Tnpsc/11/Tamil-5
வழிபாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்
திருநாவுக்கரசர்:
- சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
- அவற்றுள் 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது.
- திருநாவுக்கரசர் தென்னார்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார்.
- பெற்றோர் = புகழனார், மாதினியார்,இவரின் தமக்கையார் = திலகவதியார்
- இயற்பெயர் = மருள் நீக்கியார்
- இவரின் வேறு பெயர்கள் = வாகீசர், அப்பர்
- சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைத் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர்.
- இவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் திருவாக்கைத் தந்தவர்.
- காலம் = கி.பி.ஏழாம் நூற்றாண்டு
சொற்பொருள்:
- நமன் – எமன்
- நடலை – இறப்பு
- பிணி – நோய்
- ஏமாப்பு – பாதுகாப்பு
திருமால்
ஆண்டாள்:
- ஆண்டாள் அருளியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
- திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்பர்.
- நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
- பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- பாவை என்பது இருமடியாகு பெயர்.
- திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.
- இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
- இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்.
சொற்பொருள்:
- ஆழி – கடல், சக்கரம்
- சார்ங்கம் – வில்
- பாழி – வலிமை
இலக்கணக்குறிப்பு;
- கரவேல் – எதிர்மறை ஏவல் வினைமுற்று
- உதைத்த – பெயரெச்சம்
இயேசுபிரான்
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை:
- இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
- பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
- ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்
- படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணியமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
- இரட்சணியமனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
- இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர்.
சொற்பொருள்:
- துசங்கட்டுதல் – விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.
இலக்கணக்குறிப்பு:
- பெருங்குணம் – பண்புத்தொகை
- கட்டும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
புத்தர்
புத்தமித்திரர்:
- வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
- வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
- இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.
சொற்பொருள்:
- இருவினை – நல்வினை, தீவினை
- பரவுதும் – யாம் தொழுதும்
- ஓங்குநீர் – கடல்
- முப்பகை – காமம், வெகுளி, மயக்கம்
- முனிவர் – துறவி
இலக்கணக்குறிப்பு:
- பரவுதும் – தன்மைப் பன்மை வினைமுற்று
- நிழல் போதி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- நீங்கா இன்பம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- யாவரும் – முற்றும்மை
- வீற்றிருந்த – பெயரெச்சம்
- வினைப்பிணி – உருவகம்