றவற்றை கூறுவது போல் அமையப்பெறும்.
- குறவஞ்சி நாடக வடிவில் அமையப்பெறும்.
நூல் குறிப்பு:
- பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
- இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
ஆசிரியர் குறிப்பு:
- இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
- பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
- ஊர் = திருநெல்வேலி
- தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
- தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
- நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
சொற்பொருள்:
- ஏகன் – இறைவன்
- தற்பரன் – இறைவன்
இலக்கணக்குறிப்பு;
- அருந்தவம் – பண்புத்தொகை
- தானதர்மம் – உம்மைத்தொகை
- பேய்க்கணங்கள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- அமைந்த, கொடுத்த – பெயரெச்சம்
மறுமலர்ச்சிப் பாடல்கள் - எந்நாளோ?
ஆசிரியர் குறிப்பு:
- “பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துடித்தெழுந்தே” என்பார் பாவேந்தர்.
- பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
- ஊர் = புதுச்சேரி
- தமிழ்நாட்டு இரசூல் கம்சதோவ் எனப் பாராட்டப்பட்டவர்.
- நூல்கள் = குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற பல.
- “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்ற அவரின் தமிழ் வாழ்த்துப் பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டு வருகிறது.
- குயில் என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
- “புதுவைக் குயில்” என்றும் இவரை அழைப்பர்.
சொற்பொருள்:
- உன்னதம் – உயர்வு
- இமமலை – இமயமலை
- கீர்த்தி – புகழ்
- பண் – பாடல்
இலக்கணக்குறிப்பு:
- அருந்தமிழ் - பண்புத்தொகை
- புதுக்குநாள் – வினைத்தொகை
- பகர்வார் – வினையாலணையும் பெயர்
- தண்கடல் – பண்புத்தொகை
பூக்கட்டும் புதுமை
முடியரசன்:
- பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர்.
- ஊர் = மதுரை
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
- இயற்பெயர் = துரைராசு
- தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
- தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
- காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
- நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை.
- பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது.
- பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
சொற்பொருள்:
- ஈர்க்கின்ற – கவர்கின்ற
- புலம் – அறிவு
- புல்லடிமை – இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்
இலக்கணக்குறிப்பு:
- பூக்கின்ற, ஈர்க்கின்ற – பெயரெச்சம்
- செங்கதிர் – பண்புத்தொகை
- புல்லடிமை – பண்புத்தொகை
- காகிதப்பூ – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
விடுதலை விளைத்த உண்மை
கண்ணதாசன்;
- “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்.
- பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
- பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
- இயற்பெயர் = முத்தையா
- இதழ்கள் = தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன்
சொற்பொருள்:
- தட்டின்றி – குறையின்றி
- மூவாத – மூப்படையாத
- மீன் – விண்மீன்
- தளை – விலங்கு
- வதிபவர் – வாழ்பவர்
- மிடிமை – வறுமை
தளை
சிற்பி பாலசுப்பிரமணியம்:
- இவரின் ஊர் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி
- பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள்
- கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
- பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர்.
- கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை.
- உரைநடை நூல்கள் = இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும், ஒரு கிராமத்து நதி.
- “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
- தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.
கண்
நா.காமராசன்:
- பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
- பெற்றோ = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
- மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர்.
- கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
- இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.
- படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.
இலக்கணக்குறிப்பு:
- பகல்பூக்கள் – ஏழாம் வேற்றுமைத்தொகை
- புருவக்கொடி – உருவகம்
- மனப்பறவை – உருவகம்
தண்ணீர் வங்கிகள்
ந.கருணாநிதி:
- கவிஞர் ந.கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர்.
- பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
- பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
- இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.
- இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்
இலக்கணக்குறிப்பு:
- இணையிலாப் பசுமை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- இலா – இடைக்குறை
- வான்மழை – ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை