Tnpsc/12/Tamil-1
கடவுள் வாழ்த்து
ஆசிரியர் குறிப்பு:
- கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.
- இவரின் காலம் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு.
- கம்பரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் என்பார் ஆதரித்து வந்தார்.
- “கவிச்சக்ரவர்த்தி” எனப் போற்றப்படுபவர் கம்பர்.
- “கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்னும் தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.
- நூல்கள் = சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி.
நூற் குறிப்பு:
- வடமொழியில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை தழுவி, தமிழில் கவிப் பேரரசர் கம்பர் இயற்றியது கம்பராமாயணம்.
- கம்பரால் இயற்றப்பட்டதால் “கம்பராமாயணம்” என வழங்கப்படுகின்றது.
- கம்பர் தம்நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”
சொற்பொருள்:
- ஒன்றேயென்னின் – ஒன்றே என்று கூறின்
- நம்பி – இறைவன்
இலக்கணக்குறிப்பு:
- வாழ்க்கை – தொழிற்பெயர்
- அம்மா – வியப்பிடைச்சொல்
மொழி வாழ்த்து
நூல் குறிப்பு:
- தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
- 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
- தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
- தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
- பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
- இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
- கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
- “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
- கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
- தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்நூலை இயற்றினார்.
- இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.
சொல்பொருள்:
- நண்ணும் – கிட்டிய
- இசைத்த – பொருந்தச் செய்த
- வண்ணம் – ஓசை
- பிறமொழி – வேற்றுமொழி
- வண்மை – வளமை
இலக்கணக்குறிப்பு:
- அசைத்த, இசைத்த – பெயரெச்சம்
- உலகம் – இடவாகுபெயர்
- திருந்துமொழி – வினைத்தொகை
- வாழிய – வியங்கோள் வினைமுற்று
- அடிவாழ்த்துவம் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- வாழ்த்துவம் – தன்மைப் பன்மை வினைமுற்று
நாட்டு வாழ்த்து
நூல் குறிப்பு:
- “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் கவிஞரின் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது.
- கவிஞர் சத்தியாகிரகத் தொண்டர்கள் பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர் குறிப்பு:
- இயற் பெயர் = இராமலிங்கனார்
- பெற்றோர் = வெங்கடராமன், அம்மணியம்மாள்
- இவற் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் சிறந்தவர்.
- இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தார்.
- தமிழக அரசு இவரை சட்ட மேலவை உறுபினராக நியமித்தது.
- நடுவண் அரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
சொற்பொருள்:
- வாடின – தளர்ந்த
- ஓடின – மறைந்தன
இலக்கணக்குறிப்பு:
- தினந்தினம் – அடுக்குத்தொடர்
- வந்தவர் – வினையாலணையும் பெயர்
- போனவர் – வினையாலணையும் பெயர்
- இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
- யாரையும் – முற்றும்மை
புறநானூறு
நூல் குறிப்பு;
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- இந்நூலை புறப்பாட்டு, புறம் எனவும் அழைப்பர்.
- நானூறு பாடல்கள் உள்ளன.
- இதனை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
- இந்நூலின் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
- ஜி.யு.போப் இந்நூலின் சில பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு:
- நரிவெரூஉத் தலையார்.
- இவரால் பாடப்பட்டவன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை ஆவான்.
- இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும், திருவள்ளுவமாலையிலும் உள்ளன.
சொற்பொருள்:
- கயன்முள் – மீன்முள்
- திரைகவுள் – சுருக்கங்களை உடைய கன்னம்
- கணிச்சி – மழுவாயுதம்
- திறல் – வலிமை
- ஒருவன் – எமன்
- ஆறு – நெறி
இலக்கணக்குறிப்பு:
- கயன்முள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- திரைகவுள் – வினைத்தொகை
- கூர்ம்படை – பண்புத்தொகை
- ஆற்றீர் – முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
- படூஉம் – இசைநிறை அளபெடை
அகநானூறு
நூல் குறிப்பு:
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- அடி எல்லை = 13 முதல் 31
- நானூறு பாடல்கள் உள்ளன.
- தொகுத்தவர் = மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருதிரசன்மனார்
- தொகுபித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- வேறுபெயர்கள் = அகம், நெடுந்தொகை
- இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன.
- முதல் 120 பாடல்கள், “களிற்றியானை நிறை” எனப்படும்.
- அடுத்த 180 பாடல்கள், “மணிமிடை பவளம்” எனப்படும்.
- கடைசி 100 பாடல்கள் “நித்திலக்கோவை” எனப்படும்.
- 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
- 2,8 என வரும் பாடல்கள் = குறிஞ்சித்திணை பாடல்கள்
- 4,14 என வரும் பாடல்கள் = முல்லைதினைப் பாடல்கள்
- 6,16 என வரும் பாடல்கள் = மருதத்திணை பாடல்கள்
- 10,20 என வரும் பாடல்கள் = நெய்தல் திணை பாடல்கள்.
சொற்பொருள்:
- பசை – ஓட்டும் பசை(ஈரம்)
- பச்சை – தோல்
- மாச்சிறைப் பறவை – கரிய சிறகுகள் உடைய வௌவால்
- முதுமரம் – பழையமரம்
- முகை – மொட்டு
- கடிமகள் – மணமகள்
- கதப்பு – கூந்தல்
- தண்பதம் – குளிர்பதம்
இலக்கணக்குறிப்பு:
- உயர்சினை – வினைத்தொகை
- சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பகலுறை – ஏழாம் வேற்றுமைத்தொகை
- முதுமரம் – பண்புத்தொகை
- கடிமகள் – உரிச்சொற்றொடர்
- புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி