Tamil Reading 6th std | Kalvipriyan-1
kalvipriyan Online Test January 2018
Tokyo is the capital of Japan.
London is the capital city of England.
இராமலிங்க அடிகள்:
ஆசிரியர் குறிப்பு:
.
இராமலிங்க அடிகளார் “திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்.
கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர்.
பெற்றோர்: இராமையா – சின்னம்மையார்
காலம்: 5.10.1823 – 30.01.1874
நூல்கள்:
.
ஜீவகாரூன்ய ஒழுக்கம்
மனுமுறை கண்ட வாசகம்
இவர் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு:
.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
மத நல்லிணக்கத்திற்கு “சன்மார்க்க சங்கம்”, உணவளிக்க “அறச்சாலை”, அறிவு நெறி விளங்க “ஞான சபை” நிறுவினார்.
திருக்குறள் - அன்புடைமை
சொற்பொருள்:
.
புன்கணீர் = துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு = எலும்பு
வழக்கு = வாழ்க்கை நெறி
நண்பு = நட்பு
மறம் = வீரம், கருணை
என்பிலது = எலும்பில்லாதது(புழு)
பிரித்து எழுதுக:
.
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
வன்பாற்கண் = வன்பால் + கண்
ஆசிரியர் குறிப்பு:
.
இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவார்.
இதை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
சிறப்பு பெயர்:
.
தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
நூல் குறிப்பு:
.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
133 அதிகாரங்கள் உள்ளன.
அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
.
உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:
.
கிறித்து ஆண்டு(கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
2014 + 31 = 2045
உ.வே.சா
.
உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
இயற்பெயர் = வேங்கடரத்தினம்
ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவரின் ஆசிரியர் வைத்த பெயர் = சாமிநாதன்
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
இவரின் தந்தை = வேங்கடசுப்பையா
காலம் = 19.02.1855 முதல் 28.04.1942
1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
கடைசிவரை நம்பிக்கை
.
இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய “டென் லிட்டில் பிங்கர்ஸ்” என்ற தொகுப்பில் உள்ளது.
சடகோ சசாகி, 11 வயது சிறுமி.
ஜப்பானில் ஹிரோஷிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
சடகோவின் தோழி சிசுகோ.
தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள்.
ஜப்பானியர் வணங்கும் பறவை, கொக்கு.
காகிதத்தால் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் “ஒரிகாமி” என்று கூறுவர்.
1955, அக்டோபர் 25ம் நல்ல சடகோ இறந்தாள்.
மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிகையை ஆயிரம் ஆக்கினர்.
சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
அதன் பெயர் “குழந்தைகள் அமைதி நினைவாலயம்”.
நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம்,
“இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!
உலகத்தில் அமைதி வேண்டும்” |
நாலடியார்
சொற்பொருள்:
.
அணியர் = நெருங்கி இருப்பவர்
என்னாம் = என்ன பயன்?
சேய் = தூரம்
செய் = வயல்
அனையார் = போன்றோர்
நூல் குறிப்பு:
.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
நானூறு பாடல்களை கொண்டது.
“நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது.
சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது.
பாரத தேசம்
சொற்பொருள்:
.
வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
உழுபடை = விவசாய கருவிகள்
தமிழ்மகள் = ஔவையார்
பாடல் குறிப்பு:
.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் ஔவையார்.
தமிழ்மகள் எனப்படுபவர் ஔவையார்.
ஆசிரியர் குறிப்பு:
.
காலம்: 11.12.1882 – 11.09.1921
“பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றவர் கவிமணி.